சாதாரண ஊழியர்களாகிய நமக்கு பல சந்தேகங்கள், கேள்விகள் இருக்கின்றன. வேலை நிறுத்தம் தள்ளி வைத்தது சரிதானா?. இந்த மாதம் புதிய சம்பளம் கிடைக்குமா?. இன்னும் நான்கு மாதங்கள் கழித்துதானா?. 30 மாதங்களாக ஆராய்ந்து முடிவெடுத்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் empowered committee சொன்ன மாற்றங்களையே ஏற்று கொள்ளாத அரசு இந்த நான்கு மாதங்களில் என்ன பெரிதாக கொடுத்து விட போகிறது?. இதே ஒற்றுமை தொடர்ந்து நீடிக்குமா?. ஊழியர்களிடம் இதே எழுச்சி இருக்குமா?....
தலைவர்கள் நம்மைவிட அறிவில், போராட்ட குணத்தில், சூழ்நிலையை புரிந்து கொள்வதில், அரசின் சூழ்ச்சியை அறிந்து கொள்வதில் வல்லவர்கள் என்ற எண்ணத்துடன் நாம் இந்த தள்ளி வாய்ப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம் ஒற்றுமையை, போராட்ட வலிமையை மழுங்காமல் வைத்து கொண்டு பொறுமையுடன் காத்திருப்போம். போராட தயாராகவும் இருப்போம்.
A.PALANISAMY DS
KARUR P 3
KARUR 639001
S.KUMARAN DS
KARUR P4
KARUR 639001
No comments:
Post a Comment