Running News

Monday 6 May 2013


OM. M. KRISHNAN GOT ELECTED AS NEW SECRETARY GENERAL OF CONFEDERATION



' THE MIGHTY WARRIOR ' 
HAS GOT THE HIGHEST JOB

' THIS IS THE FIRST TIME IN HISTORY SINCE THE FORMATION OF CONFEDERATION '

OUR HEARTIEST CONGRATS TO OUR
BELOVED LEADER COM. M. KRISHNAN

கடந்த 04.05.2013 முதல் 06.05.2013 வரை கொல்கத்தா மாநகரில் நடைபெற்ற மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  24 ஆவது தேசிய மாநாட்டில்  நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலரும், NFPE  சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும் ஆகியதொழிற் சங்கப் போராளி தோழர் . M . கிருஷ்ணன்  அவர்கள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச்  செயலராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்  என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . 


1966 இல் துவங்கப்பட்ட மகா சம்மேளன அமைப்பிற்கு நமது NFPTE/NFPE   பேரியக்கத்திலிருந்து  மாபொதுச்  செயலர் பொறுப்பு பெறுவது இதுவே முதல் முறை . தொழிற் சங்க வரலாற்றில் இது ஒரு மைல் கல்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் என்பது மத்திய அரசுத் துறையில் இயங்கி வரும் 106 சங்கங்களை உள்ளடக்கியது. 13 லட்சம்  ஊழியர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் .


தோழர் கிருஷ்ணன் தலைமையில் 7ஆவது ஊதியக் குழு , 50% பஞ்சப்  படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு, 5 கட்ட பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிச்சயம் வென்ற டைவோம் என்பது உறுதி . இந்த நிகழ்வு  NFPE  பேரியக்க வரலாற்றில் நிச்சயம் பதிக்கப் படும் .


தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்  வரலாற்று முத்திரை பதிக்க தோழர் கிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறது ! 

No comments:

Post a Comment