Running News

Wednesday, 23 November 2016

நமக்குள் பேசி கொள்வோம்….

.

   FAKE NOTE DETECTOR கொடுக்கப்படவில்லை. OTA/OFFவழங்கபடவில்லை. இது வரை எவ்வளவு கள்ள நோட்டுக்கள்/செல்லாத நோட்டுக்கள் ஊழியர்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளன என்ற கணக்கில்லைஉடனே கணக்கை கொடு என்ற விரட்டல் ஒரு பக்கம். இரவு கணக்கை முடிக்க நேரமாகிறதே என்றால், இரவு 12 மணி ஆனாலும் முடித்து விட்டுதான் போக வேண்டும் என்ற மிரட்டல் ஒரு பக்கம்.  இழப்புகளையும், வேதனைகளையும் தாங்கி கொண்டு வேலை பார்த்தும், ஒரு பாராட்டு, ஒரு ஆறுதல் இல்லை. உன் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற வார்த்தைகள்தான் அதிகாரிகள் வாயில் இருந்து வருகிறது. போராட தயாராகத்தான் இருக்கிறோம். பலன் கிட்டுமா? என்பதை விட பாதிப்புகள் இல்லாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைதான் பெரும்பாலான ஊழியர்கள் எண்ணம். 

 

FINANCE MINISTRY AND DEPT. OF POSTS EXCLUDED PO SAVINGS ACCOUNTS FROM EARLIER ORDERS OF FIN. MIN

இதுவெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக நடக்கும் நம் இலாக்காவில் . ஆனால்  இரவு  பகல் , விடுமுறை நாள் , ஞாயிறு என்று பணி  செய்த ஊழியர்களுக்கு வங்கிகள் போல ஒரு நாள்  ஊதியம் அல்லது ரூ. 3000/- கேட்டால் தோசைக்  கரண்டியை  திருப்பி  காலில் சூடு வைப்பார்கள் நம் அதிகாரிகள் .  

அரசுக்கு கொள்கை ரீதியாக ஆபத்துக் காலத்தில் ராணுவம் போல நம் ஊழியர் பணி  செய்யத் தயார் தான் . ஆனால்  பட்டை நாமம் குழைத்துப் போட்டு கொத்தடிமையாக  வேலை வாங்க நம் அதிகாரிகள்  தயாராக இருக்கிறார்களே ? இது தான் இன்றைய தேசம் .

இதுதான் கொடுமை . இதற்கெல்லாம்  முடிவு கட்டும் நாள் எந்நாளோ  ? தமிழகம் எடுத்துக்காட்டாக ஊழியர் நலன் காக்க தயாராவோம். 22 மாநிலங்களை நாம் எதிர் நோக்க வேண்டாம். மேல் மட்ட அமைப்புகளை நாம் எதிர் நோக்க வேண்டாம் . எப்போதும் போல முன்கை  எடுக்க தயாராவீர் தோழர்களே !

CESS FOR OUR CONTINUED EFFORTS ON ORDERING OF ETAIL/ECOMMERCE/SP DELIVERY - ORDER ISSUED BY THE DEPARTMENT

CESS FOR OUR CONTINUED EFFORTS ON ORDERING OF ETAIL/ECOMMERCE/SP DELIVERY - ORDER ISSUED BY THE DEPARTMENT

VICTORY FOR OUR  CONTINUED EFFORTS

DURING THE COURSE OF  DISCUSSIONS AT THE  FOUR MONTHLY MEETING WITH THE CPMG, TN THIS DAY,  HE REPLIED THAT, BASED ON OUR  MEMORANDUM AND CONTINUED CORRESPONDENCE, THE DTE. HAS NOW ISSUED SOME MODIFIED ORDER ON BRINGING THE OFFICIALS FOR  DUTY ON SUNDAY/HOLIDAY ON ETAIL/ECOMMERCE/SP DELIVERY.  

HE HANDED OVER THE COPY TO OUR UNION OFFICE BEAERERS. THE  SAME IS PUBLISHED BELOW FOR YOUR REFERENCE. AS PER THIS ORDER, NO OFFICIAL SHOULD BE COMPELLED FOR DUTY AND  ONLY WILLING OFFICIALS MAY BE DEPLOYED FOR SUCH DUTY. PL INFORM ALL. HOWEVER, WE WILL PURSUE FURTHER TO STOP SUCH INHUMAN  ORDERS THROUGH OUR HIGHER FORUMS.


தெரிந்து கொள்ளுங்கள்…

 FAKE NOTE DETECTOR வாங்கி தரமாட்டார்களாம். ஆனால் கள்ளநோட்டு இருந்தால் நாம் தான் பொறுப்பாம். EARTHLING பக்காவாக போட ஏற்பாடு செய்ய மாட்டார்களாம். ஆனால், ஏதேனும் தவறுகள் நடந்தால் நாம் தான் பொறுப்பாம். (இதுதான் உலகமா?, முரண்பாடுகள், இறைவனும் அதிகாரிகளும் என்று பல விஷயங்களை எழுதி இருந்தாலும், இந்த நிலைதான் நீடிக்கிறது!)

                    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
GDS கமிட்டி அறிக்கை 24.11.2016 அன்று அஞ்சல் வாரிய செயலரிடம் ஒப்படைக்கப் படும் என்றுதகவல் வெளியாகி இருக்கிறது. .

                                   *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
   இலாகாவிலிருந்து  அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால் ரிசர்வு வங்கி இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  தபால் அலுவலகங்களில் இனிமேல் பழைய நோட்டுக்கள் வாங்க வேண்டாம் என தெளிவாக அறிவிப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

       சேமிப்புக்கணக்குகளில்பழைய ரூபாய்500 /1000 டெபாசிட் செய்ய கூடாது --ரிசர்வ் வங்கி அறிவிப்பு. 
Deposit of old demonetized notes of 500 and 1000 in Small Savings Scheme - Finmin Order 22.11.2016

F.No.1/042016-NS
Ministry of Finance
Department of Economic Affairs
(Budget Divisional)
North Block, New Delhi
Dated 22nd November 2016
To
1. The Chief General Manager
Reserve Bank of India
Department of Government & Bank Accounts
Central Office, Byculla Office Accounts
4th floor, Opposite Mumbai Central Railway Station
Byculla, Mumbai - 400008

2. The Deputy Director General (FS)
Department of Posts
Dak Bhawan, Sansad Marg, New Delhi

3. The Joint Director & HOD
National Savings Institute
ICCW Building
4. Deen Dayal Upadhyay Marg
New Delhi-110003

Subject: Deposit of old demonetized notes of 500 and 1000 in Small Savings Scheme

Sir,
I am directed to state that Ministry of Finance has received references from Banks whether currency notes of Rs.500 and Rs.1000, discontinued w.e.f.9.11.2016, can be deposited in accounts opened under small savings schemes. The matter was examined in this Ministry and it has been decided that subscribers of Small Savings Scheme may not be allowed to deposit old currency note of Rs.500 and Rs.1000, in Small Savings Schemes.

2. This may be compiled strictly.

3. This has the approval of Secretary (Economic Affaris).

Yours faithfully,
sd/-
(Padam Singh)

Tuesday, 22 November 2016

மறுபடியும் முதலில் இருந்தா…..



   ”பெண் ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம். பணபட்டுவாடா பக்காவாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆள் பற்றாகுறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவைபட்டால், அதிகபடியான ஆட்களை அலுவலகத்தில் நியமித்து கொள்ளுங்கள்(ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்). ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணி புரிந்ததற்கும், அதிகபடியான நேரம் வேலை பார்த்ததற்கும், ஏதேனும் கொடுக்க முடியுமா? என பரிசீலனை பண்ணுங்கள்!” இப்படி மறுபடியும் DG அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்து இருக்கிறது.

    சபாஷ்! உத்திரவு மேல் உத்திரவாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், ஏதும் உருப்படியாக நமக்கு ஏதும் வந்த மாதிரி, ஏதும் செய்த மாதிரி இல்லை. தண்ணீர் தண்ணீர் படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ”ஆம். அத்திபட்டி கிராமத்திற்கு தண்ணீர் இல்லை” என்பது மாதிரி ”அதை (FAKE NOTE DETECTOR) தா, இதை (COUNTING MACHINE) ஏற்பாடுசெய்” என மேலிருந்து கீழ் வரை எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால்………………………................
டிசம்பர் 30 வரை பொறுமையாக காத்திருக்க வேண்டுமோ?


Monday, 21 November 2016


தெரிந்து கொள்வோம்




                              *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
    அதிகாரிகள் விரட்டுவதாலோ, மிரட்டுவதாலோ நாம் வேலை செய்வதில்லை. மக்களுக்கு  சிறந்த சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் பணி புரிகிறோம். மருத்துவமனைக்கே சென்று சேவை செய்வதும், ஏழைகள் நிறைந்த இட்த்திற்கே சென்று அவர்கள் குறை தீர்ப்பதும்  நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. பத்திரிக்கைகளும், பொதுமக்களும் பாராட்டுகின்றன. பாராட்டாவிட்டாலும் சேவை செய்த நிறைவு போதும் நமக்கு.

“Post office has always been a people’s organisation. It caters to the needs of the common man and this was one opportunity where we felt we need to reach out to those who are really in need of money at this time,”


தெரிந்து கொள்வோம்…..

     25000 ரூபாய்க்கு மேல் கிளை அஞ்சலகங்களில்(BO) பணம் (DEPOSIT) பெற்றுக் கொள்ள கூடாது  என்ற உத்திரவு 30.12.16 வரை விலக்கப் பட்டு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என இலாகா அறிவித்துள்ளது.

   பழைய 500/1000 ரூபாயை PLI/RPLI TRANSACTION-க்கு பெற்றுக் கொள்ளகூடாது என இலாகா அறிவிப்பு. 

Don't Need ID Copies To Exchange Old Currency Notes, Says Reserve Bank of India.  The Reserve Bank of India and head offices of most commercial banks have not asked banks to collect photocopies of customers' identities for exchange of old currency notes. ID- PHOTOCOPY தேவையில்லையாம். நமது நிர்வாகம் இதை அறியுமா?. அல்லது எதை பற்றியும் கவலை இல்லை. நான் சொன்னதை செய் என சொல்லுமா?.


Wednesday, 16 November 2016

DEVELOPMENTS ON THE CIRCLE WORKING COMMITTEE GOING ON 15TH & 16TH NOV.16 & DECISIONS OF THE DIVL/ BRANCH SECRETARIES MEETING OF CENTRAL REGION HELD ON 14.11.2016.



முன்கை எடுப்பதே தமிழ் மாநில  சங்கம் !தமிழ் மாநில COC ! 
ஒன்று பட்ட இயக்கமாக  JCA  அமைத்து போராட்டங்களை வகுப்பதும் தொழிலாளர் சக்திகளை ஊழியர் பிரச்சினையில் ஒன்று படுத்துவதும்  
பிரச்சினைகளுக்கு  தீர்வு காண்பதும் தமிழ் மாநிலமே !.

மேலே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டு 
கை  காட்டி முடங்கிக்  கிடப்பதல்ல நாம்  !

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பகுதி வாரிப் பிரச்சினைகளுக்காக 
அனைத்திந்திய பிரச்சினைகளையும் உள்ளடக்கி 
26.3.2015 ல் தமிழக  வேலை நிறுத்தம் !

அகில இந்திய பிரச்சினைகளில் ----

CBS/CIS பிரச்சினைகளில் முன்கைப் போராட்டம் !
OUTSOURCED POSTAL AGENCY  பிரச்சினையில்  முன்கைப் போராட்டம் !
SUNDAY/HOLIDAY DUTY ETAIL DELY பிரச்சினையில் முன்கைப் போராட்டம் !
GDS  உயர்த்தப்பட்ட போனஸ் மறுக்கப்பட்ட பிரச்சினையில் 
முன்கைப் போராட்டம் !
CASUAL ஊழியர்கள் பிரச்சினைகளில் முன்கைப் போராட்டம் ! 

இப்படி ஊழியர் பிரச்சினைகளில் வாதாடி, போராடி தீர்வு காண்பதே  நாம்! அறிவிக்கப்படும் போராட்டங்களை நடத்தாமல் இருப்பதல்ல நாம் !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

கடந்த 13.11.2016 அன்று மாநிலச் செயலர் பாபநாசம்  அஞ்சல் மூன்று  கிளை மாநாட்டில்  கலந்துகொண்டார். கடந்த 14.11.2016 அன்று புதுக்கோட்டையில் அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தினால் கூட்டப்பட்ட  மத்திய மண்டல அஞ்சல் மூன்று  கோட்ட /கிளை செயலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் மத்திய மண்டலத்தில் கோட்ட  நிர்வாகத்தில் எடுக்கப்படும் தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர்கள் பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகளின் அத்து மீறல்கள் குறித்தும் ஆழமாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் புதுக்கோட்டையில்  நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் மாநிலச் செயற்குழு கூட்டப்பட்டு அதில் பல்வேறு பட்ட ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தற்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை குறித்த அனைத்து விபரங்களும் உடனடியாக தலைமையகம் திரும்ப வேண்டியுள்ளதால்  தற்போதே வெளியிட இயலாது. 

எனினும் தற்போதைய ரூ. 500/- மற்றும் ரூ. 1000/- WOS ரூபாய் நோட்டுக்கள் மாற்றுதல்  மற்றும் கணக்குகளில் டெபாசிட் செய்தல் குறித்து  மத்திய அரசின் முடிவினாலும் , இது  குறித்து  துறை அமைச்சரின் உத்திரவினாலும் ,  தொடர்ந்த இலாக்கா உத்திரவுகளாலும்  தினசரி  பல்வேறு பிரச்சினைகள் ஊழியர்களுக்கு எழுந்த வண்ணம் உள்ளன . 

மேலும்  ஞாயிறு , விடுமுறை தினங்களில் அனைத்து பகுதி ஊழியர்களும் பணிக்கு வர  உத்திரவிடப்படுகிறார்கள். அது போல இரவு 08.00 மணிவரை COUNTER பணியும் அதன்பின்னர் இரவு 11.00 மணிவரை CASH  CONVEYANCE , SUB A /CS, TREASURY என பல்வேறாக பணி   செய்திட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் . இதற்கு உரிய POLICE பாதுகாப்பு அளிப்பதில்லை. பல கோடிக்கணக்கான பண வைப்புக்கு எந்தவித பாதுகாப்பும் செய்வதில்லை. எழுத்தர்கள், தபால்காரர்கள், MTS , GDS , RMS என்று எல்லா  பகுதிகளிலும் பாதிப்பு !

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் , துன்பத்திற்கு உள்ளாகி இருக்கும் ஊழியர்களை நிர்ப்பந்தித்து நம் துறை அதிகாரிகள் புதிய சேமிப்பு வங்கி கணக்குகள் துவக்கினால் மட்டுமே  பழைய நோட்டுகள் மாற்றப்படும் அல்லது டெபாசிட் செய்யப்பட்டு  WITHDRAWAL அளிக்கப்படும் என்று ஊழியர்களை குதிரை ஓட்டி  செயல்படாத  கணக்குகள் பிடிக்கச் சொல்கிற கொடுமை  இந்த இலாக்கா தவிர  வேறு எங்கும் நடைபெற வில்லை.

மேலும் போலி நோட்டுகளை கண்டறியும் கருவி அனைத்து அலுவலகங் களுக்கும்  உடனடியாக அளிப்பதாக CPMG  அவர்கள் நம் மாநிலச் செயலரிடம் உறுதி அளித்து இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் , பல கோட்டங்களில் குட்டி அதிகாரிகள் LPC போடுகிறேன் என்றும் COMPETING ESTIMATE  வாங்குகிறேன் என்றும்  FUND இல்லையென்றும் இழுத்தடிக்கும் கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. 

கோடிக்கணக்கில் வரும் பணத்தில் ஒன்று அல்லது இரண்டு கள்ள நோட்டுக்கள் வங்கிகளால் நிராகரிக்கப்பட்டால் அவற்றை ஊழியர்கள் தலையில் கட்டி  அந்த வேதனையில் அகமகிழ்வது என்று  குட்டி அதிகாரிகள் பலர் கொட்டமடிக்கின்றனர்.

ஞாயிறு , விடுமுறை தினங்கள் மேலும் 08.00 மணிவரை பணி  நீடிப்பு என்பதை நாம் எதிர்த்த போதிலும் இதுவரை பணியாற்றிய நாட்களுக்கு கூட எந்தவித பணப்பயனும் அளிக்கவில்லை. பல கோட்டங்களில் இவ்வாறு பணியாற்றிய ஊழியர்களுக்கு  குறைந்த பட்சம் TEA , COFFEE வாங்கிக்கொள்ளக்கூட அனுமதி அளிக்கவில்லை. ஆனால் பல கோட்டங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ததாக 'பாக்கெட்' செய்யப்பட்டதாக நமக்கு புகார்கள் வந்துகொண்டு உள்ளன.  S .O . க்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கோ கேட்கவே நாதி இல்லை என்ற நிலைமை .

மேலும் ஏற்கனவே முஹரம்  பண்டிகை தொடங்கி இது நாள்வரை, தொடர்ந்து ஞாயிறு  மற்றும் விடுமுறை தினங்களில்  ETAIL /ECOMMERCE /SPEED பட்டுவாடாவுக்கு ஊழியர்களை பணிக்கு நிர்ப்பந்தித்தல்  தொடர்கதையாகி ஊழியர்கள் கொத்தடிமை ஆக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட  உடனடியாக கீழே காணும் இரண்டு கட்ட போராட்டம் நடத்திடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1. எதிர்வரும் 18.11.2016 வெள்ளியன்று மாநிலம் தழுவிய அளவில் கருப்பு வண்ண கோரிக்கை அட்டை அணிந்து  அனைத்து  கோட்ட  நிர்வாக அலுவலகங்கள் முன்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

2.அதே நாளில்  மாநிலத்  தலைமையகமான சென்னையில் CPMG அலுவலகம் முன்பாக சென்னை பெருநகரத்தின்  கோட்ட /கிளைகளை உள்ளடக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடத்துதல் . அன்றைய தினத்தில் CPMG அவர்களிடம் அனைத்து பகுதி கோரிக்கைகளையும் உள்ளடக்கி  கோரிக்கை மனு அளித்தல்.

3.இதன் அடிப்படையில் பிரச்சினை தீர்க்கப்படவில்லையானால் எதிர்வரும் 27.11.2016 ஞாயிறு  அன்று  தமிழகம் முழுதும் பணி  மறுப்புப் போராட்டம்  நடத்துவது.

4. மேலும் NFPE  COC  மற்றும்  FNPO COC  யை அணுகி ஒன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு வழி வகுப்பது. அடுத்த கட்டமாக கூடுமானவரை JCA  அல்லது NFPE  COC ஐ  அணுகி  கோரிக்கைகளை ஒன்று படுத்தி  சட்ட பூர்வமான நோட்டீஸ் அளித்து ஒரு வேலை நிறுத்தத்தை அறிவிப்பது  என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி மூலமான தொடர்புகளை மேற்கொண்டு FNPO COC மற்றும் NFPE  COC  பொறுப்பாளர்களை அணுகி  பேசி வருகிறோம். ஒன்று பட்ட போராட்டத்திற்கு நாம் வழி வகுப்போம்.

மேலும்  நம்முடைய சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். பராசரிடம் அனைத்து பிரச்சினைகளும் தொலைபேசி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவரிடமும் இது குறித்து இலாக்கா செயலரிடம் பேசிட கூறியுள்ளோம். பேசியும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால் அகில இந்திய  அளவில் போராட்ட அறைகூவலையும் வேண்டியுள்ளோம்.

நம்முடைய CHIEF  அவர்களுக்கும்  உடனடியாக  பிரச்சினையில் தலையிட்டு அவரளவில் முடிந்த உடனடி  தீர்வு காண  SMS மூலம் புதுக்கோட்டையில் இருந்து  கோரிக்கை அனுப்பியுள்ளோம்.

அதன்  நகல் கீழே உங்கள் பார்வைக்கு :-

RESPECTED SIR,

SITUATION IS WORSENING DAY BY DAY. SO MANY ISSUES CROPPED UP. NO MONETARY COMPENSATION FOR SUNDAY/HOLIDAY/'EXTENDED DUTY. EVEN YOUR ASSURANCE ON FAKE NOTE DETECTOR IS NOT CARRIED OUT TILL TIME MOSTLY BY ALL. MANY OFFICERS ARE OBSERVING FORMALITIES IN FORMING LPC AND DELAYING BADLY. BUT WORKER CANNOT POSTPONE ANYTHING. RESULTING IN SLAPPING FURTHER PENALTY ON POOR WORKER ON LOSS IN FAKE NOTES. CPMG IS ALSO NOT MEETING STAFF UNIONS ON SUCH STATE OF EMERGENCY. WE HAVE PRESENTED EVERY THING BEFORE YOU. WE HAVE NO OTHER GO  EXCEPT TO STOP WORK, WHICH WILL BE DECIDED IN CWC AND ANNOUNCED SHORTLY= CIRCLE SECRETARY, NFPE P3 TN.

JCA முடிவு  எட்டியவுடன்  உடன் ஒன்று பட்ட போராட்டம் உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் வலைத்தளத்தில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளை உடன் அனைத்து பகுதி  JCA  தோழர்களுக்கும்  கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒன்று பட்ட போராட்டம் !                                  ஒன்றே நமது துயரோட்டும் !
ஒன்று படுவோம் !                                                                     போராடுவோம் !
போராடுவோம் !                                                                வெற்றி பெறுவோம் !--

Thursday, 10 November 2016

LOGO OF 31ST ALL INDIA CONFERENCE-2017 BANGALORE (KARNATAKA CIRCLE).PROPOSED DATES – 6th to 9th AUGUST-2017.






LOGO OF 31ST ALL INDIA CONFERENCE-2017 OF ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C SCHEDULED  TO BE HELD AT  BANGALORE (KARNATAKA CIRCLE).PROPOSED DATES – 6th to 9th AUGUST-2017.


Wednesday, 2 November 2016

WITHDRAWAL OF THE PROPOSED INDEFINITE HUNGER FAST IN FRONT OF DAK BHAWAN FROM 3rd NOVEMBER, 2016 AND TWO DAYS STRIKE ON 9th & 10th NOVEMBER 2016.


POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
ALL INDIA POSTAL EMPLOYEES UNION – GRAMIN DAK SEVAKS
NATIONAL UNION OF GRAMIN DAK SEVAKS
NEW DELHI - 110001
No.PF-PJCA-12/2016                                                                                                    Dated – 01.11.2016

To,
            The Secretary,
            Department of Posts,
            Dak Bhawan, New Delhi-110 001

Sub: Withdrawal of the proposed indefinite hunger fast in front of Dak Bhawan from 3rd November, 2016 and two days strike on 9th & 10th November 2016.
                                                                                 .....
                                               
Sir,

            While expressing our sincere thanks to you and the Postal Board for taking positive action for settling the demand for bonus parity to Gramin Dak Sevaks, we would like to request your sympathetic and immediate intervention for implementing the Directorate orders for payment of revised wages to Casual, Part time Contingent employees working in the Postal Department with effect from 01.01.2006. 

      The Directorate has issued orders for payment of revised wages (6th CPC minimum) to casual labourers in the month of January 2015. Subsequently the queries raised by some Chief PMGs were also clarified by Directorate. Even though 21 (twenty-one) months are over, the Directorate orders are not yet implemented in some circles. We have already brought the case to your notice and the notice of the concerned Chief PMGs several times, but the issue still remains unsettled. Hence we were compelled to include this demand also as the second demand of the proposed indefinite fast in front of Dak Bhawan from 3rd November and two days strike on 9th & 10th November 2016.

         As you have assured us that the grievances of this poor and most downtrodden section of workers will be settled in a time-bound manner, we hereby inform you that we have decided to withdraw the proposed hunger fast from 3rd November and two days strike on 9th & 10th November 2016.

          We once again request you to issue strict instructions to all Chief PMGs to implement the Directorate orders in a time bound manner, say, before 30th November 2016.
        
              Thanking you in anticipation

                                                                Yours faithfully
                                                                                                                        
R. N. PARASHAR                                                                                                    D. THEAGARAJAN
Secretary General                                                                                                          Secretary General
NFPE                                                                                                                                            FNPO
                                                                                                                       
                                                                                                                        
P. PANDURANGARAO                                                                                   P. U. MURALEEDHARAN
General Secretary                                                                                                           General Secretary
AIPEU-GDS                                                                                                                                 NUGDS