Running News

Monday, 2 March 2015

அடக்குமுறை வென்றதாக வரலாறு உலகில் இல்லை !

அடக்குமுறை வென்றதாக
வரலாறு உலகில் இல்லை !
ஆணவங்கள் வென்றதாக
வரலாறு இல்லவே இல்லை !
உழைக்கும் சக்தியின் முன்னே ,
அவர்களின் உரிமைக் குரல்களின் முன்னே
சமஸ்தானங்கள்
சரிந்ததாகவே வரலாறு !
கிளர்ந்தெழுவோம் !
அடிமை விலங்கொடிப்போம் !
புதிய வரலாறு படைப்போம் !
கரூர் அஞ்சல் கோட்ட அதிகாரிகள் செய்வது அதிகார அத்து மீறலா அல்லது அதிகார துஷ்பிரயோகமா?
ஊழியர்கள் திறம்பட நியாயமாக நேர்மையாக பணியாற்றுமாறு செய்வதுதான் அதிகாரிகளின் வேலை.
ஆனால்....
கரூர் அஞ்சல் கோட்டத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.
அதாவது....
அதிகாரிகள் திறம்பட நியாயமாக நேர்மையாக பணியாற்றுமாறு செய்வதுதான்  கோட்ட ஊழியர்களின் சவாலாக உள்ளது.
இதை மனசாட்சி உள்ள கோட்ட ஊழியர்  எவரும் மறுக்க மாட்டார்கள்.
ஊழியர்களின் நியாய குரல் , அபத்த நிர்வாகம் செய்யும் அதிகாரிகளின் செவிப்பறைக்குள் சென்று ஓங்கி அறையட்டும்.
அராஜக அதிகார துஷ்பிரயோக அதிகாரிகள் உடனேதிருந்தட்டும்.
அல்லது
பணியிட மாறுதல் பெற்று  கரூர் அஞ்சல் கோட்டத்தை விட்டு பின்னங்கால்கள் பிடரியில் அடிக்க தலைதெறிக்க ஓடட்டும்.
அதுவரை...
கரூர் அஞ்சல் கோட்ட ஊழியர்களின் தொடர் அறவழிப் போராட்டம்  தொடரட்டும்.
இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்?

இவண்,
பழனிசாமி P 3
கரூர்.

No comments:

Post a Comment