Running News

Sunday 31 May 2015

SPECIAL INFORMAL MEETING WITH THE CPMG, TN BY OUR CIRCLE UNION A SUCCESS

SPECIAL INFORMAL MEETING WITH THE CPMG, TN BY OUR CIRCLE UNION A SUCCESS

CPMG  திரு. M .S . ராமானுஜன்  அவர்களுடன் சிறப்பு நேர்காணல் 

தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரி  AUDIT  அலுவலக பிரச்சினையுடன்,  நமது அஞ்சல் மூன்று சங்கத்திற்கும் CPMG யுடன் ஒரு சிறப்பு நேர்காணல் கோரினோம்.  அதன் படி கடந்த 29.05.2015 அன்று காலை 12.00 மணி தொடங்கி 01.30 மணி வரை  நமது தமிழக CPMG (ADDL  CHARGE ) திரு. M .S . ராமானுஜன் அவர்களுடன் நமது அஞ்சல் மூன்றுக்கென   சிறப்பு நேர்காணல் நடைபெற்றது. 

நேர்காணலில்  CPMG யுடன்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி, மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , மாநில நிதிச் செயலர்  தோழர். A . வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். கீழே  அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது . நேர் காணல்  சுமூகமான சூழலில் நடைபெற்றது. நமது தரப்பு வாதங்களில் பெரும் பகுதியை  CPMG அவர்கள் ஏற்றுக் கொண்டு அதன் மீது  உடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். பேசப்பட்ட பிரச்சினைகளின் சுருக்கம்  கீழே  அளித்துள்ளோம் . பார்க்கவும் .

1. நமது 26.3.2015 வேலை நிறுத்த கோரிக்கைகளின் மீது உரிய  ACTION  TAKEN  REPORT அளிக்கப்படும்.

2. தென் மண்டல தொழிற் சங்க பழி வாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்திட 30.05.2015 அன்று  மதுரை செல்லும் CPMG,  தென் மண்டல PMG யுடன் இது குறித்து நேரில் பேசி தீர்வு காணுவதாக உறுதி அளித்தார்.

3. தேங்கிக் கிடக்கும் LSG  பதவி உயர்வு  தமிழகத்தில் வழங்கிட DDG யுடன் நேரில் பேசியுள்ளதாகவும் அடுத்த வாரத்தில் இது குறித்து விளக்க ஆணை  பெறப்படும் என்றும் ஜூன் மாதத்தில்  பதவி உயர்வு  நிச்சயம் அளிக்கப்படும் என்றும்  CPMG  மற்றும் DPS  HQ  இருவரும்  ஒரு சேர உறுதி அளித்தனர்.

4. LGO  விலிருந்து  எழுத்தர் தேர்வு முடிவுகள் இந்த வாரத்திற்குள் வரும் என்றும் (தற்போது வந்து விட்டது ) இதில் நீதிமன்ற வழக்கு காரணமாக முடிவுகளை நிறுத்தக் கூடாது என்று  நாம் கோரியதை ஏற்றுக் கொண்டு நிச்சயம்  நல்ல முடிவு எடுப்பதாக அறிவித்தார்.

5. DEPUTATIONIST  பிரச்சினையில், திருப்ப அனுப்புவதில்  தாம் உறுதியாக இருப்பதாகவும் நிச்சயம்  நீண்ட காலம் உள்ளவர்கள்  அவரவர் கோட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், தற்போது மொத்தத்தில்  கிட்டத்தட்ட பாதி ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் CPMG  தெரிவித்தார்.  விரைவில் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு தரப்படும் என்று உறுதி அளித்தார். அதுபோல கோட்டங்களில் உள்ள DEPUTATIONIST  மற்றும் நீண்ட காலம் பணியில் உள்ளவர்கள் குறித்தும்  உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

6. RRR  ஊழியர் பிரச்சினையில் CRC  கூட்ட உள்ளதாகவும் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

7.HSG  II SENIORITY  மற்றும் RE-ALLOTMENT  பிரச்சினையில் CPMG அவர்கள் நம் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் DPS HQ  அவர்கள் மாறுதலான நிலைபாட்டினை தெரிவித்தார். எனவே இது குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுப்பதாகவும், மேற்கு மண்டல செயலர் தோழர். சஞ்சீவி பிரச்சினையில் அவர் மண்டலச் செயலராக தொடர்ந்து பணியாற்றிட  அவருக்கு RE-ALLOTMENT  வழங்கிடவும்   உறுதி அளித்தார்.

8. சென்னை PSD  யை  CSD  அலுவலக வளாகத்திற்குள் கொண்டு வருவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். இது குறித்து  திங்களன்று  மீண்டும் விவாதித்திட வருமாறு  DPS  HQ  அழைப்பு விடுத்தார். மாநிலச் செயலர் ஞாயிறன்றே டெல்லி செல்ல உள்ளதால்  மாநிலத்  தலைவர் இது குறித்து  திங்களன்று  DPS  HQ  உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.

9. CIS  பிரச்சினைகள் குறித்து  CPMG  அவர்களே  DTE  இல் நேரிடையாக பேசி உள்ளதாகவும் INFOSYS  இன் உயர் மட்டத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்  MC  CAMISH  அதிக குறைபாடுள்ளதாக தானே அறிக்கை அனுப்புவதாகவும்  CPMG தெரிவித்தார். மேலும் இந்தப் பிரச்சினையில் ஊழியர்கள் படும் அவதியை தானே நேரில் பல அலுவலகங்களின் கண்டதாகவும்,  துறை  அமைச்சருடன் நேரில் பேசி நல்ல முடிவு காண தான் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். இது தமிழகத்தில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. அகில இந்திய அளவில் அனைத்து இடங்களிலும் இப்படித்தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

10. CASUAL  LABOUR  ஊதிய பிரச்சினை குறித்து ஏற்கனவே உத்திரவு அனுப்பப் பட்டுள்ளதாக தெரிவித்தார் . ஆனால் பிரச்சினை அதுவல்ல என்றும் இங்கு எவரும் CASUAL LABOUR கிடையாது என்று கூறி   கீழ் மட்ட அதிகாரிகள் அந்த  உத்திரவை அமல் படுத்த மறுப்பதாகவும்  கூறினோம். பிரச்சினையின் தன்மையை புரிந்து கொண்டு உடன் இது குறித்து விவாதித்து உரிய உத்திரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

CPMG  அவர்கள் உறுதி அளித்தபடி நிச்சயம் நடக்கும் என்று நம்புவோம்.. முந்தைய CPMG  அவர்கள் உறுதி அளித்துவிட்டு MEMBER  ஆக  பதவி உயர்வில் சென்றது போல, தற்போதைய CPMG அவர்களும்  உறுதிமொழியை செயல் படுத்தாமல்  பதவி உயர்வில் சென்று விடுவாரோ என்று நமது சந்தேகத்தை தெரிவித்தோம்.  அதற்கு  CPMG  அவர்களும்  "நான் ஊழியர் பிரச்சினையில் அக்கறை உள்ளவன்  நிச்சயம் தீர்த்து வைப்பேன்" என்று உறுதி அளித்தார். அடுத்த வாரத்தில் பல  பிரச்சினைகள் தீரத் துவங்கும் என்று  நம்புகிறோம்.  CPMG அவர்களுக்கும் DPSHQ  அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நன்றிகள்!

No comments:

Post a Comment