Running News

Tuesday 2 February 2016

TN JCA ( NFPE & FNPO ) ON AGITATIONAL PATH - CIRLE WIDE THREE PHASED AGITATION DECIDED IN JCA MEETING HELD ON 2.2.2016 AT PARK TOWN HPO

TN JCA ( NFPE & FNPO ) ON AGITATIONAL PATH - CIRLE WIDE THREE PHASED AGITATION DECIDED IN JCA MEETING HELD ON 2.2.2016 AT PARK TOWN HPO


போராட்டப் பாதையில் தமிழக  JCA !

2.2.2016 - NFPE /FNPO-JCA  கூட்டத்தின்  முடிவுகள் !


அன்புத் தோழர்களுக்கு  வணக்கம்.  கடந்த 27.1.2016 அன்று  PMG, CCR அவர்களுடன்  தமிழக அஞ்சல்  JCA  சார்பில் நடத்திய  பேச்சு வார்த்தை குறித்தும்  அதன் வெளிப்பாடாக  அளிக்கப்பட்ட வாக்குறுதியும் உங்களுக்கு  தெரிவித்திருந்தோம். மேலும்  அதன் மறுநாள்  DPS CCR அவர்களும்  பிரச்சினை  தீர்க்கப்பட  உத்திரவு  அளிக்கப்பட உள்ளது என்று  தெரிவித்திருந்தார்.  ஆனால் ,  அளிக்கப்பட்ட உறுதி மொழி களுக்கு மாறாக,  தபால்காரர்  பணிகளுக்கு  பதிலி  அளிக்க அனுமதிக் காமல்  மேலும் பணிகளை   நெருக்குவதற்கான   உத்திரவு  வெளியிடப் பட்டது.  


பணியிழந்த  27 CASUAL  ஊழியர்களையும்  குறைந்தபட்ச தினக் கூலி அடிப்படையில்  PICK  UP AGENT , MARKETING  பகுதி,  COLLECTION , PASTING, PINNING  என்ற  BPC வகைப் பணிகளை, அதுவும் கூட , எந்தவித உத்திரவும் இல்லாமல்  வாய்மொழியாக  பணியளிக்க  நிர்வாகத்தினர் அழைத்தனர். 


இது  ஏனென்றால்  , SPEED  மற்றும்  BUSINESS  PARCEL  PICK UPக்கு  ஆகும் செலவு மட்டுமே  ரூ. 86000/- வரும் என்று  SENIOR MANAGER, MMS தெரிவித்ததாலும், வேறு  எதுவும் செய்ய இயலாதென்று  அவர்  கை விரித்ததாலும், 10 நாட்களாக  வணிகப் பணிகள் முடங்கியதாலுமே இந்த முடிவு. மேலும் இவர்கள்  PICK  UP மட்டுமே  செய்வார்கள். BOOKING , DESPATCH  க்கு மீண்டும் வேறு  ஆள் தேடவேண்டும். அதற்கான  ஒரு மாத செலவு என்பது   மேலும்  கூடுதலாகும்.                                                                                



அதுவும்  இரண்டு VAN  மட்டுமே  DIVERT  செய்ய முடியும் என்றும் அதற்கு இரண்டுOUTSOURCED  DRIVER  ( மீண்டும்  புதிய  CASUAL LABOURER) தனியே  அமர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்  தெரிவித்ததே காரணம் . ஆனால் ஏற்கனவே இருக்கும் CASUALஊழியர்களுக்கு மாதம் ரூ.50000/- கூட செலவு செய்யவில்லை  நிர்வாகம். 

                                              
ஆக நிர்வாகத்தின் வீண்  பிடிவாதத்தால்  கடந்த 10 நாட்களில் ஆயிரக் கணக்கான SPEED மற்றும் BUSINESS  PARCEL  சேவை பாதித்தது மட்டுமல்லாமல், தபால்   காரர்களை  COMBINED DUTY போட்டதால் ஆயிரக்கணக்கில்  தபால்  டெலிவரி சேவை  பாதிப்பும் உள்ளாகியுள்ளது. இந்த நிலை  அண்ணா சாலையில் மட்டு மல்ல சென்னை GPO விலும்தான். கிட்டத்தட்ட இதே நிலைதான்  சென்னை FGN POST, வடசென்னைமத்திய சென்னைதென் சென்னை  மற்றும் தாம்பரம் கோட்டங்களிலும்.  
  
எனவே  இது குறித்து முடிவெடுக்க  NFPE மற்றும்  FNPO தமிழ் மாநில JCA கூட்டம்2.2.2016 அன்று  சென்னை பூங்கா நகர்  தலைமை அஞ்சலகத்தில் கூட்டப்பட்டது. இதில்  NFPE மற்றும் FNPO  சங்கங் களின்  பெரும்பகுதி மாநிலச் செயலர்கள்மாநில நிர்வாகிகள்சென்னை பெருநகர  கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்ட னர். இதில்  மேலே கண்ட தபால்காரர் /MTS  மற்றும்  CASUAL  ஊழியர்கள் பிரச்சினை மட்டுமல்லாமல்இதர  பகுதிப் பிரச்சினைகளும் பேசப்பட்டன. 

இறுதியில் மேலே  கண்ட இரண்டு பிரச்சினைகளுடன்தமிழகத்தில் ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்கும்  அஞ்சல், RMS பகுதிகளின் மிக முக்கிய (HARASSMENT OF STAFF IN THE NAME OF TARGET உள்ளிட்ட) பிரச்சினைகளை  உள்ளடக்கி  தமிழகம்  தழுவிய  அளவில்   JCA   சார்பில்
மூன்று  கட்ட போராட்டத்தை  நடத்துவதென்று  முடிவெடுக்கப் பட்டது.  

அனைத்து சங்கங்களையும் கலந்துகொண்டு  இதற்கான சுற்றறிக்கை எதிர் வரும்  08.2.2016 க்குள் தயார் செய்து  அனுப்புவது என்றும் , 

மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் அனைத்து  கோட்டங்களிலும்  JCAசார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி  முதற் கட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது - கோரிக்கை மனு அளிப்பது எனவும் , 

பிரச்சினை தீர்க்கப்படவில்லை எனில் ,  நான்காவது  வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனவும்,  அதற்குப் பிறகும் நிர்வாகம்பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை  தீர்க்கவில்லை எனில்

மூன்றாவது  கட்டம்  தமிழகம் தழுவிய  அளவில்  முழு  வேலைநிறுத்தம் அறிவிப்பது என்றும், இதற்கான  தேதி   மற்றும்  கணக்கீடு  இரண்டாவது கட்ட போராட்டத்தின்போது JCAவின் தலைவர்களால் அறிவிக்கப்படும் என்றும்  முடிவெடுக்கப்பட்டது.

கேட்டுப் பார்ப்போம் !  பேசிப் பார்ப்போம் !
கோரிக்கை  மனு  அளித்துப் பார்ப்போம் !
ஆர்ப்பாட்டம்  நடத்திப் பார்ப்போம் !
உண்ணா நோன்பிருப்போம்!

இதன் பிறகும்  கேளாச் செவியினராய்  இருப்பார்களேயானால்
வேலை  வேலை  நிறுத்தம்  ஒன்றே  நம்  இறுதி  ஆயுதம் !
ஒன்று பட்ட  போராட்டம் ஒன்றே  நம்  துயரோட்டும் !

ஓங்கட்டும் தொழிலாளர்  ஒற்றுமை !
ஒடியட்டும் அடிமை  விலங்கு
பிறக்கட்டும் சுதந்திர கீதம் !

கூட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில்
சில உங்களின் பார்வைக்கு .

No comments:

Post a Comment