மத்திய அரசு ஊழியர்களின் மனைவி–குழந்தைகள் சொத்து
கணக்கை காட்ட டெல்லி ஐகோர்ட்டு தடை :
மத்திய அரசு ஊழியர்கள் ‘லோக்பால்’ சட்டப்படி தங்கள் சொத்துக் கணக்கை இந்த மாதம் (செப்டம்பர்) 15–ந்தேதிக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக் கணக்குடன், மனைவி – குழந்தைகளின் பெயரில் உள்ள சொத்து விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். மனைவி அரசு ஊழியராக இருந்தால் கணவரின் சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிரிப்பு கிளம்பியது. அரசு ஊழியர் தவிர குடும்பத்தில் மனைவி – குழந்தைகளின் சொத்துக் கணக்கையும் காட்ட வேண்டும் என்பது முறையல்ல. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி ஐகேர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் ராகவேந்திரா பட், விபின்சங்கி ஆகியோர் மத்திய அரசு ஊழியர்களின் சொத்து கணக்குடன் மனைவி – குழந்தைகளின் சொத்து விவரத்தையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு நிபந்தனையுடன் கூடிய தடை விதித்தனர்.
நவம்பர் மாதம் கோர்ட்டு இதற்கான உத்தரவை பிறப்பிக்கும். அதுவரை, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் இந்த தடை பொருந்தும்.
இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.
No comments:
Post a Comment