Running News

Monday, 4 July 2016

போராட்டம் எதற்காக ?






1. 70 வருடத்தில் மிக குறைவாக கொடுக்கப்பட்ட சம்பள உயர்வு இது.
2. 6வது ஊதிய குழுவில் 40% சம்பள உயர்வு. இதில் 14% மட்டுமே.
3. அதிகாரிகளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி 1:8என்று இருக்க வேண்டும் என்பது நம் கோரிக்கை. உதாரணத்திற்கு 18000 நமக்கு என்றால் அதிகாரிகளுக்கு 164000 என இருக்க வேண்டும். 1:12என இருந்ததை 1:14 என அரசு அறிவித்துள்ளது. (18000 நமக்கு, அதிகாரிகளுக்கு 250000.)

4. 2014லிருந்து அமுல்படுத்த வேண்டும் என்பது நம் கோரிக்கை. 2016ல் தான் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

5. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது நம் கோரிக்கை. 10வருடங்கள் ஆகியும் இன்னும் நம் கைக்கு வரவில்லை.

6. 7000லிருந்து 18000 என்ற பொய்யான தகவலை அரசும், பத்திரிக்கைகளும் பரப்பி வருகின்றன. 7000+125%DA சேர்த்து ஏற்கனவே 16000 பெற்றுக் கொண்டு இருக்கும் ஒருவருக்கு 18000 என்பதுதான் சரி. 2000 ரூபாய்தான் உயர்வு. இதை பத்திரிக்கைகள், மீடியாக்கள் புரிந்து கொள்வதில்லை.
7. 40000 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவருக்கு 6000 அல்லது 7000 தான் உயர்வு. இதுதான் உண்மை. ஆனால், INCOME TAX SLAB 20%க்கு போய்விடும். எனவே20000 ரூபாய் பிடுங்கிவிடுவார்கள். SERVICE TAX, PROFESSIONAL TAX, INSURANCE என்று பல்வேறு வகைகளில் 10000 போய்விடும். எனவே மாதம் 4000 உயர்வு என எடுத்துக் கொண்டாலும், இப்பொழுது பெரிதாக இருக்கும் அது, அடுத்த 10 வருடங்களுக்கு மாற்றமில்லை என்பது தான் பிரச்சனை. இதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
8. ALLOWANCES அனைத்தும் கொடுப்பதா வேண்டாமா என ஒரு கமிட்டி முடிவு செய்யுமாம். இருப்பதையும் பிடுங்கினால் எப்படி? இது முன்னேற்றமா?
9. 1.1.2016 லிருந்து அமுல்படுத்தபடும் என்றாலும் புதுHRA, TRANSPORT ALLOWANCE இவையெல்லாம் 1.7.16 முதல்தான். (கமிட்டி முடிவு வந்த பிறகுதான் என்றும் சொல்லப்படலாம்).
10. HRA குறைப்பு, NPS நீட்டிப்பு, என இளைய தோழர்களுக்கு பாதிப்பு என்றால், EFFICIENCY BARமற்றும் PERFORMANCE RELATED INCREMENT மூலம் மூத்த ஊழியர்களை VRS-க்கு விரட்டும் முயற்சி.
வெறும் ஊதிய உயர்வுக்காக மட்டும் நடைபெறும் போரட்டம் அல்ல இது. மத்திய அரசில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்பிட வேண்டும் எனவும், அந்நிய முதலீட்டை அனைத்து துறைகளில் புகுத்துவதை எதிர்த்தும், லாபகரமாக இயங்கி வரும் அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், கார்ப்பரேட் மயமாக்கி, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை முறியடிக்கவும் நடைபெறும் போராட்டம் இது.
போராடுவோம் ! வெற்றி பெறுவோம்!

No comments:

Post a Comment