Running News

Thursday, 8 October 2015

D.A. ORDERS TO GDS RELEASED BY CHIEF PMG, TN

D.A. ORDERS TO GDS RELEASED BY CHIEF PMG, TN


MEETING WITH THE PMG , CCR BY THIS DAY ON CBS RELATED ISSUES



சென்னை பெருநகர மண்டல PMG அவர்களுடன் சந்திப்பு !

இன்று (08.10.2015) மாலை  CHIEF  PMG அவர்களை சந்தித்து  CBS  பிரச்சினை கள் , திண்டுக்கல் கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளரின்  சட்ட விரோத,  ஊழியர் விரோத நடவடிக்கைகள்  மற்றும்  கோவை கோட்டத்தில் இருந்து மீண்டும் மண்டல அலுவலகத்திற்கு, ஏற்கனவே   திருப்ப அனுப்பப்பட்ட ஊழியர்களையே,  DEPUTATION இல்  அழைத்துக் கொள்ள இடப்பட்ட உத்திரவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மாநிலச் சங்கம் சார்பில் பேசிட சென்றோம்.  

நாளை நடைபெற உள்ள WORLD POST DAY க்கான அதிகாரிகள் கலந்தாய்வு மற்றும்  முக்கிய பணிகளில் அவர் இருந்த காரணத்தால் நாளை (09.10.2015) மாலை சந்திக்க நேரம் அளித்துள்ளார். இதன் காரணமாக நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் இந்த பிரச்சினைகள் தொடர்பான கடிதங்களை அவரிடம்   இன்று நாம் அளித்துள்ளோம். இதன் மீது நாளை  நடைபெறும்  சந்திப்பில் பேசிட உள்ளோம். கடிதங்களின் நகல்களை  கீழே  பார்க்கவும்.

இதனிடையே , சென்னை பெருநகர மண்டல PMG அவர்களை அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநிலத் தலைவர் தோழர். P . மோகன் மற்றும் மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி ஆகியோர்   சந்தித்து பேசினோம். அப்போது, நாம் ஏற்கனவே அளித்த கடிதங்களின் அடிப்படையில் CBS  பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 

நாம் PMG, CCR அவர்களிடம்  கடந்த 16.09.2015 இல் அளித்த கடிதத்தின் அடிப்படையில் , இரவு 07.00 மணிக்குள் EOD  கொடுக்க இயலவில்லை எனில்,  SPOC  மற்றும் CPC க்கு MAIL  மூலம் தகவல் தெரிவித்துவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு செல்லலாம் என்றும் மறுநாள் காலை  பணி துவக்குவதற்கு முன்னர்  EOD   கொடுக்கலாம் என்றும்  தான் உத்திரவு அளித்துள்ளதாகவும் , மற்றைய மண்டலங்களிலும்  இதுபோல  செய்திட CHIEF PMG அவர்கள் கூறியுள்ளதாகவும்  தெரிவித்தார்.  ஆனால் இது கீழ்மட்டம் வரை செல்லவில்லை என்றும் சென்னை நகர்ப் பகுதி தவிர, இதர பகுதிகளில் ஊழியர்கள் இன்றுவரை அவதியுறுவதாகவும் நாம் தெரிவித்தோம்.  

இது குறித்து CPMG  அவர்களிடம்  தானே  பேசுவதாகவும்  நிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் நம்மிடம் உறுதி அளித்தார். நம் கடிதத்தில்  கண்டுள்ள இதர CBS  பிரச்சினைகள் குறித்தும்  நாம் அவரிடம் விளக்கமாக விவாதித்தோம். 

இந்த  பிரச்சினைகள் குறித்தும் தமிழ் நாடு முழுமைக்கும் ஒரே அளவிலான  நிலைப்பாடு எடுக்க  CHIEF  அவர்களிடம் தானே பேசுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.  சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. நாளை நடைபெற உள்ள சந்திப்பில் CBS பிரச்சினையில்  நிச்சயம் ஒரே நிலையான முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்.

No comments:

Post a Comment