Running News

Thursday, 31 October 2013

Retirement of K Manoharan & K Jeganathan

                                          வாழ்த்துகிறோம் !
 
 
  தோழர். K. MANOHARAN (SPM, T.ALAI) அவர்கள் &
  
  தோழர். K. JEGANATHAN (SPM, VAIGAINALLUR) அவர்கள்

அரசுப் பணி  நிறைவு பெறும்  நாளில்  அவர் எல்லா நலன்களும் , வளமும்
 
 பெற்று  நீடு வாழ KARURஅஞ்சல் மூன்று சங்கம், நெஞ்சார்ந்த
 
 வாழ்த்துக்களை  பதிவு செய்கின்றது. 
 
by
 
A.PALANISAMY (SECRETARY NFPE P3 , KARUR)
 
VISWANATHAN ( PRESEIDEN NFPE P3, KARUR)
 
& NFPE P3 MEMBERS
 

DIWALI WISHES


தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம் 
          இன்று 24.06.2013-ல் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          அதே போன்று காலியாக இருந்த மாநில அமைப்பு செயலாளர் பதவிக்கு திருச்சி கோட்ட செயலாளர் தோழர் S.கோவிந்தராஜன் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



















 

 
          புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை NFPE சம்மேளனத்தின் துணை பொது செயலாளர் தோழர் K.ரகுபதி, அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் செயல் தலைவர் தோழர் N.G., தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில செயலாளர் தோழர் V.ராஜேந்திரன் முன்னிலையில் மாநில தலைவர் தோழர் G.கண்ணன்தலைமையேற்று நடத்திய மாநில செயற்குழு  கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட அகில இந்திய அஞ்சல் நான்கின் பொது செயலாளர் தோழர் ஈஸ்வர் சிங் தபாஸ் இன்றைய சூழ்நிலைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

          இறுதியாக மாநில பொருளாளர் தோழர் R.வெங்கடரமணி நன்றி கூற செயற்குழு கூட்டம் இனிதே முடிவடைந்தது. 

 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு KARUR கோட்ட அஞ்சல் நான்கு,P3 ,GDS சங்கம் வீர வாழ்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

Wednesday, 23 October 2013

DIVISIONAL/BRANCH SECRETARIES MEETING AND TRADE UNION STUDY CAMP OF CENTRAL REGION

அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கம் ! 

 நமது மாநிலச் சங்கத்தின் முந்தைய தீர்மானத்தின் அடிப்படையில் , மதுரை  மற்றும்  கோவை மண்டலங்களைத் தொடர்ந்து  மத்திய மண்டலமான 

திருச்சி மண்டலத்தின்  அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்ட / கிளைச்  செயலர்கள் கூட்டம் எதிர்வரும்  09.11.2013 சனியன்றும் ,  மத்திய மண்டலத்தின் தொழிற்சங்க பயிலரங்கு  எதிர்வரும் 10.11.2013 ஞாயிறு அன்றும் 

கீழே காணும் இடத்தில்  சிறப்பாக நடத்திட  திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன .

 IFPAAW Rural workers Education Centre, 
Trichy - Chennai high road,

Thuraimangalam, Four Road, Perambalur - 621 220

இதற்கான விரிவான அறிவிப்பு சுற்றறிக்கை வாயிலாக வரும் வாரத்தில் வெளியிடப்படும். நமது முன்னாள் பொதுச் செயலரும் , மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு தலைவருமான தோழர். KVS  அவர்கள் இலாக்கா விதிகள்,  நடத்தை விதிகள், தண்டனை விதிகள் , பாதுகாப்பு விதிகள் உள்ளிட்டவைகளை  POWER  POINT  வடிவில் உங்களுக்கு வழங்கிட உள்ளார்கள் என்பது ஒரு உபரிச் செய்தி . 

இது தவிர  STUDY  MATERIALS  மதுரை, கோவை மண்டலக் கூட்டங்களில்  தந்ததை விட அதிக  அளவில் , பல புதிய விபரங்களுடன் உங்களுக்கு அளிக்கப் பட உள்ளது . ஆகவே  மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் பெருமளவில் நிர்வாகிளை உள்ளடக்கிய , இளைஞர்களையும் , தோழியர்களையும் கலந்து கொண்டிட  ஏற்பாடுகளை  இப்போதிருந்தே செய்திட வேண்டுகிறோம். 

கோட்ட/ கிளைச் செயலர்கள்  கோட்ட அளவில்  அதிகாரியிடம் எடுக்கப் பட்டும் தீர்க்கப் படாமல்   பகுதியில் தேங்கிக் கிடக்கும் ஊழியர்  பிரச்சினைகளை  பட்டியலிட்டு , முழு விபரங்களுடன்  தங்களுடைய LETTER  PAD  இல் TYPE  செய்து  கூட்டத்திற்கு எடுத்து வரவேண்டும் என்று கண்டிப்பாக கோரப்படுகிறது . அதுபோல  அனைத்து கோட்ட/ கிளைச் செயர்களும்  தவறுதல் இன்றி கண்டிப்பாக இந்த இரண்டு நாட்கள் நிகழ்விலும் கலந்துகொண்டிட வேண்டும் என்று அறிவிக்கிறோம்.

மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் செய்தது போலவே உணவு மற்றும் இதர ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் படுகின்றன  .  அவசியம் இளைய தோழர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். 

இந்த செய்தியையே முன்னறிவிப்பாகக் கொண்டு இதனை பார்க்கும் தோழர்கள் , இதர தோழர்களுக்கும் இந்த விபரங்களை தெரிவித்திட வேண்டுகிறோம்.

நிகழ்விடம்  - ஏற்பாடு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள கீழ்க்காணும் தோழர்களை தொடர்பு கொள்ளவும் :-

1. தோழர். தமிழ்ச் செல்வன் , கோட்டச் செயலர் -   9965428382
2. தோழர். சசிகுமார், செயல் தலைவர்  - 9442234938
3. தோழர். ராஜூ , போஸ்ட் மாஸ்டர் , தென்னூர் - 9994247485

நன்றியுடன் 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.

TN AIPEU GDS NFPE FIRST CIRCLE COUNCIL MEETING HELD ON 17.10.2013

தமிழக AIPEU GDS NFPE  சங்கத்தின் முதல் மாநில கவுன்சில் கூட்டம் கடந்த 17.10.2013 அன்று சென்னை எழும்பூர் SRMU  சங்கக் கட்டிடத்தின்  நக்கீரன் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . அதன் மாநிலத் தலைவர் தோழர் R . ராமராஜ் அவர்கள் தலைமை வகிக்க , சென்னை வட கோட்டத்தைச் சேர்ந்த தோழர். லீலாராமன் (செயலர்)  வரவேற்புரை யாற்ற  , NFPE  சம்மேளனத்தின் உதவி மாபொதுச்  செயலர் தோழர். S . ரகுபதி அவர்கள் மிகச் சிறப்பானதொரு துவக்கவுரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து  கூட்டத்தின் நோக்கம் , மாநிலச் சங்கத்தின்  செயல்பாடுகள், மத்திய சங்க நிகழ்வுகள் ,  நம்முன்னே உள்ள கடமைகள் , எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய  பேரணி உள்ளிட்ட தகவல்களுடன் ஒரு நீண்ட எழுச்சி யுரையினை  அதன் மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் வழங்கினார்கள் .

இதர மாநிலச் சங்க நிர்வாகிகள்  ஸ்ரீரங்கம்  தோழர்.R . விஷ்ணுதேவன், பவானி மகாலிங்கம் , பட்டுக்கோட்டை இளங்கோவன், மதுரை  ராஜசேகர், சேலம் மேற்கு  சண்முகம், தாம்பரம் விஜயகுமார், பாண்டிச்சேரி கலிய முர்த்தி , திருவண்ணாமலை முனுசாமி ஆகியோர்   கலந்துகொண்டு  விவாதத்தை மெருகேற்றினர் .  இது தவிர 32 கிளைகளை இருந்து  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு  கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

அஞ்சல் மூன்று மாநிலத்  தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநில நிதிச் செயலரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் A . வீரமணி,  அஞ்சல் மூன்று அகில இந்திய செயல் தலைவர் தோழர்  N .G . , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். V . ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர். 

இது தவிர அஞ்சல் மூன்று அம்பத்தூர் கிளையின் முன்னாள் தலைவர்கள், தோழர்  நரசிம்மலு, தோழர் முருகன், திண்டுக்கல் தோழர்.  மருதை ஆகி யோரும் கலந்து கொண்டனர் . 

கூட்டத்தின் தீர்மானங்களில்  முக்கியமாக ,  ஒவ்வொரு கோட்டத்தில் இருந்தும்   GDS  தோழர்கள் 15 பேருக்கு குறையாமலும் , இதர அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு R 3, R 4 உள்ளிட்ட சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட கிளைச் செயலர்கள் அனைவரும் முழு வீச்சில்  எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு  ஊழியர்களை திரட்டிட  வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது .

இத்தகைய கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை வடகோட் டத்தைச் சேர்ந்த P 3/GDS  சங்க நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் நன்றி முழுவதுமாக உரித்தாக்கப் பட்டது .

குறிப்பு :-

1. நமது  அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் இந்த பாராளுமன்றம் நோக்கிய பேரணியில்  விடுதல் இன்று  கண்டிப்பாக கலந்து கொண்டிட வேண்டும். 

2.  மேலும் அனைத்து அஞ்சல் மூன்று  கோட்ட/ கிளைச் செயலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். இதர முன்னணித் தோழர்களையும்  GDS  தோழர் களையும்  ஒன்றிணைத்து , உடனடியாக இரயில்  டிக்கெட்  முன்பதிவு செய்திட வேண்டுகிறோம். இறுதியில் செய்தால் நிச்சயம்  டிக்கெட் CONFIRM  ஆகாது என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். 

3. இதற்கான பொறுப்புகளை அஞ்சல் மூன்று மாநிலச் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு மாநிலச் சங்கத்திற்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். உடன் பதிலை எதிர்பார்க்கிறோம்.

Friday, 4 October 2013

BONUS 60 DAYS – ORDERS ISSUED

BONUS 60 DAYS – ORDERS ISSUED


GDS CEILING IS RAISED TO 3500/-


Department of Posts today issued orders for payment of 60 days Bonus to Postal Employees including GDS. Bonus Ceiling for GDS also raised to 3500/-.


NFPE congratulates all the Postal and RMS employees and also other Central Government Employees who conducted series of agitation including strike for ending the Bonus discrimination towards GDS.




(M. Krishnan)


General Secretary