Running News

Monday 9 February 2015

மாநில மற்றும் மண்டல அலுவலகங்கள் முன்பாக தொடர் முழக்கப் போராட்டம்


                                       NFPE
      அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், குரூப்  ‘சி
  அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், GDS-NFPE,
   தமிழ் மாநிலம் , தேனாம்பேட்டை, சென்னை 600 018.

சுற்றறிக்கை  எண் : 11                                                               நாள் : 09.02.2015

பெறுநர்: மாநிலச்சங்க நிர்வாகிகள் / கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநில மகிளா கமிட்டி உறுப்பினர்கள்.
அன்புத் தோழர்களே / தோழியர்களே !

கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவினை ஒட்டி
தமிழகம் தழுவிய அளவில் மூன்று கட்ட போராட்டம்

17.02.2015
மாநிலம் முழுதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்

24.02.2015
மாநில மற்றும் மண்டல அலுவலகங்கள் முன்பாக
தொடர் முழக்கப் போராட்டம்  

தொடர் முழக்க போராட்டத்தின் முடிவில் மூன்றாவது கட்ட போராட்டமாகிய வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும். பொதுப் பிரச்சினைகளுடன், அந்தந்த கோட்டங்களில் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும்  பிரச்சினைகளும் அன்றைய தேதியில் கோரிக்கை மனுவாகக் கொடுக்கப்பட்டு முறையான வேலை நிறுத்த நோட்டீஸ் மாநில மற்றும் அனைத்து மண்டல நிர்வாகத்திற்கும் வழங்கப்படும்.
கோரிக்கைகள்
மாநில அஞ்சல் நிர்வாகமே !
TARGET / TORTURE-

1. இலக்கு நிர்ணயம் என்ற பெயரில் சேமிப்பு கணக்குகள் , RPLI, EPOST அளித்திட அப்பாவி GDS
   ஊழியர்களை நிர்ப்பந்திக்காதே ! ஊதியத்தில் போலி POLICY போடச் சொல்லும் கோட்ட அதிகாரிகள்
   மற்றும் துணை அதிகாரிகள் மீது இலாக்கா ஒழுங்கு நடவடிக்கை எடு !

2. மனைவி, பெண், பிள்ளைகள் பெயரில் GDS ஊழியர்களை ரூ. 10/- RD கணக்குகள் நூற்றுக்கணக்கில்
   போட நிர்ப்பந்திக்காதே! FINANCE MINISTRY ஐ ஏமாற்றும் கோட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு
   நடவடிக்கை எடு !

3. அதிக பட்ச 5 மணி நேரம் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்ட அப்பாவி  GDS ஊழியர்களை 12  மணி
   நேரம் வேலை வாங்காதே !  ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் DRIVE என்ற பெயரில் GDS
   ஊழியர்களை வதைக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு !

4.  INDOOR ஊழியர்களான P.A.,  SPM,  APM  போன்ற வெளியில் செல்ல இயலாத ஊழியர்களுக்கு வணிகப்
   பணிகள் செய்திட, சிந்தனை சிறிதும் இன்றி, இலக்கு நிர்ணயம் செய்திடும் கொடுமையை நிறுத்து !
5.  புதிய சேமிப்பு கணக்குகள் FINACLE இல் OPEN செய்திட கால தாமதமாவதால்,, CBS அலுவலகங்களுக்கு
   சேமிப்பு கணக்குகள் துவங்கிடவும், இலக்கு நிர்ணயம் செய்து B.O.க்கள் மூலம் நூற்றுக் கணக்கில் புதிய
   கணக்குகளை அளிப்பதில் இருந்தும் விலக்கு அளி !

6.  IMO வை ஊழியர் பணத்தில் போடச் சொல்லி  IMO சேவையை கேவலப் படுத்தாதே ! ஊழியர்களை 
   கொடுமைப் படுத்தாதே ! IMO, MMT ஐ சரியான முறையில் விளம்பரப்படுத்தி  வியாபாரம் பெருக்கு !

CBS / CIS/ CSI பிரச்சினைகள்

1. CBS பிரச்சினைகளை முற்றிலுமாக களைந்து விடு ! CBS அலுவலகங்களில் BAND WIDTH அளவை
  உடனே உயர்த்து ! கணினிகளை CBS, CIS, CSI க்கு ஏற்றவாறு  WINDOWS 7,  SYMENTEC ANTIVIRUS
  LOAD செய்திடும் வகையில் 2 GB RAM அளவுக்கு உடனே உயர்த்து !

2. McCamish  இல் உள்ள குளறுபடிகளை தீர்க்காமல் கண்மூடித்தனமாக  FURTHER  MIGRATION  செய்வதை
  உடனே நிறுத்து ! பொது மக்களிடம் இலாக்கா நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதே !

3. PREMIUM COLLECTION  அனைத்தையும்  NIC DATA BASE  இல் UPDATE செய்திடாமல் Mc CAMISH  
  DATA BASE க்கு MIGRATION  செய்திடும் அரைகுறை வேலையை உடனே நிறுத்து ! SB பகுதியில்
  கோடிக்கணக்கில் MINUS BALANCE பிரச்சினை வந்து சீரழிந்தது போல INSURANCE பகுதியையும்
  சீரழிக்காதே ! பிரச்சினை வரும்போது  ஊழியர் தலையில் கை வைக்காதே !

4.அனைத்து  S.O.க்களுக்கும்  SCANNER SUPPLY செய்த பிறகே  MCCAMISH MIGRATION செய்யப்பட
  வேண்டும் ! SO வில் செய்யப்பட வேண்டிய  வேலைகளை  CPC யில் திணிக்காதே !

5..எட்டு மணி நேரத்திற்கு மேல் CPC இல்  ஆட்களை  வேலை  வாங்காதே !

6. Q STATUS POLICY எனப்படும் LOAN வழங்கப்பட்ட POLICY களை MCCAMISH SOFTWARE இல்
  MIGRATE செய்யப்பட முடியாமல் உள்ள அவல நிலையை போக்கு ! INFOSYS ஐ வேலை வாங்கு !
  INFOSYSக்கு  அடிமையாக ஆகாதே !

7.RPLI, PLI - CPC யில்  SHIFT முறையில்  பணியர்மர்த்தாதே ! ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !

8.DATA ENTRY, DATA TRANSFER வேலைகளுக்கு OUT SOURCING செய்திட இலாக்கா உத்திரவு இருந்தும்
 ஆட்பற்றாக்குறை காலத்தில்,,  இருக்கும் ஊழியரையே பணி செய்திட நிர்பந்திக்காதே ! INFOSYS
 வேலை வாங்கு !

GDS ஊழியர்களின் இதர பொதுப் பிரச்சினைகள்

1. முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டும் நீண்டகாலமாக PROVISIONAL APPOINTMENT இல் வைக்கப்பட்டிருக்கும்
   GDS ஊழியர்களுக்கு உடனடியாக  நிரந்தர  பணி ஆணை வழங்கி விடு ! அவர்களுக்கு அளிக்கவேண்டிய
   பணப்பயன்களை உடனே  வழங்கி விடு !

2. 1.4.2014  க்குப் பிறகு  பணியிலிருந்து ஒய்வு பெற்ற மற்றும் இறந்து போன GDS ஊழியர்களுக்கு
   வழங்க வேண்டிய பணி முறிவுத் தொகையை கால தாமதமின்றி உடனே வழங்கி விடு !

3. 2013 க்கு பிறகு ஓய்வுபெற்ற , பதவி உயர்வு பெற்ற,  இறந்து போன GDS ஊழியர்களுக்கு வழங்க
   வேண்டிய  குரூப்  இன்சூரன்ஸ் தொகையை  உடனே  வழங்கு !

4. GDS அலுவலகங்களுக்கு, சீராக பணி செய்திட வழங்க வேண்டிய அடிப்படை தேவையான RPLI RECEIPT
  BOOK மற்றும் B.O. JOURNAL, PAY IN SLIP, BO DAILY ACCOUNT, BO ACCOUNT உள்ளிட்ட FORMS களை
  உடனே  வழங்கி, அஞ்சல் துறையின் பெயரை  காப்பாற்று !  

5. RPLI கூட்டங்களுக்கு வரவில்லை என்று விளக்கம் கூடக் கேட்காமல் இலாக்கா விதிகளுக்கு மாறாக
  ஊதியப் பிடித்தம் செய்ய உத்திரவிடும் குட்டி அதிகாரிகள் மீது இலாக்கா ஒழுங்கு நடவடிக்கை எடு !

இலாக்கா ஊழியர்களின்  இதர  பொதுப் பிரச்சினைகள்

1. நீண்ட காலமாக அறிவிக்கப்படாமல் இருக்கும் DIRECT RECRUITMENT,LGO, RESIDUAL காலியிடங்களுக்கான
  எழுத்தர் தேர்வு முடிவுகளை உடனே அறிவி !  ஆட்பற்றாக்குறைக்கு  OUTSOURCING உடனே வழங்கு !

2. IRREGULAR ASSESSMENT OF  VACANCIES  காரணமாக எழுத்தரில் உள்ள  காலியிடங்களான SANCTIONED
  STRENGTH க்கும்  WORKING STRENGTH க்கும் உண்டான வித்தியாசத்தை உடனே நிரப்பு !

3. நீண்ட காலமாகத் தேங்கிக் கிடக்கும் LSG பதவி உயர்வினை இனியும் காலதாமதமின்றி உடனே வழங்கு !

4. நிர்வாகத்தின் தவறான முடிவினால் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு அவர்களுக்கு
  உண்டான காலத்தில் இருந்து NOTIONAL  அடிப்படையில்  LSG பதவி உயர்வு வழங்கு !

5. புதிய  HSG I  RECRUITMENT RULES அடிப்படையில் அனைத்து  HSG I மற்றும் HSG II காலியிடங்
  களையும் காலதாமதம் இன்றி உடனே  நிரப்பு !

6. CHAIN OF VACANCIES  முறையில் அனைத்து LSG, HSG II, HSG I, PM GRADE காலியிடங்களையும்
  எழுத்தர் காலியிடங்களாக  அறிவித்து  அவற்றை உடனே  நிரப்பு !

7. பழுதுபட்ட , காலாவதியான  கணினிகள் மற்றும் அதன் உபகரணங்களான PRINTER, UPS, BATTERY,
  SCANNER உள்ளிட்டவற்றை உடனே புதிதாகக மாற்று !

8. GENERATOR களை சீர்மை ! அல்லது புதிதாக வழங்கு !  FAKE CURRENCY DETECTOR களை அனைத்து
  அலுவலகங்களுக்கும் வழங்கு ! CASH COUNTING MACHINE களை வழங்கு ! பழுதடைந்தவைகளை
  சீரமை ! கட்டிடங்களை இடித்துக் கட்டாதே ! அடிப்படை கட்டுமானங்களை  உடனே  வழங்கு !

9. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சட்ட விதிகளை மீறி தென் மண்டலத்தில் எடுக்கப்பட்ட
   DIES NON, RULE 16 உள்ளிட்ட  பழி வாங்கும் நடவடிக்கைகளை உடனே ரத்து செய் !

10.ஆட்பற்றாக்குறை நேரத்தில் WCTC ஐ நிரப்புவதற்கென்றே TRAINING உத்திரவு போடாதே !
  கட்டுப்பாடில்லாமல்  மனம் போன போக்கில் TRAINING CENTRE திறக்காதே ! அனுப்பப்பட்ட பயிற்சிக்கே
  மீண்டும் மீண்டும் ஊழியர்களை திரும்பவும் அனுப்பாதே ! CBS MIGRATION நேரத்தில் தேவையில்லாத
  SANCHAY POST TRAINING க்கு  மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பாதே !

11. RULE 38 இட மாறுதல்களில் COMMUNAL VACANCY ஐ நிர்ப்பந்திக்காதே ! ANNUAL VACANCY இல்
   COMMUNAL RESERVATION ஐ சரி செய் !

12.ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் இலாக்கா உத்திரவுக்கெதிராக MEETING மற்றும் மேளாக்கள்
  போடும் அதிகாரிகள் மீதி ஒழுங்கு நடவடிக்கை  எடு !

 13. ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் மனித உரிமையை மீறி இடப்பட்ட துரித அஞ்சல்
   பட்டுவாடா பணியை  ரத்து செய் ! ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்காதே !

14. PLI, RPLI DECENTRALISE செய்த பிறகும் அடிப்படை சட்ட விதிகளை மீறி ஆண்டுக்கணக்கில் கோட்ட,
   மண்டல , மாநில அலுவலகங்களில் DEPUTATION இல் வைத்திருக்கும் ஊழியர்களை அவரவர்
   கோட்டங்களுக்கு  உடனே திருப்பி அனுப்பு !

15. CVC GUIDELINES ஐ மீறி SENSITIVE POST களான STAFF, STOCK, VIGILANCE உள்ளிட்ட இடங்களில்
   பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்களை உடனடியாக இடமாற்றம் செய்திடு ! விதி மீறும்
   கோட்ட அதிகாரிகள் மீது CENTRAL VIGILANCE COMMISSION இல்  புகார் செய்திட நிர்ப்பந்திக்காதே !

16. ஆட்பற்றக்குறையில் ஊழியர் அவதியுறும் போது அவர்களின் சிறு தவறுகளுக்கு கூட ஒழுங்கு
   நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்காதே ! அதையும் மீறி உயர் ஆதிகாரிகள் REVIEW என்ற
   பெயரில் கீழ் மட்ட ஊழியர்களின்  தண்டனைகளை அதிகப் படுத்தும் SADIST மனப்பான்மையை
   கைவிடு !



17. தானடித்த மூப்பாக சட்டங்களை மீறி இஷ்டத்திற்கு செயல்படும் திண்டுக்கல், தருமபுரி போன்ற
   கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு ! திண்டுக்கல் கோட்டத்தில் தன்னிச்சையாக அப்புறப்
   படுத்தப்பட்ட தொழிற் சங்க தகவல் பலகையை மீண்டும் அதே இடத்தில்  வைத்திட உத்திரவிடு !

18. ஊழல் செய்திடும் அதிகாரிகளுக்கு வெறும் இட மாற்றம் ! அப்பாவி ஊழியர்கள் மீது வெறும்
   மொட்டை கடிதம் வந்தாலே  RULE 14 தண்டனையா ? மாநில/ மண்டல நிர்வாகமே !ஊழலுக்கு
   துணை போகாதே ! இலாக்கா ஊழியர்களிடையே  பாரபட்சம் காட்டாதே !
,19.பொது மக்கள் உபயோகத்திற்கு ரூ.4/- ரூ.5/- தபால் தலைகள், ACKNOWLEDGEMENT CARD உள்ளிட்ட
   அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கு !
20.அடிப்படை தேவையான REPORT SHEET மற்றும் BARCODE STICKER களைக் கூட வழங்க இயலாத
   அக்கறையற்ற நிர்வாகப் போக்கினை நீக்கிட உடனடி நடவடிக்கை எடு !
21. இலாக்கா வழிகாட்டுதலை மீறி ஸ்டாம்ப் வெண்டர் பதவிகளை ஒழிக்காதே !

அன்பான கோட்ட / கிளைச் செயலர்களே ! மாநிலச் சங்க நிர்வாகிகளே ! தொழிற் சங்க முன்னோடிகளே !
எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிக்கப்பட்ட முதற்கட்டப் போராட்டத்தை  தொய்வின்றி முழு வீச்சுடன் ஒவ்வொரு  கோட்ட மற்றும் கிளைகள் அளவில் நடத்திட வேண்டுகிறோம். கோரிக்கைகளை விளக்கி அடிமட்ட ஊழியர்களுக்கு கொண்டு செல்லும் வண்ணம் எல்லா கோட்ட மற்றும் கிளைகளில் தனித்தனியே நோட்டீஸ்  பிரிண்ட் செய்து ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அளித்திட வேண்டுகிறோம். முதற்கட்ட ஆர்ப்பாட்ட முடிவில் அந்தந்த கோட்ட மற்றும் தலைமை அஞ்சலக அதிகாரிகள் மூலம் உங்களின் ஆர்பாட்ட நோட்டீஸ் நிர்வாகத்திற்கு அளித்திட வேண்டுகிறோம் !  அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு தவறுதல் இன்றி அனுப்பிட வேண்டுகிறோம் ! முதல் கட்ட போராட்ட முடிவில் கீழ்கண்ட கடிதத் தந்தியினை உங்கள் நோட்டீஸ் உடன்  இணைத்து, DESIGNATION STAMP இட்டு  உரிய கையெழுத்துடன்  CHIEF PMG க்கு அனுப்பி அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம். அப்போதுதான் உங்களின் எதிர்ப்பு, மாநிலம் முழுவதுமான எதிர்ப்பு  நிர்வாகத்தின் கவனத்திற்கு செல்லும் என்பதை  நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

இரண்டாவது கட்ட போராட்டத்தை அந்தந்த மண்டலங்களில் மாநிலச் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்று  பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை திரட்டி சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம். போராட்ட முடிவில் கோரிக்கை மனு மற்றும் வேலை நிறுத்த நோட்டீஸ் அந்தந்த மண்டல அதிகாரியிடம் அளித்திட வேண்டுகிறோம். கோரிக்கை மனு மற்றும் வேலை நிறுத்த நோட்டீஸ் இரண்டாவது கட்ட போராட்டத்திற்கு முன்னர் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

SAVINGRAM DT.17.02.2015
TO
THE CHIEF POSTMASTER GENERAL,  TAMILNADU CIRCLE, CHENNAI 600 002.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
STOP HARASSMENT OF OFFICIALS INCLUDING GDS IN THE NAME OF RPLI/ SAVINGS BANK/ EPOST/ IMO TARGETS AAA STOP UNMINDFUL MIGRATION OF CIS (Mc CAMISH) WITHOUT SETTLING THE BASIC PROBLEMS AAA DECLARE P.A. EXAM RESULTS IMMEDIATELY AAA GRANT LSG , HSG II  AND HSG I PROMOTIONS WITHOUT ANY DELAY AAA FILL UP ALL THE DIFFERENCE OF VACANCIES BETWEEN SANCTIONED AND WORKING STRENGTH IN P.A CADRE IN ALL THE DIVISIONS AAA FILL UP THE CHAIN OF VACANCIES IN P.A. CADRE ARISING OUT OF LSG, HSG II, HSG I AND PM GRADE POSTS AAA REPLACE OUTDATED COMPUTERS AND PERIPHERALS IMMEDIATELY AAA CANCEL TRADE UNION VICTIMISATION ULEASHED IN SOUTHERN REGION AAA SETTLE ALL OTHER DEMANDS PLACED IN THE STRUGGLE NOTICE AAA
                                                                                                                  = DIVISIONAL / BRANCH SECRETARY
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பரவட்டும் ! போராட்டத் தீ பரவட்டும் !            ஒழியட்டும் ! அதிகார ஆணவம் ஒழியட்டும் !
போராடுவோம் !                                                                வெற்றி பெறுவோம் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
J. இராமமூர்த்தி                                                                 R. தனராஜ்,  
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று                  மாநிலச் செயலர் , AIPEU GDS NFPE ,
தமிழ் மாநிலம்.

No comments:

Post a Comment