Running News

Tuesday, 29 March 2016

ORDER ISSUED BY CPMG , TN ON OUR DEMAND FOR PAYMENT OF SALARY ON 1.4.2016 ON CASH/OPTIONAL BASIS




ORDER ISSUED BY CPMG , TN ON OUR DEMAND FOR PAYMENT OF SALARY ON 1.4.2016 ON CASH/OPTIONAL BASIS

நமது அஞ்சல் மூன்று  மாநிலச் சங்கத்தின் மூலம் ஏற்கனவே கடந்த 23.3.2016 அன்று ஒரு கடிதமும்  கடந்த 28.3.2016 அன்று ஒரு கடிதமும் அளித்துப் பேசியிருந்தோம். முதலாவது கடிதத்தில் வைக்கைப்பட்ட கோரிக்கைப்படி கடந்த GOOD FRIDAY  அன்று காஞ்சிபுரத்தில் வைக்கப் பட்ட MELA  அன்றைய தேதியில் ரத்து செய்யப்பட்டது. 

அதேபோல  கடந்த 27.03.2016 ஞாயிறு அன்று சென்னை பெரு நகர மண்டலத்தில் SPECIAL SB COUNTER  பல அலுவலகங்களில் வைத்திட உத்திரவிடப்பட்டிருந்தது. இந்த உத்திரவையும் ரத்து செய்திடக் கோரியிருந்தோம். இதில் விருப்பமில்லாத எந்த ஒரு ஊழியரையும் கட்டாயப் படுத்தி பணி செய்திட அழைக்கக்  கூடாது ,  என்ற உத்திரவை நிர்வாகம் அளித்தது. அதன்படி பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் பணி  செய்திட வரவில்லை. ஒரு  சில அலுவலகங்களில் விருப்பமுள்ள ஊழியர்கள் மட்டுமே பணிக்கு  வந்தனர்.

நம்முடைய இரண்டாவது கடிதத்தின் அடிப்படியில் , எதிர்வரும் 1.4.2016 அன்று FINACLE  சரிவர  இயங்காத நிலையில், ஊழியரின்  ஊதியம் பணப் பட்டுவாடாவாக செய்திட உத்திரவு பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு போல அல்லாமல் விரைந்து முடிவெடுத்த  நம்முடைய  CPMG  அவர்களுக்கு நம்முடைய  நன்றி.  ஓய்வூதியர்களுக்கான முடிவினையும் விரைந்து எடுத்திட  வேண்டுகிறோம். உத்திரவின் நகல் கீழே  காண்க .


No comments:

Post a Comment