All India Postal Employees Union - Group 'C' - Karur Division - 639 001.e-Mail: nfpekarur@gmail.com
Wednesday, 31 December 2014
Tuesday, 30 December 2014
INFORMAL MEETING WITH CPMG(I/C), TN ON STAFF MATTERS
INFORMAL MEETING WITH CPMG(I/C), TN ON STAFF MATTERS
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நமது CPMG அவர்களிடம் நாம் ஏற்கனவே கடந்த 24.12.2014 அன்று சிறப்பு நேர்காணலுக்கு நேரம் அளித்திட வேண்டி கடிதம் அளித்திருந்தோம். ஆனால் அவர் CAMP சென்று விட்ட காரணத்தாலும் தொடர்ந்து விடுப்பில் சென்ற காரணத்தாலும் அவரது வழிகாட்டுதலின்படி இன்று (30.12.2014) நமது CPMG (I/C) திரு. S .C . BARMMA அவர்களைச் சந்தித்து தேங்கிக் கிடக்கும் பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் குறித்து தனித்தனியே கடிதங்கள் அளித்து பேசினோம்.
இந்த நேர்காணலில் நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்களுடன் , மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநில நிதிச் செயலர் தோழர். A வீரமணி , மற்றும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேட்டி சுமூகமாக நடைபெற்றது.
இதில் பேசப்பட்ட சில முக்கியமான பிரச்சினைகள், அதன் மீது அளிக்கப்பட்ட பதில் (சுருக்கமாக) ஆகியவைகளை கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம். இன்று அதிகம் செய்திகள் வெளியிட்டிருப்பதால் , குறிப்பாக JCM MINUTES அளிக்கப் பட்டிருப்பதால் , நம்மால் அளிக்கப் பட்ட கடிதங்களின் நகல்களை எதிர்வரும் ஜனவரி 01 ஆம் தேதி பிரசுரிக்கிறோம்.
1. பொங்கல் பண்டிகை காலத்தில் PTC மதுரையில் வைக்கப் பட்டிருக்கும் MACP பயிற்சி வகுப்புகளை மாற்றி அமைக்க வேண்டி .
DIRECTOR PTC யுடன் கலந்து நாளை முடிவெடுக்கப்படும்.
2. LSG பதவி உயர்வு அளிப்பதில் கால தாமதம் குறித்து
DTE க்கு இது குறித்து உடன் முடிவு அளித்திட மூன்றாவது D.O .
REMINDER அளிக்கப் பட்டுள்ளது . உரிய உயர் அதிகாரியுடன் CPMG
தொலைபேசியில் தொடர்புகொண்டு வேண்டியுள்ளார்.
3. HSG I பதவிகளை புதிய RECTT RULES அடிப்படையில் நிரப்பிட வேண்டி
ஆவன நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.(JCM DC MINUTES பார்க்க )
4. FOREIGN POST AIR COMPLEX இல் புதிதாக துவங்கியுள்ள PARCEL
BOOKING அலுவலகத்தை உரிய TRANSACTION இல்லாததால் உடன்
மூடுமாறு வேண்டி
உடன் பரிசீலிக்கப்படும்.
5. CASUAL LABOUR ஞாயிறு ஊதியம் மற்றும் DA வேண்டி
பரிசீலனையில் உள்ளது. ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
6. அனைத்து தேர்வு முடிவுகளிலும் ABNORMAL DELAY குறித்து
உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
7. GDS BPM களின் INITIAL FIXATION OF PAY குறித்து
பிரச்சினை உள்ள கோட்டங்களில் இருந்து அறிக்கை பெறப்பட்டு
உடன் ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
8. பாதிக்கப் பட்ட வாணியம்பாடி அஞ்சல் அதிகாரி குறித்து
அவரது மனு மீது உடன் ஆவன நடவடிக்கை எடுக்கப்படும்.
9. பாதிக்கப்பட்ட அம்பத்தூர் கணக்காளர் குறித்து
அவரது மனு CHIEF PMG வந்தவுடன் அவரது பார்வைக்கு அளிக்கப்படும்.
================================================================
இது தவிர PMG, CCR அவர்களிடம் மத்திய சென்னை கோட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத செயல்பாடுகள் குறித்து இரு கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன . இவையும் எதிர்வரும் 01.01.2015 அன்று வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
Saturday, 27 December 2014
REVISION OF CASH HANDLING ALLOWANCE - LONG PENDING ITEM SETTLED IN JCM DC MEETING HELD ON 16.12.2014
REVISION OF CASH HANDLING ALLOWANCE - LONG PENDING ITEM SETTLED IN JCM DC MEETING HELD ON 16.12.2014
கடந்த 16.12.2014 அன்று டெல்லியில் நடைபெற்ற JCM இலாக்கா குழு கூட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப் படாமல் நிலுவையில் இருந்த 'REVISION OF SPM CASH HANDLING ALLOWANCE ' என்ற அஞ்சல் மூன்றின் பிரச்சினை நமது பொதுச் செயலர் தோழர். N . சுப்பிரமணியன் அவர்களின் தீவிர முயற்சியால் அன்றைய தினமே SPOT ORDER ஆக கூட்டத்திலேயே பெறப்பட்டுள்ளது . இது இலாக்காவில் இருந்து அனுப்பப் படும் முறைப்படியான உத்திரவு இல்லையெனினும் , உடன் முறையான உத்திரவு அளிக்கப்படும் என்பதற்கான உத்திரவாதத்தை எழுத்து மூலம் கூட்டம் நடக்கும் நாளிலேயே பெறுவதென்பது குறிப்பிடத்தகுந்த சிறப்பான ஒரு செயலாகும். இதற்காக தோழர். N .S . அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள் !
குறிப்பாக இப்படி ஒரு அலவன்ஸ் உண்டு என்பது கூட நம்மில் பெரும்பகுதி தோழர்களுக்கு தெரியாது. நிறைய இடங்களில் 'C ' மற்றும் 'B ' CLASS SPM கள் இதனைப் பெறுவதற்கு மாதாந்திர CASH HANDLING தொகை எவ்வளவு என்று எடுத்து அதில் இருந்து ஒரு நாளைக்கு AVERAGE தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து STATEMENT ஆக அனுப்பி அதற்கு உரிய CASH HANDLING ALLOWANCE CLAIM செய்வது இல்லை என்பதே உண்மை. ஏற்கனவே ரூ. 70/- மற்றும் ரூ.140/- இருந்த காலங்களில்கூட இதனை பல தோழர்கள் பெற்றது கிடையாது .
இது போலத்தான் AGENCY முறையில் நாம் செய்திடும் BUSINESS VENTURE வேலைகளுக்கு, அதற்காக நம் இலாக்காவிற்கு அளிக்கப்படும் கமிசன் தொகையில் 25% அதில் வேலை செய்பவர்களுக்கு INCENTIVE ஆகப் பெறமுடியும் என்பதும் பலருக்கு தெரியாது.
நாம் பலமுறை எடுத்துக் கூறியும் எவரும் CLAIM செய்வதும் இல்லை. உரிய வேலைப் பளு கணக்கிடு வதற்கான TIME FACTOR வழங்கப் படாத எந்த ஒரு B.D. வேலைகளுக்கும் இந்த உத்திரவு பொருந்தும். இதற்கான உத்திரவை ஏற்கனவே DEPT இல் நம் சங்கத்தின் மூலம் போராடிப் பெற்றிருந்தும் அது செயல்படுத்தப் படுவதில்லை என்று நம் மாநிலச் செயலர் RJCM இல் பிரச்சினையை எடுத்து அதன் மீது மீண்டும் உத்திரவு பெற்று அதன் நகலை இதே வலைத்தளத்திலும் பிரசுரித்துள்ளார் என்பது உண்மை .
உதாரணமாக EB BILL பெறுவதில் இலாக்காவுக்கு ஒரு BILL க்கு ரூ. 10/- கமிசன் ஆக கொடுக்கப் பட்டால் , அதில் வேலை செய்பவர்களுக்கு ரூ.2.50 INCENTIVE ஆக CLAIM செய்திட உரிமை உண்டு . SUPERVISOR 0.50 காசுகளும் எழுத்தர் ரூ.2.00 ம் என்ற விகிதத்தில் மொத்தம் எவ்வளவு BILL கள் பெறப்பட்டதோ அதற்கான தொகை கணக்கீடு செய்து மாதாந்திர BILL CLAIM செய்து வாங்கிடலாம்.
நம்முடைய கோட்ட/ கிளைச் செயலர்கள் நாம் பெற்ற இந்த உரிமைகளை அடிமட்ட ஊழியர்களுக்கு கொண்டு சென்று சேர்த்திட முயற்சி மேற் கொண்டிட வேண்டுகிறோம். இந்த செய்திகளை அனைத்து வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொண்டிட வேண்டுகிறோம்.
CASH HANDLING ALLOWANCE SPOT ORDER நகலை கீழே பார்க்கவும் :-
Tuesday, 23 December 2014
CAN’T RECOVER EXCESS SALARY PAID TO CLASS III, IV STAFF SUPREME COURT
Tuesday, December 23, 2014
CAN’T
RECOVER EXCESS SALARY PAID TO CLASS III, IV STAFF
SUPREME
COURT
Press News by TOI
NEW DELHI:
Recovery of excess amount paid to Class-III and Class-IV employees due to
employer's mistake is not permissible in law, the Supreme Court has ruled
saying that it would cause extremely harsh consequences to them who are totally
dependent on their wages to run their family.
The apex
court said employees of lower rung service spend their entire earning in the
upkeep and welfare of their family, and if such excess payment is allowed to be
recovered from them, it would cause them far more hardship, than the reciprocal
gains to the employer.
A bench of
JS Khehar and Arun Mishra also directed that an employer cannot recover excess
amount in case of a retired employee or one who is to retire within one year
and where recovery process is initiated five years after excess payment.
"We
are therefore satisfied in concluding, that such recovery from employees
belonging to the lower rungs (i.e., Class-III and Class-IV - sometimes denoted
as Group 'C' and Group 'D') of service, should not be subjected to the ordeal
of any recovery, even though they were beneficiaries of receiving higher
emoluments, than were due to them. Such recovery would be iniquitous and
arbitrary and therefore would also breach the mandate contained in Article 14
of the Constitution," Justice Khehar, who wrote the judgment said.
It said
that the employer's right to recover has to compared, with the effect of the
recovery on the concerned employee and if the effect of the recovery from the
employee would be, more unfair, more wrongful, more improper, and more unwarranted,
than the corresponding right of the employer, which would then make it
iniquitous and arbitrary, to effect the recovery.
"In such a situation, the employee's right would
outbalance, and therefore eclipse, the right of the employer to recover,"
the bench said.
The bench
passed the order on a petition filed by Punjab government challenging Punjab
and Haryana high court order restraining it to recover the excess amount paid
by mistake to numerous employees over the years.
It said we may, as a ready reference, summarize the following
few situations, wherein recoveries by the employers, would be impermissible in
law:
(i) Recovery from employees belonging to Class-III and Class-IV
service (or Group 'C' and Group 'D' service).
(ii) Recovery from retired employees, or employees who are due
to retire within one year, of the order of recovery.
(iii) Recovery from employees, when the excess payment has been
made for a period in excess of five years, before the order of recovery is
issued.
(iv) Recovery in cases where an employee has wrongfully been
required to discharge duties of a higher post, and has been paid accordingly,
even though he should have rightfully been required to work against an inferior
post.
(v) In any other case, where the Court arrives at the
conclusion, that recovery if made from the employee, would be iniquitous or
harsh or arbitrary to such an extent, as would far outweigh the equitable
balance of the employer's right to recover.
The court
said a government employee is primarily dependent on his wages, and such
deduction from salary should not be allowed which would make it difficult for
the employee to provide for the needs of his family and any recovery must be
done within five years.
In this case, the employees were given monetary benefits in excess of their entitlement due to a mistake committed by a concerned competent authority, in determining the emoluments payable to them.
Monday, 22 December 2014
Min of Personnel, Public Grievances & Pensions NO REDUCTION IN RETIREMENT AGE
Friday, December 19, 2014
Min of Personnel, Public Grievances & Pensions
NO REDUCTION IN RETIREMENT AGE
|
There is no proposal under consideration of Government to reduce the retirement age from 60 to 58 years for its employees.
The retirement age for Central Government employees was revised from 58 to 60 years in 1997 on the basis of recommendations of the 5th Central Pay Commission.
The Centre’s total wages and salaries bill for its employees for the year 2010-11, 2011-12 and 2012-13 is Rs. 85,963.50 crore, Rs. 92,264.88 crore and Rs. 1,04,759.71 crore, respectively.
This was stated by the Minister of State for Personnel, Public Grievances & Pensions, Dr. Jitendra Singh in a written reply to Sardar Sukhdev Singh Dhindsa, Dr. T Subbarami Reddy and Smt. Ambika Soni in Rajya Sabha, today.
|
Monday, 15 December 2014
PLEASE ATTEND IN MASS AT NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS TO BE HELD AT CHENNAI ON 21.12.2014 ...
தமிழக NFPE அழைக்கிறது ; அலை கடலெனத் திரள்வீர் NFPE யின் மணி விழா சிறக்கட்டும் ; புது யுகம் பிறக்கட்டும் . அணி அணியாய் ஆர்ப்பரிப்பீர் ; NFPE க்கு அணி சேர்ப்பீர் . PLEASE ATTEND IN MASS AT NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS TO BE HELD AT CHENNAI ON 21.12.2014 ...
Friday, 12 December 2014
தோழர்.K.G.போஸ் நினைவு தினம் டிசம்பர் 11
தோழர்.K.G.போஸ் நினைவு தினம் டிசம்பர் 11
உன்னத உழைப்பாளி மேற்கு வங்கம் தந்த K.G.போஸ்.
*1946 தபால்காரர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
அனைத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தமாக மாற்றிய
பெருமைக்குரிய தோழர். K.G.போஸ்.
*1960 போராட்டப் பின்னணியில் " ஜூலை 12 கமிட்டி" என்ற
ஒரு போராட்ட அமைப்பை ஏற்படுத்தி அனைத்து
பொதுத்துறை-அரசுத்துறை ஊழியர்களை மேற்குவங்கத்தில்
ஒன்றிணைத்தவர் K.G.போஸ்.
*இறுதி மூச்சுவரை அஞ்சல் இயக்கத்தைப் பற்றியே சிந்தித்த
இத்தலைவரின் நினைவு நாள் டிசம்பர் 11.
*கொடிதாழ்த்தி அத்தலைவரை நினைவு கூர்வோம்.
தொடர்ந்து அவர் வழியில் பயணித்து, இப்பொழுதுள்ள
சவால்களை துணிவுடன் முறியடிப்போம்.
Thursday, 11 December 2014
வாழ்வா ? சாவா ? போராட்டம்
WHETHER DEPARTMENT OF POSTS TO BE CORPORATISED ? DANGER AHEAD ?
வாழ்வா ? சாவா ? போராட்டம்
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . நாம் நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே நடத்திய நான்கு மண்டலங்களின் பயிற்சி வகுப்பில்
நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலரின் தலைப்பான " அஞ்சல் துறையின் எதிர்காலமும் நம் தொழிற் சங்க கடமையும் " என்ற தலைப்பில் நம் துறை எதிர்காலத்தில் BSNL போல CORPORATION ஆக்கப் பட்டு தனியார் மயத்தை நோக்கி செல்ல உள்ளது என்பதை சுட்டிக் காட்டி வந்துள்ளோம் .
NATIONAL POSTAL POLICY 2012 இன் அடிப்படையிலும் I.T. MODERNISATION PROJECT 2012 இன் அடிப்படையிலும் அரசின் இந்த திரை மறைவுத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதன் ஆபத்தை தெளிவாகவே சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.
தற்போது " TASK FORCE ON LEVERAGING THE POST OFFICE NETWORK " என்பது அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது. நாம் எதிர்பார்த்தபடியே நம் துறையை CORPORATISE செய்திட அதில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது " NOW THE CAT IS JUMPED OUT OF THE BAG " என்ற மரபுச் சொல்லின் (IDIOM) அடிப்படையில் நம்முடைய மாநிலச் சங்கம் ஏற்கனவே கூறி வந்த செய்தி உண்மை என அறியப்படுகிறது .
இந்திய அஞ்சல் துறை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு 'INDIA POST (FINANCIAL AND OTHER SERVICES) CORPORATION என்று மாற்றப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இது COMPANY சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
இதனை ஒட்டியே நம்முடைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன
மாபொதுச் செலாளர் தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கீழே காணும் கட்டுரையை நமக்கு அளித்துள்ளார். முழுவதும் இதனை படித்திட நாம் வேண்டுகிறோம்.
அரசின் இந்த மோசமான , நம்முடைய இலாகாவையே தனியாருக்கு தாரை வார்த்திடும் முயற்சியை நாம் முறியடித்திட வேண்டும். தொடர் போராட்டங்களை நாம் நடத்திட வேண்டிய சூழ்நிலையில் தற்போது இருக்கிறோம். இதனை தெளிவாக அடிமட்ட ஊழியர்கள் வரை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
Monday, 8 December 2014
4TH DECEMBER 2014 HISTORIC PARLIAMENT MARCH A GRAND SUCCESS
4TH DECEMBER 2014 HISTORIC PARLIAMENT MARCH A GRAND SUCCESS
அன்புத் தோழர்களே வணக்கம் !
கடந்த 04.12.2014 அன்று புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து பாராளுமன்றம் நோக்கிய அஞ்சல் JCA வின் 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பேரணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
ஊர்வலம் கிட்டத்தட்ட 1.5 KM தொலைவு நடைபெற்றது. அஞ்சல் RMS பகுதியில் இருந்து JCA சார்பில் 15000 க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்துகொண்டது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் அனைத்து மைய தொழிற்சங்கங்கள் சார்பாகவோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் சார்பாகவோ அல்லது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாகவோதான் பாராளுமன்றம் நோக்கிய பேரணிகள் நடைபெற்றுள்ளன.
முதல் முறையாக தற்போது அஞ்சல் ஊழியர்கள் மட்டுமே நமது 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என்பது அஞ்சல் தொழிற் சங்க வரலாறு ஆகும். இதில் தமிழகத்தில் இருந்து சுமார் 700 ஊழியர்களுக்கு மேல் கலந்துகொண்டது மேலும் புதிய வரலாற்றினைப் படைத்துள்ளது. சென்னை அண்ணா சாலை , தென் சென்னை , காஞ்சிபுரம், பாண்டிச்சேரி ,திருவண்ணாமலை , ராணிபேட்டை , வேலூர் , திருப்பத்தூர், குடியாத்தம் ,சேலம் கிழக்கு , திருப்பூர் , மேட்டுப் பாளையம் , ஊட்டி, தருமபுரி , புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட கோட்ட/கிளைகளில் இருந்து அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, GDS தோழர்கள் பெருவாரியாகக் கலந்துகொண்டது தமிழக அஞ்சல் இயக்கத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது.
தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட அனைத்து தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கும் அதற்கு ஏற்பாடுகள் செய்து கலந்துகொள்ளச் செய்த அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். கண்ணன், GDS சங்க மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ், நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அணிவகுத்து போர்ப் பரணி கொண்டது தமிழகத்திற்கு பெருமையாகும். பேரணி நிகழ்வுகள் குறித்து நமது சம்மேளனம் சார்பில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.
Thursday, 4 December 2014
INDEFINITE STRIKE FROM 6TH MAY 2015
MORE THAN 15000 POSTAL & RMS EMPLOYEES INCLUDING GRAMIN DAK SEWAKS & CASUAL, PART TIME, CONTINGENT EMPLOYEES PARTICIPATED
INDEFINITE STRIKE FROM 6TH MAY 2015
About 15000 Postal Employees marched to Parliament today under the banner of Postal Joint Council of Action (NFPE, FNPO, AIPEU-GDS (NFPE) & NUGDS). Employees from all the 22 circles participated in the historic march with colorful banners, flags and caps shouting slogans against the negative attitude of the Government towards the demands of the Postal Employees. Grant of Civil Servant Status to Gramin Dak Sevaks and inclusion in 7th CPC, Merger of DA and grant of interim relief to all employees, scrap new pension scheme, Revision of wages of casual, Part-time contingent employees, implementation of cadre Restructuring committee report, settle 39 point charter of demands are the main demands raised in the Parliament March.
The rally was inaugurated by Com. A. K. Padmanabhan, All India President, CITU. Shri. M. Raghavaiyya (General Secretary, NFIR & Leader JCM National Council). Com. Shiv Gopal Mishra (General Secretary, AIRF & Secretary JCM National Council), Com. S. K. Vyas, Advisor, Confederation, Com. M. Krishnan (Ex-Secretary General, NFPE & Secretary General, Confederation of Central Government Employees & Workers) Com. R. N. Parashar (Secretary General, NFPE) Shri D. Theagarajan (Secretary General, FNPO), Com. M. S. Raja (Secretary General, Audit & Accounts Employees Association), Com. Vrigu Bhattacharjee (Secretary General, Civil Accounts Employees Association), Com. K. Raghavendran (Ex-Secretary General, NFPE) addressed the rally. Com. Girirraj Singh (President, NFPE) Com. T. N. Rahate (President, FNPO) presided. General Secretaries of all affiliated unions/Associations of NFPE, FNPO and General Secretaries of AIPEU-GDs (NFPE), NUGDS have lead the March to Parliament. Postal Joint Council of Action declared nationwide indefinite strike from 6th May 2015. If the Government is not ready to settle the demands before that date. The date of the strike was fixed as 6th May, taking into consideration the fact that the JCM National Council National Convention to be held on 11th December will be declaring series of agitational programmes during the month of February, March and April 2015.
Monday, 1 December 2014
Subscribe to:
Posts (Atom)