Running News

Tuesday, 30 April 2013



புரட்சிகர மே தின வாழ்த்துக்கள் !

                                                                              


                         
                       


















  இளைஞர்கள் தெரிந்து கொள்ள ' மே தின' வரலாறு 

                                     பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் 


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும்
 வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும்
 நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய
 நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் 
ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் 
தோன்றிய 'சாசன இயக்கம்' (CHARTISTS ) என்பதாகும்.      சாசன இயக்கம்
 ஆறு  முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர்
 இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை
 கோரிக்கை.

பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள், 
 தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். 
இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை
 நடத்தினர். 1834 ல் 'ஜனநாயகம்' அல்லது 'மரணம்' என்ற கோஷத்தை 
முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  இவையனைத்தும்
 தோல்வியில் முடிவ டைந்தன.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த
தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை 
கோரிக் கையை முன்வைத்து 1856 ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு,
 வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் 
மைல் கல்லாக அமைந்தது.

அமெரிக்காவில் 1832ல் போஸ்டனில், கப்பலில் பணியாற்றிய
 தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து
 வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835 ல் பிலடெல்பியாவிலும், 
பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து
 இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் 
தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை
 நேரத்தை வலியுறுத்தி 1877 ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

                                                  மாபெரும் வேலை நிறுத்தம் 

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள
 தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர்
 கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம்
 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை
 நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை
 நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே
மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்வாக்கி,
 சின்சினாட்டி, பால்டிமோர், டெட்ராய்ட்  என அமெரிக்கா முழுவதும்
 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
 இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள 
தொழிலாளர்கள்
 பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை
 நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.
 இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற 
தொழிலாளர்களின்  பேரணி  அமெரிக்காவை உலுக்கியது. மிக்சிகனில்
மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில்  70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
 தொழிலாளர்களும் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.

                                                        சிக்காகோ  பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வெஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” 
வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு 
கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில்
 நான்கு  தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப்
 பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில்  ஹே மார்க்கெட்
 சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை
  தொழிலாளர்கள் அறிவித்தனர் . இது அரசினால் தடை செய்யப் பட்டது .
 தடையையும் மீறி  2500 தொழிலாளர்கள் பேரணியாக ஹே மார்கெட் நோக்கிச்
 சென்றனர்.  
இந்நேரத்தில் காவல்துறையினர் ஏவி விடப்பட்டனர்.  அனைவரையும்
 கலைந்து செல்லுமாறு காவல் துறை  அறிவித்தது  . இவ்வேளையில்
 திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே
 ஒரு காவலர் பலியானார். இதனால் கலவரமடைந்த  போலீசார் 
கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளர்களைத் 
 தாக்கினர்.  துப்பாக்கிச் சூட்டில்  20 க்கும் மேற்பட்ட தோழர்கள்
 பலியாயினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து 
 தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடுத்தனர்.
 இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. இதன் முடிவாக 
 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

                                                  அமெரிக்காவின் கருப்பு தினம் 

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், 
ஆல்பிரட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர்
  தூக்கிலிடப்பட்டனர். இது அமெரிக்காவின் கறுப்பு தினமாக
 தொழிலாளர்களால் அறிவிக்கப் பட்டது.  நவம்பர் 13, 1887 அன்று
 நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. 
நாடு முழுவதும் ஐந்து  லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து 
கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு  நிறமேந்தி  கண்டனக்
 குரல் எழுப்பினர் .அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர 
வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான்
 இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

                                அனைத்துலக தொழிலாளர்  போராட்டம் 

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின்
 ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 
400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
 உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய
 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும்,
 சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 
அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட 
வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.உலகத் தொழிலாளர்கள் 
அனைவரும், எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்க
வேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறைகூவலே 
மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப் 
பிடிப்பதற்கு  வழிவகுத்தது.

இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும், 
அதற்கான இயக்கமும் வலிமை பெற்றன. நாளொன்றுக்கு எட்டுமணி
 நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும்
 உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. 
உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது.

                                               மே தினம் - வரலாற்று நிகழ்வு 

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான 
போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு
 மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. 
இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி 
வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன்
 முதலில் நிலைநாட்டப்பட்டது  என்பது  வரலாறு காட்டும் பாடம் ஆகும். 
எங்கு அழுத்தம் அதிகமாகிறதோ அங்கு  நிச்சயம் புரட்சி வெடித்துக் கிளம்பும்.

                                               பெற்ற சுதந்திரம் பறி  போகிறது !

நேற்று வரை நம் முன்னோர்களின் தியாகத்தால் நாம் பெற்ற இந்த 8 மணி
 வேலை என்ற சுதந்திரம் , இப்போது ஏகாதிபத்திய அரசுகளால், 
 முதலாளித்துவ சக்திகளால், பன்னாட்டு நிறுவனங்களால், நம்மை அடகு 
வைக்கும் ஆளும் நாலாந்தர அரசியல் வாதிகளால் படிப்படியாகப் பறிக்கப்
 படுகிறது. 10 மணி நேரம் , 12 மணி நேரம் நீ வேலை செய்தால் என்ன என்று 
 நம்மிடமே  கொடூர எண்ணம் கொண்ட அதிகாரிகளால் இன்று தைரியமாக 
கேட்கப் படுகிறது . மீண்டும் அடிமைச் சாசனம் எழுதப் படுகிறது.  

                                                 மீண்டும் புரட்சிக்கு தயாராவீர் !

இதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் , பெற்ற சுதந்திரம் பறிபோகாமல்
 காக்கப் படுமானால்  என்ன தியாகத்திற்கும் நாம் தயாராக  வேண்டும். 
தொழிற் சங்கம் என்ன செய்தது என்று கேட்பதை விட்டு , நாம் என்ன 
செய்ய வேண்டும்  என்ற உணர்வு  ஒவ்வொரு  தோழனிடமும்  வெடித்துக்
 கிளம்ப வேண்டும். அதிகார மிரட்டலுக்கு அடி பணியாது , தண்டனை களுக்கு
  பயந்து ஓடாது , போராட்ட குணம் வளர்க்கப் பட வேண்டும். தொழிலாளர் 
சக்தி  அற்ப எண்ணங்களுக்காக  பிரிக்கப்படாமல் , ஒன்று படுத்தப் 
படவேண்டும். மீண்டும் வரலாற்றுப் போருக்கு  இளைஞர்களை நாம் தயார்
 செய்திட வேண்டும் . இதுவே மே தின தியாகிகளுக்கு  நாம் செய்திடும் 
உண்மையான அஞ்சலி ஆகும்.

                                மே தின தியாகிகள் நினைவு ஓங்கட்டும் ! 
                                     புரட்சிக்கான சிந்தனை பெருகட்டும்!

புரட்சிகர மே தின வாழ்த்துக்களுடன் 

                                                                          A பழனிச்சாமி , மாவட்டச் செயலர் , 
   அஞ்சல் மூன்று ,கரூர் மாவட்டம்   .

Friday, 26 April 2013


PAYMENT OF D A TO CG EMPLOYEES Revised wef 1.1.2013

.http://www.finmin.nic.in/the_ministry/dept_expenditure/notification/da/da01012013.pdf


PAYMENT OF DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES - REVISED RATES EFFECTIVE FROM 1.1.2013.
No. 1(2)2013-E.II(B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi,
Dated: 25th April, 2013.
OFFICE MEMORANDUM
Subject: Payment of Dearness Allowance to Central Government employees-Revised Rates effective from 1.1.2013.

The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.1 (8)/2012-E-II (B) dated 28th Sepetmber,2012  on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 72% to 80% with effect from 1st January,2013.

2.         The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No.1 (3)/2008-E-II(B) dated 29th August. 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.

3.         The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.

4.         These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will be issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.

5.         In so far as the persons serving in the Indian Audit and Accounts Department are concerned, these orders issue in consultation with the Comptroller and Auditor General of India.

6.         The Hindi version of this O.M. is also attached.
                                                                                                                                              Sd/-
(K.R. Sharma)
Under Secretary to the Government of India

Thursday, 18 April 2013


DA HIKE

Union Cabinet approved the proposal to increase dearness allowance (DA) to 80 per cent, from existing 72 per cent, benefiting about 50 lakh employees and 30 lakh pensioners of the central government.

The hike would be effective from January 1, 2013 and the employees and pensioners will be entitled to arrears.


FLASH NEWS FROM CHQ

Cabinet meeting being held today afternoon. DA issue is on Agenda.

Likely to be announced Today.

DELAY IN ANNOUNCEMENT OF DA - CONDUCT NATIONWIDE DEMONSTRATIONS ON 23rd APRIL-2013.

அன்புத் தோழர்களே ! தோழியர்களே !  வணக்கம்

01.01.2013 முதல் வழங்கப் பட வேண்டிய  8% பஞ்சப்படி  இதுவரை 
வழங்கப் படவில்லை .எப்போதும் போல இது மார்ச் இறுதியில்
 உத்திரவிடப்பட்டு ஏப்ரல் முதல் தேதியில்  நிலுவையுடன்  
உயர்த்தி வழங்கப் பட்டிருக்க வேண்டும் . 

பிரத அமைச்சர்  ஊரில் இல்லைநிதி அமைச்சர் ஊரில் இல்லை 
என்று மாற்றி மாற்றி காரணங்கள் கூறப்பட்டு  இன்று வரை 
காபினெட் ஒப்புதல் அளிக்கப் படாததால்  நமக்கு சட்டப் படி 
வழங்கப் பட வேண்டிய  DA  கால தாமதப் படுத்தப் படுகிறது

இதனை எதிர்த்து  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்  எதிர்வரும்
 23.04.2103 அன்று  அவரவர் பணியிடங்களில்  கண்டன ஆர்ப்பாட்டம்
 நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளதுஇதன் படி நமது  NFPE 
 சம்மேளனமும்  இதற்கான வேண்டுகோளை  அளித்துள்ளது

ஆகவே தமிழகத்தின் அனைத்து கோட்ட / கிளைகளிலும்  எதிர்வரும் 
23.04.2013 அன்று  ஆர்ப்பாட்டம் நடத்தி , பிரதம அமைச்சருக்கு
 கடிதத் தந்திஅனுப்பிட வேண்டுகிறோம்

சென்னை மாநகரைப் பொருத்தவரை ,  JCA  சார்பில் - NFPE /FNPO  
அனைத்து மாநிலச் சங்கங்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம்  எதிர்வரும்
 19.04.2013 வெள்ளி அன்று   உணவு  இடைவேளையில்   
அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வாயிலில்  நடத்தப் பட
 முடிவு எடுக்கப் பட்டுள்ளது

இந்த ஆர்ப்பாட்டத்தில்  NFPE  சார்பிலும்  CONFEDERATION  சார்பிலும்
   மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர்  
தோழர்  K .R அவர்களும்  FNPO  சார்பில்  அதன் மாபொதுச்  செயலர்
 தோழர்.  தியாகராஜன் அவர்களும்  கலந்து கொண்டு  போராட்ட
 உரை அளித்திட உள்ளார்கள்

எனவே  சென்னை மாநகரத்தின் அனைத்து  கோட்டகிளைகளில் 
இருந்தும் JCA  வில் உள்ள  NFPE /FNPO  அனைத்து சங்கங்களின் 
கோட்டகிளை நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள்
 பெருந்திரளாக  இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில்
 கலந்து கொண்டு சிறப்பு  செய்திட வேண்டுகிறோம்

JCA  சார்பிலான POSTER  நேற்று மாலை  தயார் செய்யப் பட்டதால்
  அவற்றை  POST  செய்திட இயலவில்லை . எனவே நம்முடைய 
 கோட்டகிளைச் செயலர்கள்  சென்னை அண்ணா சாலை  
கிளையில் உள்ள  நமது அஞ்சல் மூன்றின்  மகிளா  கமிட்டி
 கன்வீனர்  தோழர்மணிமேகலை  அவர்களிடம்  தங்கள்
 கிளைகளுக்கான  POSTER  - பெற்றுக் கொள்ளுமாறு  அன்புடன் 
வேண்டுகிறோம்

CONFEDERATION CALLS FOR A STRONG PROTEST AGAINST THE INORDINATE
 DELAY IN GRANTING 8% DA TO CG EMPLOYEES BY GOVERNMENT

No. Conf/27 /2013 -                                                                Dated 17th April 2013
Comrades,
DELAY IN GRANT OF DA - HOLD PROTEST DEMONSTRATION ON 23RD APRIL 2013

            Since the implementation of the recommendations of the 4th central pay commission
 in 1986, the Dearness Allowance (DA) is paid in two six-monthly installments – in March 
and September of every year. The practice followed since then is that the order granting DA 
to government employees is issued in March and September itself.

            This time the practice in force since 1986 is violated. Our enquiries with concerned 
Ministries informed us that the file is already moved for Cabinet approval. But it is nearly
 a month now. The cabinet has found no time to take a decision on this.

            This naturally is quiet disturbing, especially in the time of galloping price line. 
The employees have, in the past, fought bitterly for grant of DA and the 3rd CPC gave 
a definite formula for DA in the aftermath of the one day strike on 19th September 1968.
 We cannot allow the hard won DA to be tampered with.

            Confederation has written to Prime Minister conveying the disquiet amongst
 the amongst the employees over the inordinate delay in the grant of additional installment
 of DA due from 1st January 2013 and urging the Prime Minister to take immediate steps
 to assuage the feelings of the employees. Copy of the letter is given along with this Circular.

            The Secretariat of Confederation therefore calls upon every affiliate as well as 
State Committee of Confederation to organise lunch hour demonstration in the work place 
on 23rd April 2013, Tuesday and send the following telegram to the Prime Minister of India.

TEXT OF TELEGRAM: EMPLOYEES AGITATED OVER DELAY 
IN GRANT OF DA, URGE TO EXPEDITE ISSUANCE OF ORDERS.

            Each affiliate and State Committee of Confederation may send a detailed report 
on implementation of the programme in their organisation/state to the Confederation CHQ.

  With greetings
Yours fraternally
Sd/-
(KKN Kutty)
Secretary General

Friday, 12 April 2013


logo

Direct Recruitment PA/SA Examination --LATEST UPDATE as on 05-April-2013

I.Aptitude Test (Paper I) for Andhra Pradesh, Gujarat, Karnataka, Maharashtra and Tamil Nadu circles is scheduled on 21 April 2013. Admit cards are being dispatched to all eligible candidates. In case you do not receive the Admit Card by 11-April 2013, then you can download the same online from www.indiapost.gov.in  using Direct Recruitment PA/SA Examination link from 12_April-2013 onwards. You can also report discrepancy in Admit Card data from 12-April-2013 using the link GENERATE ADMIT CARD on the same web site.
II.Some applicants have been issued Admit card without PHOTOGRAPH. All such applicants may visit the websitewww.indiapost.gov.in  to reconfirm their eligibility. On scrutiny it was found that photograph in case of some applicants was not pasted on the application form. Please note that the candidature for all such applicants is cancelled and they will not be allowed to appear in Aptitude Test (Paper I).
LATEST UPDATE as on 11-April-2013 
For Karnataka Circle Applicants with Roll No. 2112701609 - 2112702108
It is to intimate that Examination Venue for PA/SA Direct Recruitment Examination Aptitude Test (Paper I) has been changed 
From:
S.CADAMBI INDEPENDENT PU COLLEGE
CA-2 10th Main2nd Cross, 3 rd stage WOC Road Basaveshwarara nagar
Mysore560079

To:
MAHARANI'S ARTS & COMMERCE COLLEGE FOR WOMEN, J.L.B Road
MYSORE-570005
Revised Admit Card with changed Address of Examination Venue have been despatched to the affected applicants. Date and Timings remain unchanged.
Click here for :



DA  LATEST POSITION

 THE DA PROPOSAL IS PENDING CLEARANCE OF CABINET.
  PRIME MINISTER IS REACHING DELHI ON 12th. 

 WE EXPECT IT TO BE CLEARED BY TUESDAY.

Friday, 5 April 2013

Rotational Transfer 2013 – PA cadre - reg.


Department of Posts, India.
Office of the Supdt. of Post Offices, Karur Division,Karur-639001.
Memo. No.B1/RT 2013 dated at Karur 639001 the 05.04.2013.

                                    Sub: Rotational Transfer 2013 – PA cadre - reg.

                                                                 <<<>>>            

                                    The following Transfers and postings in PA cadre are ordered.

1.
Smt A.Mathuram, PA, Karur HO to be  SPM, Tirumanilaiyur SO - vice Smt P.Mangayarkarasi  transferred.
2.
Smt P.Mangayarkarasi, SPM, Tirumanilaiyur SO to be PA, Karur HO - vice Smt A.Mathuram transferred.
3.
Shri K.Palanisamy, PA, Aravakurichi SO to be SPM, Tennilai SO - vice Shri K.Muruganandam   transferred.
4.
Shri K.Muruganandam, SPM, Tennilai SO to be PA, Manaparai SO in the existing vacancy.
5.
Shri T.Venkatachalapathy, PA , Karur HO to be OA, D.O., Karur in the existing vacancy.
6.
Smt R.Geetha, PA, Karur HO to be OA, DO, Karur in the existing vacancy.
7.
Shri A.Palanisamy, SPM, Vengamerdu SO to be PA, Karur HO vice Shri N.Viswanathan  transferred.
8.
Shri N.Viswanathan, PA, Karur HO to be SPM, Vengamedu SO vice                                                                         Shri A.Palanisamy transferred.
9.
Smt L.Vidhya, PA, Karur HO to be PA, Sengunthapuram SO                                                                         vice Ms S.Pavithra transferred.
10.
Ms S.Pavitra, PA, Sengunthapuram SO to PA, Karur HO vice Smt L.Vidhya transferred.
11.
Smt S.Manonmani, PA/ Offg.SPM, K.Paramathi SO to be PA, Velayuthampalayam SO in the existing vacancy.
12.
Shri S.Kuppusamy, LRPA, Karur Division @ Pasupathipalayam SO to be PA, Pasupathipalayam SO in the existing vacancy.



2


                        The officials should be relieved on transfer only after getting permission from this office.  The SPMs and PAs should complete all the pending work including RD bulk Posting etc. before relief from the existing Post.
                                                               
                        Any representation against RT orders addressed to the Postmaster General, Central Region – T.N., Tiruchirappalli 620001 should be submitted so as to reach this office on or before 20.04.2013. Representation received after the stipulated date will not be entertained.

A copy of this memo. is issued to :
  1. The Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai 600002.
  2. The Postmaster General, Central Region (T.N), Tiruchirappalli 620001.
  3. The Postmaster, Karur HO 639001. /  Kulittalai HO 639104.
  4. All the SPMs in Karur Division.
  5. Officials concerned.
  6. PF of the Officials concerned.          
  7. All ASPs/IPs in Karur Division.
  8. All Service Unions.    
  9. Steno/Accountant, DO, Karur.
  10. File and 11. Spare.


   Supdt. of Post Offices,
Karur Division,Karur-639001.