Running News

Monday 15 February 2016

GDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்.

GDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்.....

GDS மாநில சங்கம் நடத்தும் கருத்தரங்கத்தில் பெரும் அளவில் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாநில சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 
                                                        *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

GDS  ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் , எதிர்வரும்  GDS உறுப்பினர் சரி பார்ப்பில் அனைத்து GDS  ஊழியர்களையும்   NFPE  GDS சங்கத்தில் இணைத்திட வேண்டியும் , எதிர்வரும்  28.2.2016  அன்று திருச்சி ரயில்வே  ஜங்ஷன் அருகே  உள்ள  SRMU  சங்கக் கட்டிடத்தில்   தமிழகம் தழுவிய அளவிலான  ஒரு மாபெரும் GDS  ஊழியர்  கருத்தரங்கம்   தமிழ் மாநில  GDS  சங்கத்தினால் ஏற்பாடு செய்து   நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து NFPE  மாநிலச் சங்கங்களின்  செயலர்கள், நிர்வாகிகள்  கலந்துகொள்ள உள்ளார்கள்.  

கருத்தரங்கில்   சிறப்பு  அழைப்பாளர்களாக  தோழர்கள் .   M . கிருஷ்ணன், R .N . பராசர் , P . பாண்டுரங்கராவ் , K . ராகவேந்திரன்,   K .V . ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு  பல்வேறு தலைப்புகளில்  கருத்தரங்க  உரை நிகழ்த்த உள்ளார்கள். இது குறித்த அறிவிப்பு  மாநில GDS  சங்கத்தினால் தனியே வெளியிடப்பட்டுள்ளது. எனவே  தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தோழர்கள் / தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க  வேண்டுகிறோம்.

                                              தோழமை வாழ்த்துக்களுடன் 

J . இராமமூர்த்தி, 
மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்

No comments:

Post a Comment