Running News

Tuesday 10 June 2014

TN NFPE CO-ORDINATION COMMITTEE MEETING - DECISIONS TAKEN ON AUDIT OFFICE AND SOUTHERN REGION VICTIMISATIONS

போராட்டப் பாதையில் NFPE  
தமிழக அஞ்சல் -RMS  சங்கங்கள் 

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நேற்று (09.06.2014) மாலை சென்னை பூங்கா நகர் அஞ்சலக வளாகத்தில்  தமிழ் மாநில அஞ்சல்  மற்றும் RMS  இணைப்புக் குழுவின் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு  இணைப்புக் குழுவின் தலைவரும் R 4 மாநிலச் செயலருமான தோழர். K . ராஜேந்திரன்  அவர்கள் தலைமை தாங்கினார்.  கன்வீனரும்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலருமான தோழர் J . இராமமூர்த்தி  வரவேற்று தற்போது தமிழக அஞ்சல் பகுதியில், குறிப்பாக  AUDIT  மற்றும் தென் மண்டலத்தில் பெருமளவில் ஊழியர்கள்  நிர்வாகத்தால் பழி வாங்கப் படுத்தல் குறித்து விரிவாக  எடுத்துரைத்தார். கூட்டத்தில் அனைத்து மாநிலச் சங்கங்களின் செயலர்கள் / நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முறையாக  கோரிக்கை மனு அளித்து , பல கட்டங்களில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று , இரண்டு முறை  கோரிக்கை மனுக்களுக்கு எழுத்துபூர்வமான பதிலும்  தென் மண்டல நிர்வாகம்  தொழிற்சங்கங் களுக்கு அளித்துள்ளது  என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால்  இதனை ஒட்டி கடந்த 10.01.2014 அன்று  தென் மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தை (இது குறித்து  நாம் வெளியிட்ட நோட்டீஸ்  நகல் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது )  ' தார்ணா ' போராட்டம் என்று  பொய்யாக சித்தரித்து , ஐந்து  மாதங்கள் கடந்த பின்னர் இன்றைய  தேதியில்  கோட்ட அதிகாரிகள் மூலம்  அந்த தேதியில் விடுப்பில் சென்ற ஊழியர்களுக்கு  விதி  16 அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை  மற்றும் DIES NON  வழங்கிட  நோட்டீஸ்  அளிக்கப் பட்டுள்ளது . 

நமது போராட்டம் குறித்து வெளியிட்ட செய்தி , மற்றும் நோட்டீஸ் நகல்  2014 ஜனவரி 03, 08 தேதிகளில்  நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது .  இதனை இதர மண்டல அதிகாரிகள் பார்க்கவும். 

சாதாரணமாக , நிர்வாகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு  நடத்தப்படும் தொடக்க நிலைப் போராட்டமான   தொடர்முழக்கப் போராட்டம்  என்கிற ஆர்ப்பாட்டத்தையே இப்படி ஒரு மண்டல நிர்வாகம்  பொறுத்துக் கொள்ள இயவில்லை என்பது , ஜனநாயகத்தின் குரல் வளை  மீதேறி  மிதிப்ப தற்கு  சமம் ஆகும் . 

மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தை , 'தார்ணா ' என்று பொய்யாக சித்தரித்து நோட்டீஸ் வழங்குவது  ஒரு  தவறான  செயல் என்று ஊழியர்கள் மத்தியில்  கடுமையான விமரிசனம் எழுந்துள்ளது,. இப்படிப்பட்ட அப்பட்டமான,  பச்சையாக பொய் கூறும் நிர்வாகத்திடம் சட்டப் பாதுகாப்பை நாம் எப்படி எதிர்பார்ப்பது என்பது ஊழியர்கள் முன்பாக எழுந்துள்ள கேள்வி . 

தென் மண்டல PMG  அவர்கள் அங்குள்ள அடுத்த கட்ட அதிகாரியால் தவறாக வழி நடத்தப் படுகிறார் என்று தென் மண்டலத்தில் இருந்து நமக்கு புகார் வந்துள்ளது.  ஊழியர்களை பழி தீர்த்துக் கொள்ள இப்படி  பொய்யாக  குற்றப் பத்திரிகை அளித்திட  மண்டல அதிகாரியிடம் தூண்டுதல் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.  இது நிர்வாகத்திற்கு அழகா என்பதை  மற்றைய உயர் அதிகாரிகள்  மனசாட்சிப் படி  தீர்மானித்திட வேண்டுகிறோம். 

மதுரை மண்டலத்தில் தொடர்கதையாக இப்படி நிகழ்வது உங்களுக்கு தற்போது புரியும். பிரச்சினைகளின் அடிப்படையில் அணுகாமல் , பழி வாங்கும் போக்கு தொடர்கதையானால்  ஊழியர்களின் மனநிலை பாதிக்காதா ? அதன் தாக்கம் , தொழில் அமைதி கெடாதா ? தொடர் விளைவாக மக்கள் சேவை மற்றும்  இலாக்காவில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களில் இது  பாதிப்பை ஏற்படுத்தாதா ?இந்தக்  கேள்விகளை  இதர அதிகாரிகளின் பார்வைக்கு வைக்கிறோம் .

எனவே, இதன் அடிப்படையில் , COC  மூலம் ஏற்கனவே  CPMG அவர்களுக்கு AUDIT  அலுவலக பிரச்சினை தொடர்பாக  அளித்த கோரிக்கை  மனுமீது  நடவடிக்கை வேண்டியும் , தென் மண்டலத்தில் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்காக பழி வாங்கப் படுவதை தடுத்திட வேண்டியும் கீழ்க் கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன :-

1) எதிர்வரும் 13.06.2014 அன்று  தமிழகத்திற்கு வருகை புரியும்  நமது சம்மேளனத்தின் மாபொதுச்  செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்களுடன்  CPMG  அவர்களை நேரில் சந்தித்து  கோரிக்கை மனு அளித்து  பேசுவது என்றும் ;

2) அதே தேதியில்  GM FINANCE  அலுவலக வாயிலில் AUDIT  பகுதி ஊழியர்களால்  அறிவிக்கப் பட்டு நடத்தப் பட உள்ள தார்ணா  போராட்டத்தில் மாநில இணைப்புக் குழுவின் நிர்வாகிகள் கலந்து கொள்வது என்றும் ;

3) அதே தேதியில்  தென் மண்டலத்தில் உள்ள அஞ்சல் - RMS  பகுதியின் அனைத்து கோட்டங்களிலும்  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS  3 , RMS 4, GDS  நிர்வாகப் பிரிவு , SBCO  பகுதி ஊழியர்களைத் திரட்டி  மண்டல நிர்வாகத்தின்  பழி வாங்கும் செயலுக்கு எதிராக  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என்றும் ;

4) ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைத்து  கோட்ட மற்றும் கிளைச் சங்கங்களில் இருந்து  கீழ்க்காணும் கடிதத் தந்தியினை  CPMG  அவர்களுக்கு அளித்திடுவது  எனவும்  தீர்மானம்  நிறைவேற்றப் பட்டது .

5) இதற்குப் பின்னரும் பிரச்சினை தீர்க்கப் படவில்லையெனில் தமிழகம் தழுவிய அளவில் NFPE  யின் எட்டு மாநிலச் சங்கங்களின் சார்பாக முறையாக சட்ட ரீதியாக நோட்டீஸ் அளித்து  இரண்டு கட்ட  தொடர் போராட்டங்களும்  இறுதியான  போராட்டமும் அறிவிக்கப் பட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

எனவே அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள்  மற்றும் கோட்ட/ கிளைச்செயலர்கள்  இந்த நடவடிக்கைகளை சிறப்பா கவும் வெற்றிகரமாகவும்  நடத்திட வேண்டுகிறோம். ஊழியர்களை CORPORATE  COMPANY கள்  போல அடிமையாக நடத்திட எண்ணும்  நிர்வாகத்திற்கு  உங்களின் ஒற்றுமையான மற்றும் வலிமையான போராட்டமே  சரியான பதிலாக அமைந்திடும்  என்பது திண்ணமாகும். 

                                                                  SAVINGRAM
TO
SHRI. T. MURTHI, IPS,
CHIEF POSTMASTER GENERAL,
TAMILNADU CIRCLE,
CHENNAI 600 002.
---------------------------------------------------------------------------------------------------------------------------
= REQUEST IMMEDIATE INTERVENTION TO STOP VICTIMIZATION OF OFFICIALS
OF  AUDIT OFFICE AND TO SETTLE THEIR  JUSTIFIED DEMANDS AAA REQUEST IMMEDIATE INTERVENTION  TO STOP  LARGE SCALE TRADE UNION VICTIMIZATION UNLEASHED AT SOUTHERN REGION FOR PARTICIPATION IN THE DEMONSTRATION HELD ON 10.01.2014 AT MADURAI AAA UNREST IN SOUTHERN REGION AAA REQUEST INDUSTRIAL PEACE  AND WORKING ATMOSPHERE  AAA
                                                                          
                                                                              = DIVISIONAL SECRETARY
                                                                                ........................... DIVISION

No comments:

Post a Comment