சட்டம் ஒன்றுதான்!. ஆனால், விளக்கம்.... உங்கள் சிந்தனைக்கு!
”ஆளை சொல்லு, ரூல சொல்லுகிறேன்” என்பார்கள். ”சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் விளக்கு”என்பது போல ஓவ்வொரு இடத்திலும், ஓவ்வொரு ஆளுக்கும் ஏற்றார் போல சட்டம் கடைபிடிக்கப் படுகிறது.
ஆம். ஆட்களுக்கு ஏற்றார் போல, இடத்திற்கு தகுந்தார் போல சட்டம் மாறும். வளைக்கப்படும். ஏற்கனவே TRCAபற்றி குறிப்பிட்டு இருந்தோம். ஒரே கோட்டத்திற்குள்,இரண்டு வித TRCA–கள்( எது MINIMUM TRCA?) பதிலிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டு இருந்தன. MIS INCENTIVEவழங்குதிலும் மாறுபட்ட கருத்துக்கள். ஒரு மாதத்திற்கு MAXIMUM 500 ரூபாய் என்பது தான் சட்டம்.
5000க்கு மேல் ACCOUNTS உள்ள மூன்று தலைமை அஞ்சலகங்களில் MAXIMUM INCENTIVE Rs.500 என்பது மூன்றுவிதமாக அர்த்தம் எடுத்துக் கொண்டு வழங்கப்பட்டு வந்தது. மூன்றிலுமே மூன்று COUNTER–கள்தான். முதல் HO–ல் ஒரு அலுவலகத்திற்கு 500 என்ற அடிப்படையில் ரூ500மட்டுமே கொடுக்கப்பட்டது. இரண்டாவது HO–ல் ஒரு COUNTER–க்கு 500 என்ற அடிப்படையில் 3 COUNTER–க்கு ரூ1500கொடுக்கப்பட்டது. மூன்றாவது HO–ல் ஒரு ஆளுக்கு 500 என்ற அடிப்படையில், மூன்று பேரின் CL/EL இடங்களில் வேலை பார்ப்பவருக்கும் 500 என எல்லா ACCOUNT-களுக்கும் INCENTIVEபெறப்பட்டது. ஒரே சட்டம்தான். ஆனால்…………….
பழைய கதை இப்போது எதற்கு என்கிறீர்களா?. கீழ்கண்ட உத்திரவை பார்த்தவுடன் இவையெல்லாம்ஞாபகத்திற்கு வந்தது. ”GDSபதிலிகளுக்கு, அவர்கள் தொடர்ச்சியாக 6 நாட்கள்பணியாற்றினால், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் --ஆந்திரா மாநில விளக்க ஆணை.” ஊதியம் கொடுக்கப்பட்டு கொண்டு இருந்த தமிழகத்தில், திடீரென்று, ‘சட்டத்தில் இடம் இல்லை’ என நிறுத்தப்படுகிறது. ஆனால்,ஆந்திராவில், சட்டத்தில் அப்படி எதுவும் சொல்லபடவில்லை. எனவே, ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என உத்திரவு வெளியிடப்பட்டு உள்ளது. ஒரே சட்டம்தான். ஆனால்...............
“உண்டென்றால் அது உண்டு.இல்லையென்றால் அது இல்லை.”. இந்த அவலத்தை,அதிசயத்தை அல்லது கொடுமையை யாரிடம் போய் சொல்ல? எங்கு போய் முறையிட?.
நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. சட்டத்திற்கு எந்த பாகுபாடும் கிடையாதாம். ஏழை-பணக்காரன், நல்லவன் – கெட்டவன், புத்திசாலி – முட்டாள், அதிகாரத்தில் இல்லாதவர்கள் – இருப்பவர்கள்………இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஆனால்,..............
கேட்ட பொழுதெல்லாம், கேட்ட நாட்களுக்கு சிலருக்கு லீவு கிடைத்துவிடுகிறது/கொடுக்கப்படுகிறது. ஆனால், எப்பொழுதாவது கேட்கும் சிலருக்கு, SHORTAGE OF STAFF என சொல்லி லீவு மறுக்கப்படுகிறது/குறைக்கப்படுகிறது. UNIFORM ஏன் போடவில்லை? என விரட்டப்படுகிறார்கள். ஆனால், UNIFORM என்ற ஓன்று SUPPLY-யே செய்யப்படவில்லை/செய்யப்படுதில்லை. மேலிடத்து உத்திரவை உடனடியாக அமுல்படுத்தாவிட்டால், உங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என மிரட்டப்படுகிறார்கள். ஆனால், DG-ன் உத்திரவை (குறைக்கபட்ட பணி நேரம்) இவர்கள் இன்னமும் அமுல்படுத்தவில்லை/அமுல்படுத்த மறுக்கிறார்கள். ஒரே சட்டம்தான். ஆனால்...............
EPOST எதற்காக, யாருக்காக ஆரம்பிக்கப் பட்டது என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். (ஆம். IT IS A BRIDGE TO CONNECT THE THOSE WHO HAVE AND those who DON’T HAVE).ஆனால், அது யாருக்கு அனுப்பபடுகிறது, யாரிடம் இருந்து பணம் பெறப்படுகிறது(பிடுங்கபடுகிறது) என்பதும் உங்களுக்கு தெரியும்!. ("யார் வீட்டு குப்பை தொட்டிக்கோ போக போவதற்கு, என்னிடம் பணம் கேட்பது நியாயமா?" என ஒருவர் கேட்டதை அதிகாரிகளிடம் சொல்லமுடியுமா?. அல்லது அவருடைய இந்த கேள்விக்கு சரியான பதிலைத்தான் சொல்லிவிட முடியுமா?). இலாகா என்ன சொல்கிறதோ அதை செய்வது நம்முடைய கடமைதான். ஆனால், நம்மிடம் கேள்வி கேட்பவர்களுக்கும் தகுந்த பதில் சொல்வதும் நம்முடைய கடமை அல்லவா?. ஒருவர்க்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்ய வற்புறுத்துவதும் வன்முறைதானே!
இப்படி எத்தனையோ விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. “இதுதான் உலகமா?”, ”முரண்பாடுகள்”, ”விடை தெரியாத விசித்திரங்கள்”, ”விதிகளும் இறைவனும்”, ”தண்டனைகள்” என எத்தனையோ தலைப்புகளில், விதவிதமாக கேள்விகள் எழுப்பபட்டு,பிரச்சனைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஆனால்,கேள்விகளுக்கு பதிலோ, பிரச்சனைகளுக்கு தீர்வோ இன்றுவரை கிடைத்த பாடில்லை. கேள்விகளுக்கானபதிலும், பிரச்சனைகளுக்கு தீர்வும் என்னவென்று நமக்கும் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!..........
பதிவு செய்வது.............................நம் வேலை. மற்றபடி, சிந்திப்பது........................................பொறுப்புதானே!. நமக்கு தெரிந்ததெல்லாம் பாடல் மட்டும்தானே! எனவே வழக்கம்போல் பாடலோடு முடித்து கொள்வோம். ”ஈருயிர் என்றும் ஓருடல் தன்னில் இருந்திட வழியுண்டோ?. ஒரு முகத்திற்கு இரண்டு விழிகளை வைத்த இயற்கையில் தவறு உண்டோ?. சிலர் கேள்விக்கு பதில் ஏது?. சிலர் வாழ்வுக்கு பொருள் ஏது? அது உறவின் மாறாட்டம்.இது…………………………………?”
பின்குறிப்பு: குறை சொல்வதும், குற்றம் காண்பதும் நம் நோக்கம் அல்ல. பதிவு செய்வது மட்டும்தான்என பல முறை சொன்னாலும், அதில் குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது நாம் குறைகளை மட்டுமே (தீர்வுகளை சொல்லாமல்) சொல்வதாக சொல்பவர்களும் இருக்கிறார்கள். எல்லா நேரத்திலும், எல்லோரிடிமும் ஒரே மாதிரி நடந்து கொள்வது சாத்தியமா?. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்கின்றனவா? என கேட்கிறார்கள். இல்லைதான். ஆனால், விரல்களின் நீளத்தில் அதிக வேறுபாடில்லை. அப்படி அதிக வேறுபாடு இருந்தால் அவைகளை இயக்குவது கஷ்டமாகிவிடும். இதைத்தான் நாம் சொல்கிறோம்.எனவே பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்வது கஷ்டம் என்றாலும், அதிக வேறுபாடு இன்றிநிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நம் வேண்டுகோள்.
IPO VACANCY...
OCTOBER 22, 23 தேதிகளில் நடைபெற உள்ள IPO தேர்வுக்கு 6 இடங்கள் உள்ளன.
Vacancy Position for the LDCE for Promotion to Inspector Posts Cadre for the year 2015-16
in Tamilnadu Circle
The above vacancy has been circulated by Circle Office Letter No. REP/9-2/15 dated 15-09-2016.
Vacancy Position for the LDCE for Promotion to Inspector Posts Cadre for the year 2015-16
in Tamilnadu Circle
UR
|
SC
|
ST
|
Total
|
6
|
0
|
0
|
6
|
The above vacancy has been circulated by Circle Office Letter No. REP/9-2/15 dated 15-09-2016.
No comments:
Post a Comment