Running News

Sunday, 10 January 2016

அன்புள்ள கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு , வணக்கம்.

அன்புள்ள கோட்ட/ கிளைச் 
செயலர்களுக்கு , வணக்கம். 

நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான  மாநில நிர்வாகத்துடனான பேட்டியின் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கை குறிப்பு (MINUTES ) கீழே அளிக்கப்பட்டுள்ளது. 

இதில்  சுட்டிக் காட்டப்பட்டுள்ள  மூன்றாவது பிரச்சினையில் , பல  கோட்ட கண்காணிப்பாளர்கள் தங்கள் அலுவலகங்களில்  நீண்டகாலமாக  பல உள் காரணங்களுக்காக (?) சில  ஊழியர்களை நீண்டகாலம் தங்கள் அலுவலகத்தி லேயே  இருத்தி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் BRANCH மாற்றப்பட்டுள்ளதாகவும்,  அல்லது இடையில்  வெளியே  போய் (பொய்) வந்ததாகவும் பல காரணங்களை   தெரிவித்து , அந்த நபர்கள்  TENURE முடிக்காதது போல பதில் அனுப்பியுள்ளனர். இதில் பல கோட்டக் கண்காணிபாளர்கள் மேல்   லஞ்ச  ஊழல் புகாரும்   எழுந்துள்ளது. இது குறித்து மத்திய  புலனாய்வுத்  துறைக்கு  உரிய  புகார்  நம்  அகில இந்திய சங்கத்தின் மூலம் புது டெல்லியில் நேரிடையாக  கொடுக்க உள்ளோம்.

ஆக PMG  மற்றும் CHIEF  PMG க்களுக்கான TENURE நீட்டிப்பு ( 5 மற்றும்  6 ஆண்டுகள் )  அதிகாரத்தையும் அவர்களே தங்கள் கையில்  எடுத்துக் கொண்டு செயல்பட்டுள்ளனர்; ஊழல்  புரிந்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. நமக்கு  எந்த  தனிப்பட்ட ஊழியர் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. 

நாம் பொதுவாக  தமிழகத்தில் உள்ள எல்லா கோட்டங்களிலும்  விதி மீறி நீண்டகாலம்  ஒரே இடத்தில்  உள்ள ஊழியர் குறித்துதான் புகார் செய்துள்ளோம். இதில்  சங்கப் பாகுபாடு  இல்லை. 

இதில்  CPMG  அவர்களின் பதிலை நன்கு  பார்க்கவும்.  அதனடிப்படையில் உங்கள் கோட்டங்களில் விதி மீறி OVER  TENURE  அல்லது  SENSITIVE  POST இல் அதிக காலம் உள்ள ஊழியரின்  பெயரை , அவர்   பணியாற்றிய  கால அளவை சரியாக குறிப்பிட்டு மாநிலச் சங்க  ஈமெயில்  முகவரிக்கு  உடன் அனுப்பிட வேண்டுகிறோம். 

உரிய  ஆவணங்கள் இருந்தால் அவற்றினையும் SCAN செய்து அனுப்பிட வேண்டுகிறோம். குறிப்பாக தருமபுரி, சேலம் மேற்கு, தாம்பரம், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை,  அரக்கோணம், தூத்துக்குடி  கரூர்  கோட்டச் செயலர்கள் உடன் செயல்பட வேண்டுகிறோம். உங்கள் பதிலை உடன் எதிர்பார்க்கிறோம். நன்றி. கோட்டச் செயலர்கள் உடன் செயல்பட வேண்டுகிறோம். உங்கள் பதிலை உடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.  

No comments:

Post a Comment