Running News

Monday, 8 December 2014

4TH DECEMBER 2014 HISTORIC PARLIAMENT MARCH A GRAND SUCCESS

4TH DECEMBER 2014 HISTORIC PARLIAMENT MARCH A GRAND SUCCESS

அன்புத் தோழர்களே  வணக்கம் !  

கடந்த 04.12.2014 அன்று  புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து பாராளுமன்றம் நோக்கிய  அஞ்சல் JCA  வின் 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பேரணி  மாபெரும் வெற்றியைப் பெற்றது. 

 ஊர்வலம் கிட்டத்தட்ட 1.5 KM  தொலைவு நடைபெற்றது. அஞ்சல் RMS பகுதியில் இருந்து  JCA  சார்பில்  15000 க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்துகொண்டது  இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் அனைத்து மைய தொழிற்சங்கங்கள் சார்பாகவோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் சார்பாகவோ அல்லது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாகவோதான்  பாராளுமன்றம் நோக்கிய பேரணிகள் நடைபெற்றுள்ளன.  

முதல் முறையாக தற்போது அஞ்சல் ஊழியர்கள் மட்டுமே  நமது 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என்பது  அஞ்சல் தொழிற் சங்க வரலாறு ஆகும்.  இதில் தமிழகத்தில் இருந்து  சுமார் 700 ஊழியர்களுக்கு மேல் கலந்துகொண்டது மேலும் புதிய வரலாற்றினைப்  படைத்துள்ளது.  சென்னை அண்ணா  சாலை , தென் சென்னை , காஞ்சிபுரம், பாண்டிச்சேரி ,திருவண்ணாமலை , ராணிபேட்டை , வேலூர் , திருப்பத்தூர், குடியாத்தம் ,சேலம் கிழக்கு , திருப்பூர் , மேட்டுப் பாளையம் , ஊட்டி, தருமபுரி , புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை  உள்ளிட்ட  கோட்ட/கிளைகளில் இருந்து  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, GDS  தோழர்கள் பெருவாரியாகக் கலந்துகொண்டது   தமிழக அஞ்சல்  இயக்கத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது. 

தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட அனைத்து தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கும் அதற்கு ஏற்பாடுகள் செய்து கலந்துகொள்ளச் செய்த  அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். கண்ணன்,  GDS  சங்க மாநிலச் செயலர்  தோழர். R . தனராஜ், நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். நாகராஜன்  ஆகியோர் தலைமையில்  ஊழியர்கள் அணிவகுத்து  போர்ப் பரணி கொண்டது  தமிழகத்திற்கு பெருமையாகும். பேரணி நிகழ்வுகள் குறித்து நமது சம்மேளனம் சார்பில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.

No comments:

Post a Comment