TN CONFEDERATION POSTER RELEASED ON 10.01.2017 PROTEST DEMONSTRATION FOR PAY COMMISSION DEMANDS !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பாராளுமன்றப் பேரணி முடிவில் 7ஆவது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி எதிர் வரும் 15.02.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் செய்வதாக முடிவு அறிவிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும்.
அதன் ஒரு பகுதியாக , எதிர்வரும் ஜனவரி 10, 2017 அன்று மாலை 05.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் தமிழ் மாநிலக் குழு சார்பில் ஒரு மாபெரும் கணடன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் தற்போது கீழே பார்க்கலாம்.
எனவே அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் , குறிப்பாக சென்னை பெரு நகர மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் பகுதி NFPE இயக்கத் தோழர்களும் தவறாமல் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கும் , அதிகார வர்க்கத்திற்கும் நம்முடைய போராட்ட வீச்சினை எடுத்துக் காட்ட வேண்டுகிறோம்.
மேலும் நம்முடைய NFPE சம்மேளனத்தின் சார்பில் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாகவும், அஞ்சல் பகுதியில் தீர்க்கப்படாமல் தேங்கி கிடைக்கும் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரியும் 20 மற்றும் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 05.01.2017 அன்று அனைத்து கோட்ட /கிளைகள் மற்றும் மாநிலத் தலைமையகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வேலை நிறுத்தத்திற்கான நோட்டீசை நிர்வாகத்திற்கு அளித்திட நம்முடைய சம்மேளனம் தாக்கீது அனுப்பியுள்ளது.
வேலை நிறுத்த கோரிக்கைகள் மற்றும் வேலை நிறுத்த நோட்டீஸ் நகல் ஏற்கனவே நம்முடைய சம்மேளனத்தால் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நம்முடைய மாநிலச் சங்க வலைத்தளத்திலும் நாம் பிரசுரித்துள்ளோம். தற்போதும் கீழே அளித்துள்ளோம்.
எனவே அனைத்து கோட்ட / கிளைகளிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி வேலை நிறுத்த நோட்டீசை அந்தந்த பகுதி நிர்வாகத்திற்கு அளித்திட வேண்டுகிறோம்.
சென்னை பெருநகரத்தை பொறுத்த வரையில் எதிர்வரும் 05.01.2017 அன்று தமிழ் மாநில NFPE இணைப்புக் குழு சார்பில் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து CPMG அலுவலக வாயிலில் ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தி இந்த வேலை நிறுத்த நோட்டீசை மாநில தலைமை நிர்வாகத்திற்கு வழங்கிட உள்ளோம்.
இதற்கான நோட்டீஸ் மாநில இணைப்புக்கு குழு சார்பாக அதன் கன்வீனர் வெளியிட உள்ளார். எனவே, அது வரை காத்திராமல், இந்த அறிவிப்பையே நோட்டீஸ் ஆக எடுத்துக் கொண்டு அனைத்து பகுதிகளிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி வேலை நிறுத்த நோட்டீசாய் நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டுகிறோம்.
சென்னை பெருநகர பகுதி அனைத்து கோட்ட மற்றும் கிளைகளில் இருந்து பெருவாரியான தோழர்கள் / தோழியர்கள் எதிர்வரும் 05.01.2017 அன்று CPMG அலுவலக வாயிலில் நடைபெற உள்ள உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
வேலை நிறுத்த நோட்டீஸ் நகல் மற்றும் கோரிக்கைகள்
No comments:
Post a Comment