Running News

Tuesday 18 April 2017

ஒரு எளிய அஞ்சல் ஊழியனின் ஐயங்கள்...




     இதுவும்  WHATSAPP-ல் வந்த தகவலே. நாம்தான் பெரிதாக எழுதி அனைவருடைய பொறுமையை சோதித்து வயிற்றெரிச்சலை கட்டிக் கொள்கிறோம் என நினைத்தோம். இப்பொழுது நமக்கு ஒரு துணை கிடைத்த சந்தோசத்தில் இதை பகிர்ந்து கொள்கிறோம். IPPB நம்மை முழுமையாக  முழுங்க காத்திருக்கிறது என்ற எச்சரிக்கை இதில் இல்லை என்றாலும் சூழ்நிலையை தெளிவாக சொல்லி இருக்கிற இவரை பாராட்டுவோம்.  

  "நண்பர்களேநாம் ஒரு தீவிரமான ஒடுக்குமுறையை வெறும்கிண்டல்கள் வழியே நிராசையான பெருமூச்சுகள் வழியே வெற்றுவார்த்தைகளின் வழியே கடந்து சென்று கொண்டிருக்கிறோமோஎன்ற சந்தேகம் எழுகிறதுஅரசும் நிர்வாகமும் திட்டமிட்டேநம்முடைய அடிப்படை நியாயங்களை நீர்த்துப் போகச் செய்வதாகஎண்ணம் தோன்றுகிறதுபொதுவாக இதை கட்டாயம் படியுங்கள்என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாதுஆனால் முதலும்கடைசியுமாக தயவுசெய்து இதை தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே.

 அஞ்சல் ஊழியர்கள் என இங்கு குறிப்பிடுவது MTS, Postmen,Postwomen,PA,MO,CO,OA,DSM,SA,GDS MD,GDS BPM, GDS MCபோன்ற செயல் ஊழியர்களையே(OPERATIVE STAFF). IP,ASP,SP மற்றும்அதற்கு மேல் சம்பளம் வாங்கும் நிர்வாகஊழியர்களைப்(ADMINISTRATIVE STAFF) பற்றி குறிப்பிடவில்லை. Officer (அதிகாரி)எனும் காலணிய நெடியடிக்கும் பதத்தை பயன்படுத்தவிரும்பவில்லைஊழியம் பெறும் அனைவரும்ஊழியர்களேபச்சையாக சொல்வதானால் குறைவாக சம்பளம்பெறும் ஊழியர்களையே இக்கட்டுரையில் அஞ்சல் ஊழியர்கள் எனகுறிப்பிடப்படுகின்றனர்ஏழாவது ஊதியக்குழு ஒரு துறைசார்தேர்வின் மூலம் கிடைக்கக்கூடிய சாதாரண பதவி உயர்வான PA to IPஇடையேயான சம்பள வேறுபாட்டை கடுமையாக அதிகரித்து விட்டது.அப்படி செய்ததன் வழியாக செயல் ஊழியர்களை நிர்வாகஊழியர்களிடமிருந்து தெளிவான பொருளாதார வேறுபாட்டின்வழியாக பிரித்துவிட்டதுஇக்கட்டுரை தொடர்ந்து பேசிப்பேசிஅலுத்துப் போன பயணப்படி,பஞ்சப்படிவீட்டு வாடகைப்படி குறித்துபேசப்போவதில்லைஒரு ஒட்டு மொத்த நோக்கில் அஞ்சல்துறையின் செயல் ஊழியர்களை அஞ்சல் துறை எத்தனை வகையில்வஞ்சித்து கைவிட்டிருக்கிறது என்று மட்டுமே சொல்ல இருக்கிறது.

பொதுவெளியில் அஞ்சல் ஊழியர்கள்

   'ஈமெயில் இண்டர்நெட் எல்லாம் வந்த பிறகு உங்களுக்கெல்லாம்என்ன பெருசா வேலை இருக்க போகுதுசும்மா போய் ஒக்காந்துட்டுசம்பளம் வாங்கிட்டு வர்றீங்க'.  இது போன்ற வார்த்தையைகேள்விப்படாத அஞ்சல் ஊழியர் ஏறக்குறைய இருக்க முடியாது.அஞ்சலகம் என்பது வெறும் தபால் போக்குவரத்துக்கான துறைஎன்றும் தபால் போக்குவரத்து குறைந்துவிட்டதால் அஞ்சல்ஊழியர்கள் "தண்டச் சம்பளம்பெறுகிறார்கள் என்றும் எண்ணுவதுஅதிகமாகி உள்ளதுமுதலில் தபால் போக்குவரத்து குறையவில்லை. Direct post,Business post போன்றவை வந்த பிறகு மொத்தமாக தபால்அனுப்புகிறவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.தபால் போக்குவரத்து மட்டுமின்றி அஞ்சலகம் வங்கி(Banking) மற்றும்காப்பீட்டு(Insurance) சேவைகளையும் வழங்கி வருகிறது என்பது சிலஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுச் சமூகத்துக்கு தெரியாததாகவேஇருந்ததுஅதோடு நில்லாமல் agency service எனப்படும் TNPSC,EBபோன்றவற்றுக்கு பணம் கட்டுதல் Solar light போன்ற பொருட்களைவிற்றல் என அஞ்சல் துறை வேறு எந்த நிறுவனமும் அளிக்கஇயலாத பல சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.உதாரணமாக காப்பீட்டு துறையில் கால் பதிக்கும் SBI தனக்கென SBI general என்ற தனி அலுவலகத்தையும் அதற்கென தனிஅலுவலர்களையும் நியமித்து தனியாகவே செயல்படுகிறதுஆனால்அஞ்சலகங்களில் அப்படி அல்லஅஞ்சல் சேவைவங்கிச் சேவை,காப்பீட்டு சேவை என அனைத்தையும் ஒரே அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடிகிறதுஇருந்தும் அஞ்சல் ஊழியர்கள் பொது வெளியில்மதிக்கப்படுவதில்லை.

ஏன்?

(முன்பே சொன்னது போல குறைந்த சம்பளம் பெறும் "அஞ்சலகஉதவியாளர்கள்(Postal assistants)" வரை உள்ள ஊழியர்களை மட்டுமேஇங்கே குறிப்பிடப்படுகிறார்கள்.) 

   சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நம் நாட்டில் நிகழ்ந்தபரவலான தாராளமயமாக்கலுக்குப் பிறகு(Liberalisation) தனியார்துறைகள் அதிகமாக வளர்ச்சி பெறத் தொடங்கினஅதன் காரணமாகநாட்டிலும் கணிசமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது.அப்போதிருந்தே நம் அரசின் பொதுவுடைமை(socialistic) முகம் மாறத்தொடங்கியதுஎல்லாத் துறைகளையும் மெல்ல மெல்ல தனியாருக்குதாரை வார்க்கத் தொடங்கியதுரயில்வேதொலைத்தொடர்பு எனஅனைத்திலும் தனியாரின் பங்களிப்பு அதிகமானதுஆனால் அஞ்சல்துறையில் அது நடக்க சாத்தியமே இல்லை என அரசு அப்போதேஉணர்ந்து இருக்கும்ஏனெனில் மற்ற துறைகள் அனைத்தும்எந்திரங்களோடு பணிபுரிபவைபொதுவாக நகர்ப்புறம் சார்ந்தவை.ஆனால் அஞ்சலகங்கள் இந்தியாவின் அத்தனை மூலைமுடுக்குகளையும் இணைப்பவைபொதுவாகவே கிராமங்கள் மீதுஒவ்வாமை கொண்ட பெரு நகர பன்னாட்டு நிறுவனங்களின்பங்களிப்பு அஞ்சல் துறைக்கு பெரிதாகத் தேவைப்படவில்லை.ஆனால் தனியார் மயம் அதிகமாகத் தொடங்கியதும் அஞ்சல்ஊழியர்கள் பல்வேறு வகையில் தங்களது மதிப்பினை இழந்தனர்.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர் விடுப்பில் செல்லும்போது அவருடைய பொறுப்பை அந்த மாவட்ட தலைமையகத்தின் Post Master இடம் ஒப்படைத்துச் செல்வார் என்பது போன்ற பெருமிதங்கள்அழிந்து "உங்களுக்கெல்லாம் என்னா வேலை?" என்ற வகையில்பொதுச் சமூகத்திடன் அஞ்சல் ஊழியர்கள் ஏளனமடைய நேர்ந்தது.அஞ்சல் துறையும் தன்னை பல்வேறு வகையில் புதுப்பித்துக்கொள்ளத் தொடங்கியதுபல புதிய சேவைகளை வழங்கத்தொடங்கியதுதந்தி போன்ற தேவையற்ற சேவைகளை ரத்துசெய்ததுபணிப்பரிமாற்றத்திற்கென Moneygram, Western union போன்றதனியார் நிறுவனங்களுடன் கை கோர்த்தது. Amazon,Flipkart போன்றஇணைய விற்பனையாளர்களின் பொருள்களை விநியோகம்(Delivery)செய்ததுவங்கிகளைப் போலவே எங்கு வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியுடைய Core Banking  Solution-அறிமுகம் செய்ததுகாப்பீட்டுத் துறையிலும்(Insurance) பலமாற்றங்களைக் கொண்டு வந்ததுஇவ்வளவையும் செய்தது இந்தமாற்றங்களுக்கு தங்களை பழக்கிக் கொண்டு பணி புரிந்தது நிர்வாகஊழியர்கள்(Administrative staff) அல்லஒவ்வொன்றையும் உள்வாங்கிகற்றுக் கொண்டு சந்தேகங்களை தங்களுக்குள்ளாகவே கலந்து பேசிநிவர்த்தி செய்து கொண்டு பயந்து பயந்து வேலை பார்க்கும் செயல்ஊழியர்களே(Operative staff). ஆனால் ஒரு நற்பெயர் என வரும்போதுஅது இந்திய அஞ்சல் துறைக்குப் போகிறதுகலங்கம் என வரும்போது அது சாதாரண ஊழியர்களை பாதிக்கிறதுநம் ஊழியர்களுக்குஇருந்த மரியாதை பொதுச் சமூகத்திடம் இல்லாமல்செய்யப்பட்டிருக்கிறது இவ்வளவு உழைத்தும் இவ்வளவுமாற்றங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டும் நமக்குரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் என்ன காரணம்?அதற்குமுக்கிய காரணம் மக்கள் அபிமானம் நமக்கு எந்த வகையிலும்கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அரசு திட்டமிட்டு செயல்படுவதே

  நம்முடையது ஜனநாயக நாடுஜனநாயக நாட்டில் மக்களாதரவுஉள்ளவர்களை மட்டுமே அரசு கண்டு கொள்ளும்ஆனால் மக்களுக்குநம்மீது வெறுப்பு வரும் வகையில் அரசு பார்த்துக் கொள்கிறது.அதனால் எவ்வளவு கடுமையாக உழைத்தும் செயல் ஊழியர்கள்தங்களது ஊதியத்தை சற்றே நியாயமாக வழங்குங்கள்எனக்கேட்டால் "இவனுங்களுக்கு எல்லாம் என்னா கொறைச்சல்"என்று தான் மக்கள் பேசுகிறார்கள்.  நம் துறையில் அதிகமாக சம்பளம்வாங்கும் நிர்வாக ஊழியர்களும் நாமும் வேறு என்பதை மக்களுக்குசொல்லியாக வேண்டும்நாம் தினமும் மக்களை சந்திப்பவர்கள்அவர்களுடன் உரையாடுபவர்கள்ஆனால் ஊதியம் என வரும் போதுநமக்கு அதிகம் கொடுப்பதாக அவர்களே எண்ணிக் கொள்கிறார்கள்.இப்படி ஒரு சிக்கலான நிலையையே நாம் எதிர்கொள்கிறோம்.அஞ்சலக செயல் ஊழியர்கள் குறித்த மக்களின் பொது அபிப்ராயத்தைமாற்ற வேண்டியது அவசியம்அப்போது தான் பொது வெளியில்நமக்கான மரியாதையை கோரிப் பெற முடியும்.

முழுதாக மாறியிருக்கும் சூழல்

  ஒரு உதாரணம்கடந்த மார்ச் பதினாறாம் தேதி ஒருநாள் அடையாளவேலை நிறுத்தத்தை பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்துநடத்தினஅஞ்சல் துறையும் அதில் கலந்து கொண்டதுமக்களிடம்அரசு செயல் ஊழியர்கள்(operative staff - இறுதி வரை அப்படியேகுறிப்பிடுவேன்மதிப்பிழக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்மார்ச் பதினைந்தாம் தேதி இரண்டு சதவீத பஞ்சப்படி(dearness allowance) உயர்வை அரசு அறிவிக்கிறதுஅதுவும் "இரண்டு சதவீதம்பஞ்சப்படி உயர்வுஎன அறிவிக்கவில்லை. "நான்கு சதவீதமானதுஅகவிலைப்படிஎன ஏற்கனவே வழங்கப்பட்ட இரண்டுசதவீதத்தையும் கூட்டிச் சொல்கின்றன செய்திகள்உடனடியாகமக்களிடம் உருவாகும் எண்ணம் என்னவாக இருக்கும். "பாருஅரசாங்கம் இவனுங்களுக்கு சம்பளத்த ஏத்திக் கொடுக்குது.திமிரெடுத்த பசங்க ஸ்டிரைக் வேற பண்றானுங்கஎன்று தான்எண்ணுவார்கள்வேலை நிறுத்தம் செய்யும் நமக்கு ஆண்டுக்குசொற்பத் தொகையான இருநூறிலிருந்து ஐநூறு ரூபாய் மட்டுமேஇதனால் மாதம் உயரும் என்பதோ, ஏழாவது ஊதியக்குழுஎந்தளவிற்கு நம்மை வஞ்சித்தது என்பதோ மக்களுக்குத் தெரியாது.ஆனால் வேலை நிறுத்தத்துக்கு முதல் நாள் செய்தித்தாள்களில்கொட்டை எழுத்தில் "அரசு ஊழியர்கள் சம்பளம் உயர்வுஎன செய்திவரும்இது ஒரு உதாரணம் மட்டுமேதொழிற்சங்க போராட்டங்கள்பல வகைகளில் கண்டு கொள்ளப்படாமல் போகின்றன

  மார்ச் பதினாறு வேலை நிறுத்தத்தின் பிண்ணனியை சற்று பார்க்கவேண்டும்ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஜுன்2016-ல் ஏற்றதுஅஞ்சல் துறையை பொருத்தவரை ஊதியக்குழுவின்பரிந்துரைகள் செயல் ஊழியர்களுக்கு(Operative staff) எந்த விதத்திலும்பயன்தருவதாக இருக்கவில்லைசத்தமே இல்லாமல் நிர்வாகஊழியர்களின் சம்பளம் மட்டும் அதிகமாக உயர்த்தப்பட்டதுஆனால்எவ்வளவோ போராடியும் எடுத்துச் சொல்லியும் செயல் ஊழியர்களின்சம்பளத்தில் பெரிதாக மாற்றமில்லைமாறாக செயல் ஊழியர்களைநிர்வாக ஊழியர்களிடம் கூழைக் கும்பிடு போட வைக்கும் ஒரு முடிவுஎடுக்கப்பட்டுள்ளதுஅதாவது increment, promotion போன்றவைபெறுவதற்கு முன்பு good என்று appraisal வாங்கினால் போதும்.இப்போது very good வாங்க வேண்டும் என அந்த ஊதியக்குழுபரிந்துரைத்தது.

  ஆகவே அனைத்து தொழிற்சங்கங்ளும் சேர்ந்து ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தனஅதற்குப் பணிந்து அரசுஜீலை 2016-ல் ஒரு குழு அமைத்ததுதொழிற்சங்கங்ளின் முக்கியமானகோரிக்கைகளாக சம்பள உயர்வு போன்றவற்றை பின்னுக்குத்தள்ளிவிட்டு வெறுமனே படிகளை(allowance) மட்டும் பரிசீலிப்பதாகச்சொல்லி ஒரு கமிட்டியை அமைத்தனர்நான்கு மாதங்களுக்குள்படிகள் குறித்து முடிவெடுப்பதாக அறிவிக்கப்பட்டது.தொழிற்சங்கங்களும் அந்த குறைவான உத்தரவாதத்திற்கு ஒத்துக்கொண்டு வேலை நிறுத்த்ததைத்  தள்ளி வைத்தன.

 பொதுவாக இத்தகைய கமிட்டிகள் சம்பளம் குறைவாகவழங்கப்படுவதற்கு காரணம் மட்டுமே சொல்லும்அசோக் லவாசாகமிட்டியும் அப்படியொரு காரணத்தைத் தான் இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறது போல. கமிட்டி அமைத்து பத்து மாதங்கள் ஆகியும்இன்னும் அந்த கமிட்டி தன்னுடைய அறிக்கையை கொடுக்கவில்லை.அந்த கால தாமதத்தை எதிர்த்தே மார்ச் பதினாறாம் தேதிதொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனஅந்த வேலைநிறுத்தத்தையும் அரசு பெரிதாக பொருட்படுத்தவில்லை. "வேண்டுமென்றால் 28-ம் தேதி இது குறித்து பேசுவோம்இடத்தைபின்னர் தான் சொல்ல முடியும்என்று திமிரான தொனியில் ஒருபதில் வந்தது.

  தொழிற்சங்கங்களின் எந்த கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை.வெறுமனே படிகளை பரிசீலிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி கூடஅஞ்சல் செயல் ஊழியர்களை இழுத்தடிக்கிறதுஇவ்வளவு போராடிப்பெறும் படிகளால் மீண்டும் லாபம் அடையப் போவது நிர்வாகஊழியர்களேஅவர்களுக்குத்தான் அதிகமாக சம்பளம் உயரப்போகிறதுஇவ்வளவு போராடியவர்களுக்கு தங்களுடையசம்பளத்தை இழந்தவர்களுக்கு கிடைக்கப் போவது என்னவோசொற்பம் தான்.

  GDS ஊழியர்களுடை சிரமங்களை முழுதாக அறிய முடியவில்லை.ஆனால் annual target எனச் சொல்லி அவர்களும் துன்புறுத்தவேபடுகிறார்கள்அஞ்சல் ஊழியர்களை எந்த விதத்திலும்பொருட்படுத்தவே கூடாது என்ற உறுதியுடன் அரசு செயல்படுகிறது.சூழல் வெகுவாக மாறியிருக்கிறது.

எங்கும் சூழும் இருள்

  ஒன்றுநம்முடைய மரியாதை பொது வெளியில் குறைந்திருக்கிறது. அல்லது திட்டமிட்டு குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.இரண்டு, அரசு அஞ்சல் செயல் ஊழியர்களை முழுதாகக் கைவிடதயாராகிவிட்டது

  இந்த இரண்டு அவதானிப்புகளுடன் மேலும் சிலவற்றை சொல்லிமுடிக்கிறேன்இன்று ஆள்பற்றாக்குறை சமாளிக்க முடியாதஅளவுக்கு உயர்ந்திருக்கிறதுஅதனை அரசு கண்டு கொள்ளவில்லை.எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பணியாற்ற வேண்டிய சூழலில்அஞ்சல் செயல் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்அதனையும் அரசுகண்டு கொள்ளவில்லைவங்கிகள் மற்றும் எல்..சி ஆகியவைசனிக்கிழமைகளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கின்றன.ஆனால் எல்லா சனிக்கிழமையும் முழு நேரமும் அஞ்சல் செயல்ஊழியர்கள் பணியாற்ற வேண்டி இருக்கிறதுதன் ஊழியர்களின்உடல் நலம் குறித்து அவர்களின் நல்வாழ்வு குறித்தோ அரசுக்கு எந்தஅக்கறையும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகவே தெரிகிறது.

  பணிப்பயிற்சி மையங்களில் இன்னொன்றும் சொல்லப்படும். செயல்ஊழியர்களை கேவலப்படுத்தும் விதமாக "உங்கள் வேலையெல்லாம்பத்தாவது படிச்ச ஒருவன் செஞ்சிட்டு போயிடுவான்என்று.மக்களுடன் பழகுவதற்கு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளும்முயற்சிகள் முழுதாகவே அங்கு தூக்கி எறியப்படுகின்றன. Postal assistant வேலைக்கு பண்ணிரென்டாவதை கல்வித் தகுதி என அரசுநிர்ணயித்துள்ளதுபண்ணிரென்டாவது படித்தவர்கள் இந்தவேலையில் இரண்டு சதவீதம் கூட கிடையாதுபெரும்பான்மைபட்டதாரிகள்ஆனால் அவர்களின் அறிவையும் உழைப்பையும்தன்னுடைய லாபத்துக்கு உறிஞ்சிக் கொண்டு அவர்களின் சம்பளத்தைஅடிமட்டத்தில் போட்டு முடக்கவே அரசு நினைக்கிறது.

    Sukanya Samridhdhi Account என்ற பெண்பிள்ளைகளுக்கானதிட்டத்தை ஊக்குவிக்க அஞ்சல் ஊழியர்கள் எவ்வளவு சிரமப்பட்டனர்.எத்தனை லட்சம் கணக்குகள் அதில் தொடங்கப்பட்டனஒருவங்கியும் அருகில் கூட வர முடியாத அளவிற்கு அஞ்சலகங்களில்கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றனஒரு வசதியும் இல்லாமல்பணநீக்க மதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அஞ்சல் செயல்ஊழியர்கள் உழைத்தனர்இது போன்ற செயல்களுக்கு எந்தபாராட்டையும் நம் செயல் ஊழியர்கள் அரசிடமிருந்து பெறவில்லை.விடுமுறை தினங்களிலும் பணியாற்றியதற்கு அதிகப்டசம் அறுபதுரூபாயை ஊதியமாய் பெற்றுக் கொள்ளுமாறு நிர்வாகம் நம்மிடம்சொல்லியதுதொடர்ச்சியான அவமதிப்புகளையும்ஏமாற்றங்களையும் மட்டுமே அஞ்சல் செயல் ஊழியர்கள் சந்தித்துவருகின்றனர்இவ்வளவு சிரமப்பட்டு நாம் சேகரித்து இருக்கும்கணக்குகளை நமக்கு சம்மந்தமே இல்லாத நமக்கு பணி முன்னுரிமைஏதுமில்லாத India Post Payment Bank வசம் ஒப்படைக்கும்முயற்சிகளும் தொடங்கிவிட்டனநண்பர்களே நாம் மொத்தமாகவேகைவிடப்பட்டுள்ளோம்.

  தொழிற்சங்கங்களும் உடனடிப் பயன் என ஏதும் தராத cadre restructuring பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனஆகவேதொழிற்சங்கங்கள் வலுவான குரலில் அரசிடம் சொல்லவேண்டியதாக மூன்று கோரிக்கைகள் இருக்க வேண்டும்.

1. PA வேலைக்கு grade pay உயர்த்தப்பட வேண்டும்அதற்குஏற்றார்போல Postman,MO,CO,GDS போன்றவர்களுக்கும் சம்பளம்உயர்த்தப்பட வேண்டும்.

2.  அதிகரித்து இருக்கும் காலிப் பணி இடங்களை நிரப்புவதுடன்சனிக்கிழமைகளில் அஞ்சலகங்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும்.

3. ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அனைத்துதொழிற்சங்கங்களுடன் அரசு மீண்டும் ஆலோசனை நடத்தவேண்டும்.

  இவை நடைபெறும் என எந்த நம்பிக்கையும் இல்லைஆனால் ஒருசாதாரண ஊழியனாக இங்கு நடைபெறும் மாற்றங்களை நம்மீதுசெலுத்தப்படும் அடக்குமுறைகளை அமைதியாக கவனித்துகொண்டிருக்கக் கூடாது என்பது மட்டும் புரிகிறது. என்ன செய்யப் போகிறோம்?."