Running News

Wednesday, 3 September 2014

விதி 38 இட மாறுதலின் விதியை நிர்ணயிக்கப் போகும் புதிய TRANSFER பாலிசி ? சுழல் மாற்றல் மேலும் சுழற்சியா ?


விதி 38 இட மாறுதலின்  விதியை நிர்ணயிக்கப் போகும் புதிய TRANSFER  பாலிசி ?

சுழல் மாற்றல் மேலும்  சுழற்சியா ?

விதி 38 இன் கீழ் அளிக்கப் படும் இடமாறுதல்களில் , நடப்பு ஆண்டில் (2014) ஏற்கனவே ஜனவரியிலேயே காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு மே மாதத்தில் தேர்வு நடைபெற்றதால் , விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அவை  உரியகோட்டங்களின் RESULTANT   காலியிடங்களாக  மாற்றப் படவில்லை. 

இதனால்  நடப்பு ஆண்டில்  விதி 38 இன் கீழான இட மாறுதல்கள்  தடைப் பட்டு உள்ளன. மேலும்  தற்போது DOPT  மற்றும் இலாக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள  புதிய TRANSFER  POLICY  காரணமாக , இனி வரும் ஆண்டுக்கான விதி 38 இன் கீழான  இட மாறுதல்களிலும் கூட மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட  உள்ளது.  

முதலாவதாக , TRANSFER  COMMITTEEதான்  RT  யை இறுதி செய்ய வேண்டும் என்று  எடுக்கப்பட்டுள்ள கொள்கை முடிவால் , இனி RT  மண்டல அதிகாரியால் இறுதி செய்யப்படும். இதன் மூலம்  கோட்ட அதிகாரிகளால்  அளிக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே மண்டல அதிகாரிகள் இறுதி செய்வார்கள் என்பதே நடக்கும் நிகழ்வாக இருக்கும். ஏனெனில் அந்தந்த கோட்டத்தின் பிரத்தியேக பிரச்சினைகள் மண்டல அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.  அவர்கள் கோட்ட அதிகாரியின் அறிக்கையையே சார்ந்திருக்க வேண்டும். 

மேலும் மண்டல அதிகாரி தலைமையிலான கமிட்டி  RT  உத்திரவுகளை இறுதி செய்வதால் , அதன் மீது மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும். அடுத்து நிலை உயர் அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம்  என்று  வழிகாட்டுதல் அளிக்கப்பட்டால் கூட, அந்த மேல்முறையீடு  சாதாராண ஊழியர்களுக்கு எந்த அளவில் சாத்தியம் என்பது  கேள்விக்குறியே ?

இரண்டாவதாக,  RULE  38 இட மாறுதல்களில் ஏற்கனவே பல பிரச்சினைகளை நம் ஊழியர்கள்  சந்தித்து வருகிறார்கள். பெண் ஊழியர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.  

A)    இனி   நேரடி நியமனக் காலியிடங்களில் தான்  நேரடி நியமனம் பெற்ற எழுத்தர்  மாறுதல் பெற முடியும் என்பதும் ,  

B) PROMOTIVE  எழுத்தர் , விண்ணப்பிக்கும் கோட்டத்தில் அவருக்குண்டான  PROMOTIVE காலியிடங்களில் மட்டுமே இடமாறுதல் பெறமுடியும் என்பதும் ,

C)      MUTUAL TRANSFER  க்கும் இதே விதி தான்  பொருந்தும் என்பதும் , 

D)   அதுபோல எந்தெந்த COMMUNITY  யை சேர்ந்தவர் இட  மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கிறாரோ, அவர்களின்   COMMUNITY  அடிப்படையில்  காலியிடங்கள் , விண்ணப்பிக்கும் கோட்டத்தில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு , அதுவும்  ORDER  OF  SENIORITY   அடிப்படையில்   மாறுதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும் , 

E ) SENIOR REQUEST  இருந்தும்  JUNIOR  REQUEST ஆல்  OVERLOOK  செய்திட வாய்ப்பு ஏற்படும் என்பதும் ,

இடமாறுதல் பிரச்சினையில் பெரும்  பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இது குறித்து  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தால்   இந்தப் பிரச்சினை  அகில இந்திய சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment