Running News

Monday 29 February 2016

...... GDS கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கருதரங்கத்தில் நமது கோட்டத்திலிருந்து 60க்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொண்டனர்.ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

GDS கருத்தரங்கம்.........

   GDS கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கருதரங்கத்தில் நமது கோட்டத்திலிருந்து 60க்கும் மேற்பட்டோர்  பேர் கலந்து கொண்டனர்.
Wednesday 24 February 2016

WATCH KALAIGNAR TV...

  கடந்த 17.02.2016 அன்று மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் செயலரிடம் கலைஞர் TV தொலைக் காட்சி நிறுவனத்தால் ஒரு சிறப்பு நேர்காணல்  பதிவு செய்யப்பட்டது. 

அந்தப் பதிவு  எதிர்வரும்  25.02.2016 அன்று காலை கலைஞர் தொலைக் காட்சி PRIME  சேனலில் 08.00 முதல் 08.30 மணி வரை காலை வணக்கம் - "சிறப்பு விருந்தினர்"  பகுதியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் அளித்துள்ளார்கள். 

இந்த நிகழ்ச்சியில் மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்,  மத்திய அரசுத் துறைகளில் அரசின் அந்நிய  மற்றும் தனியார் முதலீட்டுக் கொள்கை,  ஏழாவது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கை மற்றும் எதிர்வரும் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்த கேள்விகளுக்கு நமது மாநிலச் செயலர்  பதில் அளித்துள்ளார் .  இந்த ஒளிபரப்பை நமது தோழர்/ தோழியர்கள் பார்க்கவும்.  இதர தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.

Friday 19 February 2016

CBS PROBLEMS................

CBS PROBLEMS................

  CBS குளறுபடிகள் பற்றி தொடர்ந்து நாம் மட்டுமல்ல, மாநில, மத்திய சங்கங்களும் தொடர்ந்து முறையிட்டு, அதை சரி செய்ய தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளன. ஏற்கனவே இலாகாவுக்கும், துறை அமைச்சருக்கும் அகில இந்திய சங்கம் கடிதம் எழுதி உள்ளதை நம் மாநில சங்க வலைதளத்தில் பார்வையிட்டு இருப்பீர்கள். இன்று ஒரு கடிதம் அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. நகல் கீழே தரப்பட்டுள்ளது.  

SUPPLEMENTARY LETTER TO THE HON`BLE MINISTER OF COMMUNICATIONS & IT ON CBS/CIS PROBLEMS.


National Federation of Postal Employees
1st Floor North Avenue Post Office Building, New Delhi-110 001       
Phone: 011.23092771                                                      e-mail:nfpehq@gmail.com
  Mob: 9868819295/9810853981                          website: http://www.nfpe.blogspot.com
---------------------------------------------------------------------------------------------------------------------------
No.PF-35/CBS/2016                                                                     Dated : 18th February,201

To
            Sh. Ravi Shankar Prasad
            Hon’ble Minister
            Communication & IT

Sub: Miseries and untold sufferings faced by the staff in CBS &CIS rolled out offices throughout the nation – Immediate and personal intervention requested to rein in the situation.

Respected Sir,

            In continuation of this Federation’s letter of even no. dated 20.1.2016  , we submit the following additional issues for immediate settlement in order to avoid chaos and stalemate in the service in the near future due to the hasty migration of CBS & CIS.

(i)      Whenever migration takes place, Finacle becomes abnormally slow and every single transactions take too long and the customer at the counter gets irritated and become Quarrelsome. If this lacuna is not rectified at the earliest, it is prone to invite undue displeasure of customers and endanger our customer base.

(ii)    Similarly ATM transactions are irritating the customers. In many occasions, cash is not dispensed out of APM while transactions occur and amount is debited from their account. Such scenario occurs in other banks ATM also, but reversal transactions are done within a day or two. Whereas in Finacle, it takes weeks together that too, after several mails from R.O. & C.O.

(iii)   The Finacle software being used in post offices are based on universal banking solutions and not universal Postal solutions. We have not heard about single handed banks, whereas 60% of Post office in India are now functioning in single handed status only. The SPMs of single handed offices have to work is operator ID and then come out. Again he should log on with supervisor ID for a single transaction which not only consumes a lot of time but also irritate the public who are standing in queue.

(iv)   Some of the office accounts like 339 (used for BOs) and 340 (used for issuing cheques) can be misused to fund any ones account with crores and crores of rupees as there is no maximum ceiling for our SB accounts as one date.

(v)    For example, CXFER can be used to fund one’s near and dear accounts in which teller cash will not get raised and simultaneously one can take withdrawals from other SOL (CBS offices) Kashmir to Kannyakumari as there is no cap on other SOL (Service outlet) withdrawal prescribed by the Postal department.

(vi)   It is opt to bring to your kind notice that some of the banking giants like SBI, ICICI etc. are leveraging services charges for other branch withdrawals and deposits other than through their cash vending machines like ATMs etc.

(vii)  In the case of single handed offices, both the operator and supervisor remain the same, there are chances of fraud and misappropriation of money and falsification of records. For example, a single handed SPM can take print outs at any point of time and then he can amount the same in his account by using SB CASH and thereafter he can use ‘CXFER’ to fund some one’s account in which teller cash will not get raised. It is not in practice or practicable that the SBCO officials are tallying the Finacle balance of a particular SOL (branch/office) with their S.O. account.

(viii)      Thereafter,  it is suggested that there should be a cap on other SOL withdrawals both in terms of maximum amount and number and customers who wish to use other SOL should be given a SB ID and that request should be given by them at the time of opening the accounts.

(ix)         This is the serious problem which has not been attended so far by the department that most of the deputations to single handed offices are ordered without changing the SOL ID of the deputation incumbent and Single handed SPMs are forced to giver USER ID and Password to the deputed officials in order to avail of their leave, training etc. and also to avoid unnecessary public complaint in their officers which is against the DOPT orders as there is no secrecy in passwords. This issue has not been resolved. There is every chance for the miscreants to misuse the USER ID of other in different computers and defrauding the Government money. At later stage, forgetting the smooth functioning in the absence of no arrangement, the poor innocent official will be proceeded under the contributory negligence factor. This must be set right forthwith.

(x)          Interest on loan could not be accounted in Finacle Software in the case of loan accounts in which loan amount paid off completely prior to migration period and interest on loan is still pending in the loan account in post migration period. There is scope of defrauding the funds by the fraudulent people by misusing the provision.

(xi)         In short the Postal Department is working for the vendors and not for its own. Despite ‘Sifi’  has not provided the required speed and service deteriorated, there is no penal action taken against them and the staff alone is being harassed. Some of the issues like SSA LOT are not coming in HFINRPT menu i.e the report menu and the staff are using indirect methods to get the LOT and till now the Department has not taken any efforts to get the work done from our vendor. The need for torturing the Postal officials for the benefits of vendors is best known to the Postal Department.

            The above are only the tips of ice berg. There are many more issues confronting the service and customers, have not been solved so far. The twenty issues which requires urgent attention in our earlier letter, have not yet been addressed by the Department. Whereas it is extending the migration of offices without providing necessary bandwidth, Computer peripheral etc. unless necessary peripherals are supplied and available, how can it be implanted smoothly in the Postal Department. We request the Hon’ble Minister once again to intervene in this regard.

            Further we are submitting below the problems being faced at Post offices after the migration and the solution also in a table for the immediate action by the Hon’ble Minister of communication by directly to department to settle all these issues as if fire at the top of the roof.

Description
Problem faced
Solution needed
Login Issues
1.    User Already Logged in
2.    User has exceeded three attempts. User ID is locked

Most of the time due to frequent disconnection of Internet connectivity and during the delayed process in SERVER these two issues are being faced.
(1) the user either supervisor or System Admin should use the Menu CSAC. But when Super faces same situation and if System Admin is not in a position to attend the case, CPC to be called to rectify the Issue. (which is always busy and the issue with CPC is   dealt later)
1.It is stated by INFOSYS that the SACKING the user already logged in will be reset within 5 minutes but it is not happening so. HENCE REQUESTED TO WIPE OUT THIS SCENARIO.(IN MCAMISH SOFTWARE NOSUCH ALREADY LOGGED IN ISSUE)
2.  Though there cannot be any compromise on security the unlocking facility to be given to Divisional level SPOC and System Admin.
List of Transactions SSA
There is no provision till date to view or print SSA LOT. At present we use HFTI menu (using Sub ledger 30042) to print a list of particulars of transactions alone without any Total. Users physically arrive the Total with ref to vouchers.
Menu for SSA LOT is needed.
MIS Reports

There are two servers
1.    Production Server and MIS Server. Production Server is one where the daily day transactions are stored and where the LOT for the current day alone can be taken.
2.    MIS Server is utilized for taking all reports for the older period other than the current day.

Most of the cases the MIS URL says “the page is under maintenance “

Or the BOD (day Begin is much older the Current day).  Hence the  LOTs could not be printed for the previous day
Maintenance of MIS server with the current BOD.
Training Server
The BOD of the Training Server is 26122014 and so for the training server is not reset to current date. The training is limited to certain extend and full-fledged training could not be imparted

The training server should be reset with current date by deleting all older data that have been stored over two years.SIFY ISSUES:-
Toll free numbers
The issues faced like network down, Modem Failure, Tower issues, we used to call Toll Free number. Now the same cannot be used as the AGREEMENT Period is over. In case of any issues with sify we have to send a email/lodge a complaint in SIFY PORTAL which may not be  possible as network is down.
Requested to restore TOLL FREE NUMBERS.
Monitoring by SIFY
During the initial period the important locations (WEGs) where monitored by SIFY. In case of any downs in primary (BSNL) or secondary (sify)link  SUO MOTTO action was taken by sify .
Now the monitoring is not done by SIFY. The PO should send a email/ use the web portal to lodge a complaint
SIFY should monitor the functioning / Down condition of sites and should take SUO MOTTO action.
Bandwidth
The minimum bandwidth is 128kbps (NSP II) and maximum is 256 kbps for C and B class offices.
256 and 512 for other class other than HOs .
Except HOs all other smaller units are suffering due to low bandwidth.
To be enhanced to 512 at C and B class level.
To be enhanced up to 1 MBPS for units for rest of the units other than HPOs.
Supply of BIO METRIC devices.

To enhance more security

Cutoff date for updating
Past premium postings introduced in Mc Camish.

PLI dte. lr. Dt.9.2.16 says that .csv files will no longer be available after 15.03.2016, while BOs are allowed to
accept premiums and there is large no. of non migration exists.
No cutoff date should be fixed, till 100% migration of NIC data to 'CIS' is confirmed. Migrations were made in a hasty manner, to satisfy the higher officers, resulting in heavy non postings. Further, BOs are permitted to accept premiums anywhere, which could not be posted again, if cutoff date is fixed. Despite of these, if cutoff date is fixed, responsibility will be fixed on poor ground level officials for wrong/ short payments.

           
            Once again we request your honour to kindly intervene and save the Postal service by stopping the speedy migration. We are not against modernization. CBS & CIS we are praying that all the loopholes, problems in the existing software be rectified and let it be user friendly before the expansion of CBS. All the issues narrated above may please be considered and attended.

            With profound regards,
Yours sincerely,

(R. N. Parashar)

FLOOD ADVANCE ORDER RELEASED BY PMG CCR ; INSTRUCTIONS OF CPMG , TN IN CMC MEETING ; TEYNAMPET WATER PROBLEM

FLOOD ADVANCE ORDER RELEASED BY PMG CCR ; INSTRUCTIONS OF CPMG , TN IN CMC MEETING ; TEYNAMPET WATER PROBLEM

                                    NATURAL  CALAMITY  ADVANCE 

வெள்ள முன்பணம் வழங்கிட இன்று சென்னை பெருநகர மண்டலத்தில்  உத்திரவு வழங்கப்பட்டது. அதன் நகல் கீழே  காண்க .

இன்று நடைபெற்ற CMC  கூட்டத்தில்  நமது CPMG  அவர்கள் , அனைத்து மண்டல PMG க்களுக்கும் அவரது உத்திரவை அமல்படுத்திடுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும்  ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படை யில்   

                                              சென்னை பெருநகர மண்டலத்தில் 

1.  சென்னை  மாநகரம் / மாவட்டம் 
2.  காஞ்சிபுரம் மாவட்டம் 
3.  திருவள்ளூர்  மாவட்டம் 
4.  விழுப்புரம்  பகுதி 
5. பாண்டிச்சேரி  U /T 

ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....

மத்திய மண்டலத்தில் 

1. கடலூர்  மாவட்டம் 
2. நாகை மாவட்டம் 

ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....

தென் மண்டலத்தில் 

1. கன்னியாகுமரி மாவட்டம் 
2. தூத்துக்குடி மாவட்டம் 
3. திருநெல்வேலி மாவட்டம் 

ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....

முன்பணம்  உடனடியாக வழங்கிட அறிவுறுத்தியுள்ளார். 

இதர பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு  உரிய விசாரணை செய்து அதன் அடிப்படையில் வழங்கலாம்  என்று  அறிவுறுத்தியுள்ளார்.
======================================================================

தேனாம்பேட்டை ஊழியர்  குடியிருப்பு   
தண்ணீர் பிரச்சினை 

இன்று  காலை முதல்  VIDEO  CONFERENCE ,  அஞ்சல் வாரிய  உறுப்பினர் வருகை ,   அனைத்து PMGக்கள்  வருகை புரிந்த  CMC கூட்டம் என்று தொடர்ச்சியாக மாநில அதிகாரிகள் இருந்தபோதிலும் ,  நமது மாநிலச் சங்கத்தின் மூலம் தேனாம்பேட்டை ஊழியர் குடியிருப்பு  தண்ணீர் பிரச்சினை  குறித்து கடிதம் அளித்து   கீழ் மட்ட அதிகாரிகளிடம் பேசினோம். 

மேலும் CHIEF  PMG மற்றும்  PMG CCR  அவர்களையும் தொடர்பு கொண்டோம். இதன் மீது உடன்  நடவடிக்கை எடுத்திட  SSP  மத்திய கோட்டத்தை  அறிவுறுத்தியது மல்லாமல்  உடனடியாக  குடிதண்ணீர் மற்றும்  இதர தேவைகளுக்கான தண்ணீர் வழங்கிட  இரண்டு  MOTOR கள் வாடகை அடிப்படையில் பெற்று பொருத்திடுமாறு  உடன்  உத்திரவு அளித்துள்ளதாக  நம்மிடம்  இரு அதிகாரிகளும் தெரிவித்துள்ளார்கள். 

எனவே  SSP சென்னை மத்திய கோட்டம்  அவர்கள்  இனியும்  தனது பொறுப்பை  தட்டிக் கழித்திடாமல் (உடனடி தண்ணீர் வழங்கிட வாடகை MOTOR ஏற்பாடு செய்வதுகூட CHIEF PMG வேலை என்று கருதாமல்உடனடியாக  நடவடிக்கை எடுத்து, நாளையேனும்   பாதிக்கப்பட்ட ஊழியர் குடும்பங்களுக்கு   தண்ணீர்  வழங்கிட வேண்டுகிறோம்.  

காலிக் குடங்களுடன் சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடக் கிளம்பிய தாய்க் குலங்களை   CPMG  மற்றும் PMG CCR மீது  நம்பிக்கை வைத்து பிரச்சினையை  தீர்த்து வைப்பதாக  உறுதி கூறி  நமது சங்கம்தான் தடுத்து நிறுத்தியுள்ளது  என்பதை   சென்னை  மத்திய கோட்ட நிர்வாகி உணரவேண்டும்  என்பதையும்  அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப்  பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து  உடனடி நடவடிக்கை எடுத்திட  உத்திரவிட்ட  CPMG,TN  மற்றும்  PMG CCR  ஆகியோருக்கு நம் நன்றி  

Monday 15 February 2016

GDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்.

GDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்.....

GDS மாநில சங்கம் நடத்தும் கருத்தரங்கத்தில் பெரும் அளவில் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாநில சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 
                                                        *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

GDS  ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் , எதிர்வரும்  GDS உறுப்பினர் சரி பார்ப்பில் அனைத்து GDS  ஊழியர்களையும்   NFPE  GDS சங்கத்தில் இணைத்திட வேண்டியும் , எதிர்வரும்  28.2.2016  அன்று திருச்சி ரயில்வே  ஜங்ஷன் அருகே  உள்ள  SRMU  சங்கக் கட்டிடத்தில்   தமிழகம் தழுவிய அளவிலான  ஒரு மாபெரும் GDS  ஊழியர்  கருத்தரங்கம்   தமிழ் மாநில  GDS  சங்கத்தினால் ஏற்பாடு செய்து   நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து NFPE  மாநிலச் சங்கங்களின்  செயலர்கள், நிர்வாகிகள்  கலந்துகொள்ள உள்ளார்கள்.  

கருத்தரங்கில்   சிறப்பு  அழைப்பாளர்களாக  தோழர்கள் .   M . கிருஷ்ணன், R .N . பராசர் , P . பாண்டுரங்கராவ் , K . ராகவேந்திரன்,   K .V . ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு  பல்வேறு தலைப்புகளில்  கருத்தரங்க  உரை நிகழ்த்த உள்ளார்கள். இது குறித்த அறிவிப்பு  மாநில GDS  சங்கத்தினால் தனியே வெளியிடப்பட்டுள்ளது. எனவே  தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தோழர்கள் / தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க  வேண்டுகிறோம்.

                                              தோழமை வாழ்த்துக்களுடன் 

J . இராமமூர்த்தி, 
மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்

Sunday 14 February 2016

CONFEDERATION NATIONAL EXECUTIVE COMMITTEE/ NJCA / PJCA DECISIONS

CONFEDERATION NATIONAL EXECUTIVE COMMITTEE/ NJCA / PJCA DECISIONS

 தலைநகர  மற்றும் மாநில 
அளவிலான  செய்திகள் 

கடந்த 12.02.2016  அன்று புது டெல்லியில் நடைபெற்ற மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின்  தேசிய செயற்குழு  கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முக்கி யமான   முடிவுகள்  குறித்த  மகா    சம்மேளனத்தின்    பொதுச்    செயலரின் சுற்றறிக்கையை   கீழே  இணைப்பில்  காணவும்.
இதன்படி முக்கியமாக 

1.  11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் 
     அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் .
2.  11.3.2016 அன்று புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மிகப் பெரிய மத்திய 
     அரசு ஊழியர்  பேரணி நடத்துதல்.
3.  மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மாநிலத் தலை 
    நகரங்களிலும்  மிகப் பெரும் ஊழியர் பேரணி நடத்துதல். இதில் NJCA 
    அகில இந்திய   தலைவர்களை கலந்து கொள்ளச் செய்தல்.
4.  29.3.2016 அன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் "SOLIDARITY  DAY " 
     கடைபிடித்தல் .
5.  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அனைத்து நிர்வாகிகள்/ 
     மாவட்ட  நிர்வாகிகள்  மற்றும் அனைத்து சங்கங்களின்  நிர்வாகிகள் 
     அடங்கிய கூட்டம்  அனைத்து மாநிலத்  தலைநகரங்களிலும்  ஏற்பாடு 
     செய்தல் . அதில் மகா  சம்மேளனத்தின் அகில இந்திய நிர்வாகிகள் 
     கலந்துகொண்டு  வேலை நிறுத்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தல். 
     இது தமிழகத்தில் 25.3.2016 அன்று நடைபெறும். இதில் தோழர்கள் . M . 
     கிருஷ்ணன்,  மணி ஆச்சாரி, துரைபாண்டியன்,  வெங்கடசுப்ரமணியன் 
     ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
6.  NJCA  தலைவர்கள்  அந்தந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சி 
     தலைமை  மற்றும்  பாராளுமன்ற / ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு 
    மத்திய அரசு ஊழியர்  கோரிக்கைகளை தீர்த்து வைத்திட உடன் 
     தலையிடுமாறு  கடிதம்  அனுப்பவேண்டும்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  
அகில இந்திய மாநாடு  மற்றும்  மாநில மாநாடு 

1. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு
  எதிர்வரும் ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 தேதிகளில்  தமிழகத்தில் 
   நடைபெறும்.  (இதற்கு முன்னதாக  மகா சம்மேளனத்தின்  தமிழ்  மாநில 
   மாநாடும்   நடைபெற   உள்ளது )
2.  இந்த மாநாட்டை ஒட்டி , 27.8.2016 அன்று அரை நாள் ,  அகில இந்திய
    அளவிலான மகளிர் கருத்தரங்கம்  இதே மாநாட்டு நிகழ்வில் நடைபெற 
      உள்ளது.
3.  அகில இந்திய மாநாட்டு  சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம் 
     ரூ. 1000/- .  மகளிர்  கருத்தரங்கில் மட்டும் கலந்து கொள்பவர்களுக்கு 
     சார்பாளர்  கட்டணம் ரூ. 400/-.
4.  ஜூன் மாதத்தின் முதல் பகுதியில்  மகா சம்மேளனத்தின் தொழிற்சங்க 
    பயிற்சி முகாம்  உத்திரகண்ட்  மாநிலத்தின் டேராடூன்  பகுதியில் 
     நடைபெற  உள்ளது.

கடந்த   8.2.2016   அன்று   புது   டெல்லியில்   நடைபெற்ற   NJCA   கூட்டத்தின் 
முடிவுகள் அடங்கிய சுற்றறிக்கை மற்றும் கோரிக்கை மனு   கீழே  உள்ள இணைப்பில் காணவும் .இதன்படி முக்கியமாக 

1.  11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் 
     அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் . ஆர்ப்பாட்டம் நடத்துதல்.
2.  11.3.2016 அன்று புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மிகப் பெரிய மத்திய 
    அரசு ஊழியர்  பேரணி நடத்துதல். காபினெட் செயலரிடம் வேலை 
    நிறுத்த நோட்டீஸ்  NJCA  தலைவர்கள்  வழங்குதல்.
3.  மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மாநிலத் தலை 
     நகரங்களிலும்  மிகப் பெரும் ஊழியர் பேரணி நடத்துதல். இதில் NJCA 
     அகில இந்திய  தலைவர்களை கலந்து  கொள்ளுதல்.
4.  29.3.2016 அன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் "SOLIDARITY  DAY " 
     கடைபிடித்தல் .
5.  காலவரையற்ற வேலை நிறுத்தம் எதிர்வரும் 11.4.2016 காலை 06.00 
      மணிமுதல்  துவக்குதல்.
6.   துறைவாரிக் கோரிக்கைகளை   பகுதி II ஆக  அந்தந்த பகுதி சங்கங்கள் 
      தங்களது  வேலை நிறுத்த நோட்டீஸ் உடன் சேர்த்து வழங்குதல்.

கடந்த 08.02.2016 அன்று புது டெல்லியில் நடைபெற்ற POSTAL  JCA   (NFPE & FNPO )  கூட்டத்தின்   முடிவுகள் ஏற்கனவே நம் வலைத்தளத்தில் பிரசுரித் துள்ளோம்.  இருப்பினும் அதன் முக்கிய அம்சங்கள் கீழே  தமிழில்    தரப் படுகின்றன .1.  11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் 
     அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் . ஆர்ப்பாட்டம் நடத்துதல்.
2. அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கோரிக்கைகளை
    வலியுறுத்தி  எதிர்வரும் 18.3.2016 அன்று முழு நாள் தார்ணா  போராட்டம் 
    நடத்துதல்.  ( அரை மணி நேர  ஆர்ப்பாட்டம்  அல்ல ).
3.  கோரிக்கைகளை வலியுறுத்தி CPMG  அலுவலகம் முன்பாக எதிர்வரும் 
     06.04.2016 அன்று  முழு நாள் தார்ணா  போராட்டம் நடத்துதல்.
4.  11.4.2016 காலை 06.00 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் 
     மேற்கொள்ளுதல்.

கோரிக்கைகள் :-

 1. ஏழாவது ஊதியக் குழு தொடர்பான  NJCA  மூலம் சமர்ப்பிக்கப்பட்ட 
      கோரிக்கைகளை தீர்த்து வை.
2.  அனைத்து GDS  ஊழியர்களுக்கும்  அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கு .
      விகிதாசார அடிப்படையில்  GDS  ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கு.
3.  கோரிக்கை மனுவில் அளிக்கப் பட்டபடி அஞ்சல் துறை ஊழியர் 
     களுக்கென்ற  உயர்த்தப் பட்ட ஊதியம்  வழங்கு.
4.  ஏழாவது ஊதியக் குழு அறிக்கை அமலாவதற்குள்  கேடர்  சீரமைப்புத் 
      திட்டத்தை  அமலாக்கு.
5. CBS/CIS  தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் உடன் தீர்த்து வை.
6.  அஞ்சல் , RMS  அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து
     காலியிடங்களையும்   சிறப்பு   தேர்வு நடத்தி உடனே  நிரப்பு.
7.   தகுதியான அனைத்து CASUAL  ஊழியர்களையும் நிரந்தரம் செய்.
     அவர்களுக்கு வழங்க வேண்டிய 1.1.2006 முதலான நிலுவைத் 
    தொகையை  உடனே  வழங்கு.


  GDS  ஊழியர்  உறுப்பினர் சரிபார்ப்பும்  கருத்தரங்கும் 
GDS  ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் , எதிர்வரும்  GDS உறுப்பினர் சரி பார்ப்பில் அனைத்து GDS  ஊழியர்களையும்   NFPE  GDS சங்கத்தில் இணைத்திட வேண்டியும் , எதிர்வரும்  28.3.2016  அன்று திருச்சி ரயில்வே  ஜங்ஷன் அருகே  உள்ள  SRMU  சங்கக் கட்டிடத்தில்   தமிழகம் தழுவிய அளவிலான  ஒரு மாபெரும் GDS  ஊழியர்  கருத்தரங்கம்   தமிழ் மாநில  GDS  சங்கத்தினால் ஏற்பாடு செய்து   நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து NFPE  மாநிலச் சங்கங்களின்  செயலர்கள், நிர்வாகிகள்  கலந்துகொள்ள உள்ளார்கள்.  

கருத்தரங்கில்   சிறப்பு  அழைப்பாளர்களாக  தோழர்கள் .   M . கிருஷ்ணன், R .N . பராசர் , P . பாண்டுரங்கராவ் , K . ராகவேந்திரன்,   K .V . ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு  பல்வேறு தலைப்புகளில்  கருத்தரங்க  உரை நிகழ்த்த உள்ளார்கள். இது குறித்த அறிவிப்பு  மாநில GDS  சங்கத்தினால் தனியே வெளியிடப்பட்டுள்ளது. எனவே  தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தோழர்கள் / தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க  வேண்டுகிறோம்.

                                              தோழமை வாழ்த்துக்களுடன் 

J . இராமமூர்த்தி, 
மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்.

Tuesday 2 February 2016

TN JCA ( NFPE & FNPO ) ON AGITATIONAL PATH - CIRLE WIDE THREE PHASED AGITATION DECIDED IN JCA MEETING HELD ON 2.2.2016 AT PARK TOWN HPO

TN JCA ( NFPE & FNPO ) ON AGITATIONAL PATH - CIRLE WIDE THREE PHASED AGITATION DECIDED IN JCA MEETING HELD ON 2.2.2016 AT PARK TOWN HPO


போராட்டப் பாதையில் தமிழக  JCA !

2.2.2016 - NFPE /FNPO-JCA  கூட்டத்தின்  முடிவுகள் !


அன்புத் தோழர்களுக்கு  வணக்கம்.  கடந்த 27.1.2016 அன்று  PMG, CCR அவர்களுடன்  தமிழக அஞ்சல்  JCA  சார்பில் நடத்திய  பேச்சு வார்த்தை குறித்தும்  அதன் வெளிப்பாடாக  அளிக்கப்பட்ட வாக்குறுதியும் உங்களுக்கு  தெரிவித்திருந்தோம். மேலும்  அதன் மறுநாள்  DPS CCR அவர்களும்  பிரச்சினை  தீர்க்கப்பட  உத்திரவு  அளிக்கப்பட உள்ளது என்று  தெரிவித்திருந்தார்.  ஆனால் ,  அளிக்கப்பட்ட உறுதி மொழி களுக்கு மாறாக,  தபால்காரர்  பணிகளுக்கு  பதிலி  அளிக்க அனுமதிக் காமல்  மேலும் பணிகளை   நெருக்குவதற்கான   உத்திரவு  வெளியிடப் பட்டது.  


பணியிழந்த  27 CASUAL  ஊழியர்களையும்  குறைந்தபட்ச தினக் கூலி அடிப்படையில்  PICK  UP AGENT , MARKETING  பகுதி,  COLLECTION , PASTING, PINNING  என்ற  BPC வகைப் பணிகளை, அதுவும் கூட , எந்தவித உத்திரவும் இல்லாமல்  வாய்மொழியாக  பணியளிக்க  நிர்வாகத்தினர் அழைத்தனர். 


இது  ஏனென்றால்  , SPEED  மற்றும்  BUSINESS  PARCEL  PICK UPக்கு  ஆகும் செலவு மட்டுமே  ரூ. 86000/- வரும் என்று  SENIOR MANAGER, MMS தெரிவித்ததாலும், வேறு  எதுவும் செய்ய இயலாதென்று  அவர்  கை விரித்ததாலும், 10 நாட்களாக  வணிகப் பணிகள் முடங்கியதாலுமே இந்த முடிவு. மேலும் இவர்கள்  PICK  UP மட்டுமே  செய்வார்கள். BOOKING , DESPATCH  க்கு மீண்டும் வேறு  ஆள் தேடவேண்டும். அதற்கான  ஒரு மாத செலவு என்பது   மேலும்  கூடுதலாகும்.                                                                                அதுவும்  இரண்டு VAN  மட்டுமே  DIVERT  செய்ய முடியும் என்றும் அதற்கு இரண்டுOUTSOURCED  DRIVER  ( மீண்டும்  புதிய  CASUAL LABOURER) தனியே  அமர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்  தெரிவித்ததே காரணம் . ஆனால் ஏற்கனவே இருக்கும் CASUALஊழியர்களுக்கு மாதம் ரூ.50000/- கூட செலவு செய்யவில்லை  நிர்வாகம். 

                                              
ஆக நிர்வாகத்தின் வீண்  பிடிவாதத்தால்  கடந்த 10 நாட்களில் ஆயிரக் கணக்கான SPEED மற்றும் BUSINESS  PARCEL  சேவை பாதித்தது மட்டுமல்லாமல், தபால்   காரர்களை  COMBINED DUTY போட்டதால் ஆயிரக்கணக்கில்  தபால்  டெலிவரி சேவை  பாதிப்பும் உள்ளாகியுள்ளது. இந்த நிலை  அண்ணா சாலையில் மட்டு மல்ல சென்னை GPO விலும்தான். கிட்டத்தட்ட இதே நிலைதான்  சென்னை FGN POST, வடசென்னைமத்திய சென்னைதென் சென்னை  மற்றும் தாம்பரம் கோட்டங்களிலும்.  
  
எனவே  இது குறித்து முடிவெடுக்க  NFPE மற்றும்  FNPO தமிழ் மாநில JCA கூட்டம்2.2.2016 அன்று  சென்னை பூங்கா நகர்  தலைமை அஞ்சலகத்தில் கூட்டப்பட்டது. இதில்  NFPE மற்றும் FNPO  சங்கங் களின்  பெரும்பகுதி மாநிலச் செயலர்கள்மாநில நிர்வாகிகள்சென்னை பெருநகர  கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்ட னர். இதில்  மேலே கண்ட தபால்காரர் /MTS  மற்றும்  CASUAL  ஊழியர்கள் பிரச்சினை மட்டுமல்லாமல்இதர  பகுதிப் பிரச்சினைகளும் பேசப்பட்டன. 

இறுதியில் மேலே  கண்ட இரண்டு பிரச்சினைகளுடன்தமிழகத்தில் ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்கும்  அஞ்சல், RMS பகுதிகளின் மிக முக்கிய (HARASSMENT OF STAFF IN THE NAME OF TARGET உள்ளிட்ட) பிரச்சினைகளை  உள்ளடக்கி  தமிழகம்  தழுவிய  அளவில்   JCA   சார்பில்
மூன்று  கட்ட போராட்டத்தை  நடத்துவதென்று  முடிவெடுக்கப் பட்டது.  

அனைத்து சங்கங்களையும் கலந்துகொண்டு  இதற்கான சுற்றறிக்கை எதிர் வரும்  08.2.2016 க்குள் தயார் செய்து  அனுப்புவது என்றும் , 

மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் அனைத்து  கோட்டங்களிலும்  JCAசார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி  முதற் கட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது - கோரிக்கை மனு அளிப்பது எனவும் , 

பிரச்சினை தீர்க்கப்படவில்லை எனில் ,  நான்காவது  வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனவும்,  அதற்குப் பிறகும் நிர்வாகம்பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை  தீர்க்கவில்லை எனில்

மூன்றாவது  கட்டம்  தமிழகம் தழுவிய  அளவில்  முழு  வேலைநிறுத்தம் அறிவிப்பது என்றும், இதற்கான  தேதி   மற்றும்  கணக்கீடு  இரண்டாவது கட்ட போராட்டத்தின்போது JCAவின் தலைவர்களால் அறிவிக்கப்படும் என்றும்  முடிவெடுக்கப்பட்டது.

கேட்டுப் பார்ப்போம் !  பேசிப் பார்ப்போம் !
கோரிக்கை  மனு  அளித்துப் பார்ப்போம் !
ஆர்ப்பாட்டம்  நடத்திப் பார்ப்போம் !
உண்ணா நோன்பிருப்போம்!

இதன் பிறகும்  கேளாச் செவியினராய்  இருப்பார்களேயானால்
வேலை  வேலை  நிறுத்தம்  ஒன்றே  நம்  இறுதி  ஆயுதம் !
ஒன்று பட்ட  போராட்டம் ஒன்றே  நம்  துயரோட்டும் !

ஓங்கட்டும் தொழிலாளர்  ஒற்றுமை !
ஒடியட்டும் அடிமை  விலங்கு
பிறக்கட்டும் சுதந்திர கீதம் !

கூட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில்
சில உங்களின் பார்வைக்கு .