Running News

Wednesday 25 March 2015

26.03.2015 வேலை நிறுத்தம் வெல்லட்டும் !!!

NFPE                                                               

தோழர்களே!
இன்று 25.03.2015 மதியம் 11.30 மணியளவில் லேபர் கமிசனுடன் 9 NFPE சங்கங்களின் செயலாளர்களும், நிர்வாக தரப்பில் அதிகாரிகளும் பேச்சு 
வார்த்தை நடத்துகின்றனர். 

லேபர் கமிசன், "நமது சங்கங்களுடன் அஞ்சல் நிர்வாகம் 24.03.2015 க்குள் 
பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்" என்று  சொன்ன பரிந்துரையை நமது 
மாநில அஞ்சல் நிர்வாகம் நிராகரித்துள்ளது. 

ஆகவே தோழர்களே!
வேலைநிறுத்த ஆயத்த பணிகளை விரைந்து செய்வோம். 
"ஆணவம் கொண்ட அதிகார வர்க்கம் தனது குணத்தை வெளிப்படுத்தும் 
பொழுது" அதைவிட சக்திகொண்ட "தொழிலாளிவர்க்கம்" ஆகிய நாம் நமது 
பலத்தை வெளிப்படுத்தும் நாள் 26.03.2015.

அஞ்சல் ஊழியனே புறப்படு!!!
வேலைநிறுத்த போர் நோக்கி !!!

26.03.2015 வேலை நிறுத்தம் வெல்லட்டும் !!!

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!!!
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!!!

A.பழனிசாமி P3                                            S. குமரன்P4




No comments:

Post a Comment