Running News

Thursday, 19 January 2017

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை (NFPE மற்றும் FNPO இணைந்த PJCA) மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தன் பங்கினை செலுத்தும் விதமாக நாளை 20.1.17


அன்புத் தோழர்களே! தோழியர்களே ! வணக்கம். ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை என்பது தமிழ் இனத்தின் பண்பாட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் ழ! கலாச்சாரத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் ! இன்று லட்சக் கணக்கான இளைஞர்கள் திரண்டெழுந்து உரிமை மறுக்கப்படுவதற்கெதிராக களமிறங்கியுள்ளது ஒரு சரித்திர நிகழ்வாகும். இந்த போராட்டம் நாளை கோடிக்கணக்கான கரங்களை ஒருங்கிணைக்க உள்ளது. இந்த உரிமைப் போரில் தமிழக  அஞ்சல் RMS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு (NFPE மற்றும் FNPO இணைந்த PJCA) மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்  தன் பங்கினை செலுத்தும் விதமாக நாளை 20.1.17 வெள்ளி மதியம் உணவு இடைவேளையில் சென்னை எழும்பூர்  எத்திராஜ் சாலை GM Finance அலுவலக வளாகத்தில் (அஞ்சல் கணக்கு தணிக்கை அலுவலகம்) கருப்புச் சின்னம் அணிந்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு எடுத்துள்ளது. இதில்சென்னை பெரு நகரத்தில் உள்ள அனைத்து தோழர்/ தோழியர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டெழுந்து நம் எதிர்ப்பினைத் தெரிவித்திட வேண்டுகிறோம். இந்த நிகழ்வுக்கு அனைத்து பகுதி ஊழியர்களையும் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டியது அந்தந்த பகுதி நிர்வாகிகள் பொறுப்பாகும். Whatsapp ல் போடுவது மட்டுமே பொறுப்பாக எண்ணாமல் பேரலையாக ஊழியர்களை திரட்டுவதிலும் பொறுப்பேற்க வேண்டுகிறோம். இதே நாளில் தமிழகத்தின் அனைத்து கோட்ட/கிளைகளிலும் இது போலவே கரூப்பு சின்னம் அணிந்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி Mediaக்கள் மூலம் செய்தி அளிக்க வேண்டுகிறோம். உடனடி நடவடிக்கை என்பதால் இதனையே அறிவிப்பாகக் கொண்டு விரைந்து செயலாற்றிட வேண்டுகிறோம். ஒன்று படுவோம் !தமிழின உரிமைப் போரில் களம் காணுவோம் !.....TN PJCA & TN Confederation.

No comments:

Post a Comment