SETTLEMENT OF CASES ON CIRCLE UNION EFFORTS
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
1. கடந்த 04.02.2015 அன்று
என்ற தலைப்பில் மாநிலச் சங்கம் CPMG , TN அவர்களுக்கு எடுத்த பிரச்சினைக்கான கடித நகலை வெளியிட்டிருந்தோம். அதில்
"In an instant case at Erode Division, , the ASPOs., Erode South Sub Division has issued orders to withhold the TRCA to 25 GDS officials , those who are not attended the RPLI Mela, even without issuing any show cause notice to get their reply. He simply brushing aside the basic rules of the Department and throwing into Dustbin."
என்று CPMG அவர்களது கவனத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போது அந்த 25 தோழர்களுக்கும் எந்தவித காரணமும் காட்டாமல் அநீதியாக பிடிக்கப் பட்ட ஊதியம் , அதே போலவே எந்தவித காரணமும் சொல்லாமல் தற்போது வழங்கப்பட்டுவிட்டதாக ஈரோடு கோட்டச் செயலர் தோழர். சுவாமிநாதன் அவர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் CPMG அவர்களிடமிருந்து கண்டனத்துடன் கூடிய உரிய அறிவுறுத்தல் அளிக்கப்பட்டதால் , பிடிக்கப்பட்ட ஊதியம் உடனே எந்தவித காரணமும் கூறாமல் வழங்கப்பட்டுள்ளது . உடன் நடவடிக்கை எடுத்த CPMG அவர்களுக்கு நம் நன்றி !
2. மேலும், நம்முடைய அகில இந்திய பொதுச் செயலருக்கு கடந்த 03.02.2014 அன்று நம்முடைய மாநிலச் சங்கம் அளித்த கடித நகலை பிரசுரித்திருந் தோம்.அதில் ஏற்கனவே எடுக்கப்பட்டு தீர்க்கப்படாத பிரச்சினையாக
"Item no. 9 . Settle MACP related issues
In respect of officials, those who declined TBOP, BCR before introduction of MACP, were not granted with MACP . Case of Dharmapuri Division - pending for long , already discussed and case refd. to CHQ."
என்பதை அளித்திருந்தோம். நீதி மன்றத்தில் அந்த ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும் , அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு இலாக்கா உத்திரவு அனுப்பப்பட்டதாக நம்முடைய பொதுச் செயலர் நமக்கு தெரிவித்துள்ளார். அதனை தருமபுரி கோட்டச் செயலர் தோழர். பழனிமுத்துவும் நம்மிடம் தற்போது உறுதி செய்துள்ளார். நம் மாநிலச் சங்கம் அளித்த பிரச்சினையில் உரிய முறையில் செயல்பட்டு தீர்வு கண்ட நம்முடைய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கு நம் நன்றி. இந்தப் பிரச்சினை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வாகாமல் இருந்தது- தற்போது தீர்வு காணப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
FRIDAY, FEBRUARY 6, 2015
PRESENT POSITION OF OUR DEMANDS VIZ. RELEASING EXAM RESULTS AND RELEASING OF LSG PROMOTIONS
அன்புத் தோழர்களே ! வணக்கம் ! நேற்று புது டெல்லியில் நடைபெற்ற 40 அம்சக் கோரிக்கைகளின் மீதான, வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தையின் முக்கிய கோரிக்கைகளின் மீது தீர்வு ஏற்படாததால் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகளை தொடரவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக JCA அறிவித்துள்ளது . இது குறித்து நம்முடைய சம்மேளன மற்றும் மத்திய சங்க வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் சில கோரிக்கைகளில் , குறிப்பாக தமிழக அஞ்சல் மூன்று மூலம் நம்முடைய பொதுச் செயலருக்கு பேசிட கொண்டு செல்லப்பட்ட கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நம்முடைய பொதுச் செயலர் தெரிவித்துள்ளார். நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் மாநில நிர்வாகத்திடம் இது குறித்து இன்று தொடர்பு கொண்டு பேசினோம் . அதன் மீது தற்போதைய நிலையை கீழே உங்களுக்கு அளிக்கிறோம்.
1. 641 நேரடி எழுத்தர் மற்றும் 265 LGO TO P .A . மற்றும் 254 RESIDUAL VACANCIES தேர்வு முடிவுகள் :-
தேர்வு முடிவுகள் அனுப்பப் பட்ட 17 அஞ்சல் வட்டங்களில் 16 இல் முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் RESERVATION RELAXATION குறித்து சில விளக்கங்கள் கேட்டு DIRECTORATE க்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் பதில் வந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இலாக்கா முதல்வர், தேர்வு முடிவுகளை உடன் வெளியிட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.
நம்முடைய சங்கத்தின் மூலம் DTE இல் இன்று இது குறித்து DDG அளவில் பேசியதில், இன்று மாலையே உரிய விளக்கம் CPMG அவர்களுக்கு அனுப்பப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே எழுத்தர் தொடர்பான தேர்வு முடிவுகள் அனைத்தும் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் CPMG அவர்களிடம் திங்கள் அன்று இது குறித்து நிச்சயம் மீண்டும் வலியுறுத்துவோம்.
மேலும் எழுத்தர் நேரடி தேர்வில் கடந்த ஆண்டு 40 % பதவிகள் நிரப்பப் படாமல் போனது குறித்து நம்முடைய மாநிலச் சங்கத்தில் இருந்து முன்னாள் பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் மூலம் ஏற்கனவே DG அளவில் எடுத்துச் சென்று பேசியதும் கடிதம் அளித்ததும் உங்களுக்கு நினைவிருக்கும்.
அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ,தற்போது இந்த ஆண்டு அனைத்து காலியிடங்களும் விடுபடாமல் நிரப்பப்படும் என்றும் , FIRST LIST இல் எவரும் பணியில் சேரவில்லை என்றால் SURPLUS LIST மூலம் நிரப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் DDG உறுதியளித் துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு (2015) தேர்வு முறையில் தாமதம் தவிர்த்திட தேர்வுகள் BATCH அடிப்படையில் ONLINE இல் நடைபெறும் என்றும், ஒவ்வொரு BATCH களுக்கும் தனித்தனியே QUESTIONS அமைக்கப்படும் என்றும் COMPUTER ABILITY TEST தனியே நடத்தப்படாமல் சேர்த்தே நடத்தப்படும் என்றும் இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, அனைத்து BATCH தேர்வுகள் முடிந்தவுடன் , ONLINE என்பதால் உடனே அந்தந்த மாநிலங்களுக்கு தேர்வுமுடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. LSG பதவி உயர்வு தமிழகத்தில் அளிக்கப் படாதது குறித்து :-
ஏற்கனவே நமது CPMG அலுவலகத்தில் இருந்து, நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது பதவிகள் நிரப்பிடுவது குறித்தும் , DCCS அல்லது CONFIRMATION முறையில் எது APPLY செய்யப் படவேண்டும் என்பது குறித்தும் DTE க்கு விளக்கம் கேட்டு பலமுறை எழுதியும் பதில் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள். இதுகுறித்து DG அவர்களி டம் பேசியதில், உடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அடுத்த வாரத்தில் உரிய விளக்க ஆணை வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப் பட்டுள்ளது .
மேலும் அதற்குரிய SECTION OFFICER இடம் சென்றும் நம்முடைய பொதுச் செயலர் பேசி உடன் அந்தக் கோப்பினை உரிய அதிகாரிக்கு அனுப்பிட ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து நம்முடைய CPMG அலுவலகத்தில் நாம் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் " LSG LIST COMPILE செய்து READY யாக உள்ளதாகவும் , உரிய விளக்க ஆணை வந்த வாரத்திலேயே LSG LIST வெளியிடப்படும்" என்றும் உறுதி அளித்துள்ளார்கள். இது குறித்தும் திங்களன்று CPMG அவர்களிடம் மீண்டும் வலியுறுத்துவோம்.
மேலும் தற்போது வந்துள்ள புதிய விதிகளின்படி எதிர்வரும் 31.3.2016 வரையுள்ள FINANCIAL YEAR VACANCY எதிர்வரும் NOTIFICATION இல் சேர்க்கப்படவேண்டும் என்பதால் LSG பதவி உயர்வு மூலம் காலியாகும் அனைத்து எழுத்தர் பதவிகளும் இந்த ஆண்டு காலி இட அறிவிப்பில் சேர்த்திட நிச்சயம் மாநிலச் சங்கம் முயற்சி எடுக்கும் என்றும் அதில் வெற்றியும் பெறும் என்பதையும் உங்களுக்கு அறிவிக் கிறோம். இதன் மூலம் மாநில அளவில் SHORTAGE பிரச்சினை வெகுவாக தீர்க்கப்படும்.
இந்த செய்திகளுக்கும் நம்முடைய போராட்ட அறிவிப்புகளுக்கும் தொடர்பு கிடையாது. மாநிலச் சங்கத்தின் தொடர் செயல்பாடுகள் மற்றும் அதன் பலனாக கிடைக்கும் முன்னேற்றங்கள் குறித்த செய்தியே இது.
வேலை நிறுத்தம் உள்ளிட்ட மூன்று கட்ட போராட்ட அறிவிப்பு தலைவர் களின் ஆலோசனையையும் மற்றைய மாநிலச் செயலர்களுடன் கலந்துகொண்டதன் பேரிலும் திங்களன்று வெளியிட முடிவெடுக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment