தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம்
இன்று 24.06.2013-ல் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே போன்று காலியாக இருந்த மாநில அமைப்பு செயலாளர் பதவிக்கு திருச்சி கோட்ட செயலாளர் தோழர் S.கோவிந்தராஜன் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை NFPE சம்மேளனத்தின் துணை பொது செயலாளர் தோழர் K.ரகுபதி, அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் செயல் தலைவர் தோழர் N.G., தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில செயலாளர் தோழர் V.ராஜேந்திரன் முன்னிலையில் மாநில தலைவர் தோழர் G.கண்ணன்தலைமையேற்று நடத்திய மாநில செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட அகில இந்திய அஞ்சல் நான்கின் பொது செயலாளர் தோழர் ஈஸ்வர் சிங் தபாஸ் இன்றைய சூழ்நிலைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
இறுதியாக மாநில பொருளாளர் தோழர் R.வெங்கடரமணி நன்றி கூற செயற்குழு கூட்டம் இனிதே முடிவடைந்தது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு KARUR கோட்ட அஞ்சல் நான்கு,P3 ,GDS சங்கம் வீர வாழ்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment