Running News

Wednesday, 23 November 2016

நமக்குள் பேசி கொள்வோம்….

.

   FAKE NOTE DETECTOR கொடுக்கப்படவில்லை. OTA/OFFவழங்கபடவில்லை. இது வரை எவ்வளவு கள்ள நோட்டுக்கள்/செல்லாத நோட்டுக்கள் ஊழியர்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளன என்ற கணக்கில்லைஉடனே கணக்கை கொடு என்ற விரட்டல் ஒரு பக்கம். இரவு கணக்கை முடிக்க நேரமாகிறதே என்றால், இரவு 12 மணி ஆனாலும் முடித்து விட்டுதான் போக வேண்டும் என்ற மிரட்டல் ஒரு பக்கம்.  இழப்புகளையும், வேதனைகளையும் தாங்கி கொண்டு வேலை பார்த்தும், ஒரு பாராட்டு, ஒரு ஆறுதல் இல்லை. உன் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற வார்த்தைகள்தான் அதிகாரிகள் வாயில் இருந்து வருகிறது. போராட தயாராகத்தான் இருக்கிறோம். பலன் கிட்டுமா? என்பதை விட பாதிப்புகள் இல்லாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைதான் பெரும்பாலான ஊழியர்கள் எண்ணம். 

 

FINANCE MINISTRY AND DEPT. OF POSTS EXCLUDED PO SAVINGS ACCOUNTS FROM EARLIER ORDERS OF FIN. MIN

இதுவெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக நடக்கும் நம் இலாக்காவில் . ஆனால்  இரவு  பகல் , விடுமுறை நாள் , ஞாயிறு என்று பணி  செய்த ஊழியர்களுக்கு வங்கிகள் போல ஒரு நாள்  ஊதியம் அல்லது ரூ. 3000/- கேட்டால் தோசைக்  கரண்டியை  திருப்பி  காலில் சூடு வைப்பார்கள் நம் அதிகாரிகள் .  

அரசுக்கு கொள்கை ரீதியாக ஆபத்துக் காலத்தில் ராணுவம் போல நம் ஊழியர் பணி  செய்யத் தயார் தான் . ஆனால்  பட்டை நாமம் குழைத்துப் போட்டு கொத்தடிமையாக  வேலை வாங்க நம் அதிகாரிகள்  தயாராக இருக்கிறார்களே ? இது தான் இன்றைய தேசம் .

இதுதான் கொடுமை . இதற்கெல்லாம்  முடிவு கட்டும் நாள் எந்நாளோ  ? தமிழகம் எடுத்துக்காட்டாக ஊழியர் நலன் காக்க தயாராவோம். 22 மாநிலங்களை நாம் எதிர் நோக்க வேண்டாம். மேல் மட்ட அமைப்புகளை நாம் எதிர் நோக்க வேண்டாம் . எப்போதும் போல முன்கை  எடுக்க தயாராவீர் தோழர்களே !

No comments:

Post a Comment