Running News

Thursday, 31 March 2016

மாநில, மத்திய சங்கங்களின் உடனடி முயற்சிக்கு வெற்றி !


மாநில, மத்திய சங்கங்களின் 
உடனடி முயற்சிக்கு  வெற்றி !

VIRTUALLY NOW THE ORDER IS CANCELLED.

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு மணி நேரங்களுக்குள் மின்னல் வேகத்தில்  ஈடுபட்டு  இலாக்காவின்  உத்தரவு மாற்றப் பட்டுள்ளது.  உத்திரவின் நகல் கீழே பார்க்க.  உடனடியாக  நம் தமிழக அஞ்சல் மூன்றின்  கோரிக்கையை ஏற்று  விரைந்து  நடவடிக்கை எடுத்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலரும் , சம்மேளன மா பொதுச் செயலருமான  தோழர். R .N .பராசர் அவர்களுக்கு நம் நன்றி. 
=======================================================================

Sir

The Directorate instruction is forwarded herewith for necessary action.

With regards,

Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan
 =======================================================================

---------- Forwarded message ----------
From: CPMG Tamilnadu Circle <cpmg_tn@indiapost.gov.in>
Date: 31 March 2016 at 11:55
Subject: Fw: Opening of Post office till 10.00 PM today.
To: "tamilnadusb@gmail.com" <tamilnadusb@gmail.com>
Cc: "dpshqtn@gmail.com" <dpshqtn@gmail.com>

Sent: Thursday, March 31, 2016 

To: ​pmgccr sb; CBS Madurai; cbsrowr CBE; Regional IT Team, Tiruchirappalli Region; Datamigration controlroom; Cc: Technology Tamil Nadu Circle; circle processing centre CBS

Subject: Fwd: Fw: Opening of Post office till 10.00 PM today.

Sir

In continuation of the mail , I am directed to inform you the remarks of CPMG on the above 

" Only if there is work, not otherwise and the lady staff may not be detained unnecessarily"


INSTANT NEWS RECEIVED FROM SECRETARY GENERAL, NFPE/GENERAL SECRETARY,AIPEU GR. C CHQ - DETAILS WILL FOLLOW


Orders opening of Post Offices upto 10 p.m.  modified. Where there is no work,  P.O. will not be kept open and LADY STAFF will not be detained beyond 7 p.m.

        Instructions from Directorate have been issued to all Head of Circles.

         R.N. Parashar
Secretary General NFPE &
General Secretary P-III



Tuesday, 29 March 2016

ORDER ISSUED BY CPMG , TN ON OUR DEMAND FOR PAYMENT OF SALARY ON 1.4.2016 ON CASH/OPTIONAL BASIS




ORDER ISSUED BY CPMG , TN ON OUR DEMAND FOR PAYMENT OF SALARY ON 1.4.2016 ON CASH/OPTIONAL BASIS

நமது அஞ்சல் மூன்று  மாநிலச் சங்கத்தின் மூலம் ஏற்கனவே கடந்த 23.3.2016 அன்று ஒரு கடிதமும்  கடந்த 28.3.2016 அன்று ஒரு கடிதமும் அளித்துப் பேசியிருந்தோம். முதலாவது கடிதத்தில் வைக்கைப்பட்ட கோரிக்கைப்படி கடந்த GOOD FRIDAY  அன்று காஞ்சிபுரத்தில் வைக்கப் பட்ட MELA  அன்றைய தேதியில் ரத்து செய்யப்பட்டது. 

அதேபோல  கடந்த 27.03.2016 ஞாயிறு அன்று சென்னை பெரு நகர மண்டலத்தில் SPECIAL SB COUNTER  பல அலுவலகங்களில் வைத்திட உத்திரவிடப்பட்டிருந்தது. இந்த உத்திரவையும் ரத்து செய்திடக் கோரியிருந்தோம். இதில் விருப்பமில்லாத எந்த ஒரு ஊழியரையும் கட்டாயப் படுத்தி பணி செய்திட அழைக்கக்  கூடாது ,  என்ற உத்திரவை நிர்வாகம் அளித்தது. அதன்படி பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் பணி  செய்திட வரவில்லை. ஒரு  சில அலுவலகங்களில் விருப்பமுள்ள ஊழியர்கள் மட்டுமே பணிக்கு  வந்தனர்.

நம்முடைய இரண்டாவது கடிதத்தின் அடிப்படியில் , எதிர்வரும் 1.4.2016 அன்று FINACLE  சரிவர  இயங்காத நிலையில், ஊழியரின்  ஊதியம் பணப் பட்டுவாடாவாக செய்திட உத்திரவு பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு போல அல்லாமல் விரைந்து முடிவெடுத்த  நம்முடைய  CPMG  அவர்களுக்கு நம்முடைய  நன்றி.  ஓய்வூதியர்களுக்கான முடிவினையும் விரைந்து எடுத்திட  வேண்டுகிறோம். உத்திரவின் நகல் கீழே  காண்க .


Monday, 28 March 2016

SECRETARY GENERAL NFPE AND FNPO TODAY MET MEMBER TECH. AND MEMBER (P) ON CBS AND CIS ISSUES AND THE OUTCOME.










           CBS / CIS  பிரச்சினையில்  நாம் !
        ===============================================
                  அன்பார்ந்த தோழர்களே !  தோழியர்களே !! வணக்கம் !!!
நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இன்று நமது அஞ்சல் மூன்று பொதுச் செயலரும் சம்மேளன மாபொதுச் செயலருமான  தோழர்  பராசர் அவர்கள்   MEMBER(P)  மற்றும்  MEMBER (TECH ) இருவரையும்  FNPO  பொதுச் செயலருடன் சென்று சந்தித்ததாலும்,(இடையில் மூன்று நாட்கள் நிர்வாக அலுவலகங் களுக்கு விடுமுறை என்பதால்  நம்முடைய பொதுச் செயலர்  DTE  செல்ல  இயலவில்லை )

நம்முடைய கடிதம் ஏற்கனவே இலாக்காவுக்கு  அனுப்பப்பட்டதாலும் ஏற்பட்ட முன்னேற்றம்,  அதன் தொடர்ச்சியாக இலாக்காவில் இருந்து அளிக்கப்பட்டிருக்கும் ஈமெயில்  நகல் கீழே காண்க

ஏற்கனவே கடந்த 24.3.2016 அன்று சென்னையில் நடைபெற்ற  நம்முடைய  மாநிலச் சங்க நிர்வாகிகள்  கூட்டத்தின்  முடிவின்படி , இந்தப் பிரச்சினை தீரவில்லையானால்   இதர சங்கங்களையும் கலந்துகொண்டு  ஒரு வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது குறித்து அன்றே SMS  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  அளிக்கப் பட்டது  தெரிந்ததே. நம்முடைய பொதுச் செயலருக்கும் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.  

அதன் அடிப்படையில் அஞ்சல் நான்கு மற்றும் GDS சங்கத்தையும் அவர்களின் பிரச்சினைகளையும் சேர்த்தே போராட்டம் நடத்திட நாம் அணுகியுள்ளோம்.  கூட்டத்தின் முழு விபரங்களை  அடுத்த செய்தியில் வெளியிடுகிறோம்.  

நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வலைத்தளம் மற்றும் ஈமெயில்  , SMS  மூலம் உடனுக்கு உடன் அனைத்து நிர்வாகிகள் , செயலர்களுக்கு அவ்வப்போதே தெரிவிக்கப்படுகிறது. முகநூலிலும் அவ்வப்போதே பொதுச் செய்தியாக  பகிரப்படுகிறது

பிரச்சினையில், இலாக்கா  உயர் அதிகாரிகள்  அளித்த கீழே காணும் ஈமெயில்படி,   முன்னேற்றம்  ஏற்படவில்லையானால் அஞ்சல் மூன்று  மாநிலச் சங்க முடிவுகளை   தேவை  ஏற்படின் தனியாகக் கூட அமல்படுத்திட இந்த மாநிலச் சங்கம் தயங்காது என்பதையும் நம்முடைய நிர்வாகிகள், செயலர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.  

கடந்த  ஆண்டில் 26.3.2015 அன்று ,  30 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தல மட்ட கோரிக்கைகளுக்காகக்கூட  வேலை நிறுத்தம் நடத்திய   உறுதி மிக்க மாநிலச் சங்கம் இது என்பதை  நாம்  தெரிவித்துக் கொள்கிறோம். எந்தக் காலத்திலும் பொறுப்பில் இருந்து ஓடி ஒளிந்ததில்லை நம்முடைய  மாநிலச் சங்கம் .
====================================================
கீழே பார்க்க மா பொதுச் செயலரின் செய்தியை :-

FUNCTIONING OF CBS

            Today on dated 28.03.2016, Com. R.N. Parashar Secretary General NFPE along with Com. D. Theagarajan Secretary General FNPO met with Shri V.B. Sudhakar, Member (Technology) and Shri Ashutosh Tripathi, Member (Personal) and apprised of the worst situation being faced by Postal Staff due to CBS.

            After detailed discussion, the following remedial measures have been declared by the Department.
_____________________________
Director (Technology) directortech@indiapost.gov.in   (Copy of Email: 28.03.2016)
1:58 PM (53 minutes ago)


            In response to your concerns regarding CBS functioning, I am directed to inform the following



    1. Two to three levels of EOD will be done centrally from CEPT, Mysuru from 1st April, 2016.( இது தமிழகத்தில் ஏற்கனவே நமது போராட்டத்தின் மூலம் நாம் பெற்று அமலான உத்திரவே )

    2. Two additional servers are being provided at the Data Centre     today so that additional load can be absorbed. (ஏற்கனவே இருக்கும்  SERVER தனது CAPACITY ஐத் தாண்டி வேலை செய்ய வேண்டி உள்ளதால் புதிதாக  இரண்டு SERVER கள்  DATA CENTRE இல் வைக்கப்படும் )

    3. The Business Continuity Plan (BCP) has been permitted by the     FS Division from 23.03.2016. This will enable operations to be     done across the counter.

    4. An Emergency Response Team (ERT) has been constituted at  CEPT, Mysuru to deal with outages.

    5. A top to bottom review of the Application is being undertaken     to ensure smooth operations.

        Your co-operation is sought for effective implementation of CBS.
This issues with approval of Member (Technology).

 sd/-

B.P.Sridevi