Running News

Tuesday, 13 January 2015

SPEED DELIVERY ORDERED ON PONGAL HOLIDAY CANCELLED IN CCR

SPEED DELIVERY ORDERED ON PONGAL HOLIDAY CANCELLED IN CCR

துரித அஞ்சல்  பட்டுவாடா பொங்கல் நாளில்  சென்னை பெருநகர  மண்டலத்தில்  வடசென்னை,  தென் சென்னை , மத்திய சென்னை   மற்றும் தாம்பரம்  உள்ளிட்ட கோட்டங்களில் முக்கிய அலுவலகங்களில்  ஏற்கனவே உத்திரவிடப் பட்டிருந்தது.  

இது  குறித்து  நம்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் மூலம்  PMG, CCR   அவர்களிடம் எடுத்துச் சென்று பேசிய  பின்   இன்று  பொங்கல்  நாளின் துரித அஞ்சல் பட்டுவாடா  ரத்து   செய்யப் பட்டு  உத்திரவிடப் பட்டது.  

இதர பண்டிகை நாட்களிலும்  இனி  இந்த அளவிலான பட்டுவாடா இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி  ஏற்கனவே  நாம் கடிதம் அளித்துப் பேசியுள்ளது உங்களுக்குத் தெரியும். 

இது குறித்து  உடன்  CPMG  அலுவலகத்துடன் கலந்து பேசி    விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்  என்று PMG, CCR  அவர்கள்  உறுதி அளித்துள்ளார்.   PMG, CCR   அவர்களுக்கு   ஊழியர்கள் சார்பாக  நம் மாநிலச் சங்கத்தின்  நன்றி !

No comments:

Post a Comment