Running News

Thursday 1 September 2016

GOVT. understands struggle and strike only.

BE PREPARE AND BE READY.......

     போராட்டம் தொடரும் என்றும், அனைத்து ஊழியர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என மாநில சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 
GOVT. understands struggle and  strike only.

தானாக  வருவதல்ல வெற்றிகள் !

நம் போராட்டத்தின் பலனே  வெற்றிகள் !

செப்டம்பர்  2, வேலை நிறுத்தம் இந்திய நாட்டின் மிகப்பெரும்  11மையத் தொழிற்சங்கங்களான  INTUC , AITUC , HMS, CITU, LPFஉள்ளிட்ட தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டு  நடத்தப்படும் வேலை நிறுத்தம் ஆகும். 

    இதில் ரயில்வே பாதுகாப்புத் துறை தவிர்த்து அனைத்து மத்திய அரசு மாநில அரசுபொதுத்துறை  மற்றும் அமைப்பு சாரா  தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தனியார் மயம்மத்திய அரசுமாநில அரசு மற்றும் பொதுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது,தொழிலாளர் நலச்  சட்டங்கள் திருத்தப்படுவது  இவற்றிற்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் ஆகும். 

   இந்தப் போராட்டம் என்பது ஆண்டுக்கு  ஆண்டு அரசின் கொள்கைகளுக்கு எதிராக வலுப்பெற்று வருகிறது. கடந்த ஆண்டு சுமார் 15 கோடி உழைக்கும் வர்க்கம் கலந்துகொண்ட  வேலை நிறுத்தம் இந்த ஆண்டு  மேலும் வலுப்பெற்று 20 கோடி தொழிலாளர்கள் பங்கு பெரும் வேலை நிறுத்தமாக உருவெடுத்து வருகிறது. 

    இதனால் மத்திய அரசு ஊழியர்களை திருப்திப் படுத்திட ,மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில்  DCRG  வழங்கப்படும் என்ற முடிவையும் போனஸ் உச்சவரம்பு உயர்த்தி வழங்கப்படும் என்ற முடிவையும் அதிரடியாக  அறிவித்துள்ளது. 

  இது நமது போராட்ட அறிவிப்பிற்கு, மற்றும்  போராட்ட தயாரிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். அனைத்து தொழிலாளர்களுடன் இணைந்து   செப். 2, 2016 வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் எடுத்த முடிவுக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே இந்த வெற்றிச் செய்தியை ஊழியர்களுக்கு சரியாக எடுத்துச் செல்லுங்கள். செப். 2, 2016வேலை நிறுத்தத்தை மேலும் வலிமைப்படுத்தி வெற்றிகரமாக ஆக்குங்கள் !

போராடாமல்  பெற்றதில்லை !     போராடி நாம்  தோற்றதில்லை !
ஒன்றுபட்ட போராட்டம் !                ஒன்றே நம்  துயரோட்டும் !

உங்கள் கவனத்திற்கு.....


       நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது போல CBS-ல் தினம் ஒரு உத்திரவுகள், திருத்தங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அது போல வேலை நிறுத்தத்தை செயல் இழக்க செய்ய வேண்டும் என்று தினம் ஒரு உத்திரவு வந்து கொண்டு இருக்கிறது.  NPS SUBSCRIBER-களுக்கும் GRATUITY  உண்டு. BONUS ARREARS வர போகிறது. வேலை நேர மாற்றம்  என பல புதிய உதிரவுகள் வந்துள்ளன. இருந்தாலும் 2ம் தேதி வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும். FNPO சங்கமும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது.  எனவே வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

  நேற்று புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள மத்தியஅரசு ஊழியர்களுக்கு கிராஜூட்டி பொருந்தும் என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த உத்தரவு!

                        இன்று    போனஸ்  உச்சவரம்பு ரூபாய் 3500 யில் இருந்து 7000ஆக உயருகிறது .இது கடந்த நிதியாண்டு 2014--2015 யில் இருந்து உயர்த்தப்படுகிறது என உத்திரவு வந்துள்ளது. 

   சனிக்கிழமை வேலை நேர மாற்றம் பற்றி மாநில சங்கம் தகவல் அளித்துள்ளது. மதியம் 1 மணியுடன் FINANCIAL TRANSACTION-ஐ முடித்துக் கொள்ளலாம். 

    "காலதாமதமானாலும் இறுதியில் உத்திரவினை  அளித்திட்ட  CPMGஅவர்களுக்கும்  நம் நன்றியினை  தெரிவித்துக் கொள்கிறோம் .  நாம் அதிக நேரம்  வேலை செய்திட  தயார் தான் . இலாகாவின் உயர்வுக்கு உழைத்திட நாம் தயார்தான். ஆனால் அதே நேரம் கொத்தடிமையாக அல்ல.  உரிய உரிமைகள்  மறுக்கப்படக் கூடாது.  BUSINESS HOURS மாற்றினால்  BUSINESSபாதிக்கும் என்று  நிர்வாகம் நினைப்பதில் தவறில்லை. ஆனால்  அதே  நேரம்  BANKING ENVIRONMENT  வேண்டும் என்று நினைக்கும்போதே ,  BANKING  பகுதியில்ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள  சலுகையும் அஞ்சல் பகுதியில்  விஸ்தரிக்கப்பட வேண்டும்என்று நினைத்தால்  அனைவருக்கும்  நலம்பயக்கும் அல்லாவா?" 

No comments:

Post a Comment