Running News

Friday, 23 September 2016

MINUTES OF THE MEETING WITH THE STAFF SIDE DT 20.9.2016 BY THE CPMG,TN ON CADRE RESTRUCTURING - MANY THINGS INROADED ON THIS ISSUE IN TN CIRCLE - THIS IS FIRST STEP - AWAIT FOR FURTHER STEPS

MINUTES OF THE MEETING WITH THE STAFF SIDE DT 20.9.2016 BY THE CPMG,TN ON CADRE RESTRUCTURING - MANY THINGS INROADED ON THIS ISSUE IN TN CIRCLE -  THIS IS  FIRST STEP - AWAIT FOR FURTHER STEPS


கடந்த 20.9.2016 அன்று ஊழியர் தரப்புடன்  நடைபெற்ற கேடர்  சீரமைப்பு குறித்த ஆலோசனைக்கு கூட்டத்தின்  அதிகார பூர்வ  பதிவு  ( MINUTES) தற்போது  CPMG அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது. இதில் பல பிரச்சினைகள் பேசப்பட்டாலும் , சில முக்கிய பிரச்சினைகளுக்கு நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் ஆலோசனை தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது .

 

குறிப்பாக  ACCOUNTANT, SYSTEM ADMINISTRATOR , CPC , BPC, ANNA  ROAD,  CHENNAI GPO, FOREIGN  POST பகுதிகளில்  LSG  பதவிகள்  அளிப்பது   குறித்த  ஆலோசனை  ஏற்கப்பட  உள்ளது .  இது  நிச்சயம்  ஒரு பெரிய  முன்னேற்றமாகும் .  SYSTEM ADMINISTRATOR  பதவிகளில்  பதவி உயர்வு வாய்ப்பு என்பது இதுவரை எந்த  அஞ்சல் வட்டத்திலும் ஏற்கப்படவில்லை. இது  CPMG  அவர்களால் ஏற்கப்பட்டால் , நம்முடைய காலத்தில் இந்த  மாநிலச்  சங்கம்  பெற்ற  மிகப்பெரிய  வெற்றி ஆகும் இது .

. விமரிசனம்  செய்வோர் , விமரிசித்துக்கொண்டே  இருக்க ,  சத்தமே இல்லாமல்  நாம்  பல  வெற்றிகளை  ஈட்ட முடியும். ஏனெனில்  இவை  விளம்பரத்துக்கான  வெற்றிகள்  அல்ல .  ஊழியர்  நலன்  சார்ந்த  வெற்றிகளாகும்.  எவர்  காலத்தில்  செய்தார்  என்பதை  விட  என்ன  நம்மால் செய்ய முடியும் என்று நாம்  அனைவரும் கூட்டாக சேர்ந்து  சிந்தித்து  பெறுவதே  முழுமையான  முன்னேற்றமாக  இருக்கமுடியும் என்பதில்  மாநிலச்  சங்கம்  முழுமையான  நம்பிக்கை  கொண்டுள்ளது. அதன்   வழியே சிந்தித்ததால் தான்   இது குறித்து  செழுமையான  கருத்துருவாக்கம்  பெற  கோட்ட / கிளைச்  செயலர்கள் கூட்டத்தை  இந்த மாநிலச்  சங்கம்  கூட்டியுள்ளது.

MINUTES  எப்படி இருந்தாலும்  இது முழுமையானதோ  அல்லது முடிவானதோ  அல்ல  .  இது  நல்ல  ஆலோசனை  வேண்டிய ஒரு தொடக்கமே . மீண்டும்  பல்வேறு தீர்க்கப்படாத  கோணங்களில் இந்தப் பிரச்சினை  குறித்து  ஊழியர்  தரப்பு  ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று CPMG  அவர்கள் உறுதி  அளித்து அதற்கான அவகாசமும் அளித்துள்ளார்.   அவருக்கு நம்முடைய பாராட்டுக்கள் .நிச்சயமாக  நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச்   சங்கம், தெளிவான  முடிவுகளை   தெரிவிக்கும். தற்போது MINUTES நகலை கீழே பார்க்கவும். 




No comments:

Post a Comment