MINUTES OF THE BMM CENTRAL REGION- SUCCESS TO CIRCLE UNION'S EFFORTS
நம் மாநிலச் சங்க முயற்சிக்கு வெற்றி !
அன்புத் தோழர்களே ! வணக்கம் ! கீழே மத்திய மண்டலத்தில் நடைபெற்ற இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் பதிவு நகல் உங்கள் பார்வைக்கு அளிக்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கே மேலாக திருச்சி மண்டலத்தில் BUSINESS HOURS ஏழு மணி நேரமாக , COMPUTERIZED NORMS அடிப்படையில் நீட்டிக்கப் பட்டிருந்தது உங்களுக்கு தெரியும். இது குறித்து RJCM இல் நாம் பிரச்சினை எடுத்திருந் ததும் இந்த வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டுள்ளது.
தற்போது PMG CR அவர்கள் , HSG /LSG அலுவலகங்கள் தவிர (EXCLUSIVE COUNTERS ) இதர அலுவலகங்களில் BUSINESS HOURS ஐக் குறைக்க ஒப்புக்கொண்டு (ITEM NO.2/04/2013) அதன் மீது உத்திரவு இட்டுள்ளார்கள். இந்த உத்திரவு தஞ்சை கோட்டத்தில் 75 அலுவலகங்களில் அமல் படுத்தப் பட்டுள்ளதாக , அதன் நகலை நமது தஞ்சை கோட்டத்தின் செயலர் தோழர். செல்வகுமார் அவர்கள் நமக்கு அனுப்பி மாநிலச் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். இதுபோல மற்றைய கோட்ட/கிளைச் செயலர்களும் அவர்கள் கோட்டத்தில் அமல் படுத்தப் பட்டதா என்பதை மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம். இல்லையேல் அந்தந்த கோட்ட கண்காணிப்பாளரை அணுகி உடன் இதுபோல் உத்திரவு பெற ஆவன செய்திட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment