”பெண் ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம். பணபட்டுவாடா பக்காவாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆள் பற்றாகுறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவைபட்டால், அதிகபடியான ஆட்களை அலுவலகத்தில் நியமித்து கொள்ளுங்கள்(ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்). ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணி புரிந்ததற்கும், அதிகபடியான நேரம் வேலை பார்த்ததற்கும், ஏதேனும் கொடுக்க முடியுமா? என பரிசீலனை பண்ணுங்கள்!” இப்படி மறுபடியும் DG அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்து இருக்கிறது.
சபாஷ்! உத்திரவு மேல் உத்திரவாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், ஏதும் உருப்படியாக நமக்கு ஏதும் வந்த மாதிரி, ஏதும் செய்த மாதிரி இல்லை. தண்ணீர் தண்ணீர் படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ”ஆம். அத்திபட்டி கிராமத்திற்கு தண்ணீர் இல்லை” என்பது மாதிரி ”அதை (FAKE NOTE DETECTOR) தா, இதை (COUNTING MACHINE) ஏற்பாடுசெய்” என மேலிருந்து கீழ் வரை எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால்………………………................
டிசம்பர் 30 வரை பொறுமையாக காத்திருக்க வேண்டுமோ?
No comments:
Post a Comment