Running News

Wednesday, 4 November 2015

STRIKE NOTICE WILL BE SERVED TO THE SECRETARY DEPARTMENT OF POSTS ON 06.11.2015 AND IN ALL PLACES

STRIKE NOTICE WILL BE SERVED TO THE SECRETARY DEPARTMENT OF POSTS ON 06.11.2015 AND IN ALL PLACES

நம்முடைய  NFPE  சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2, 2015  இரண்டு நாட்களிலும்  48 மணிநேர   வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக  நடத்திடுவோம். 

வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ் எதிர்வரும் 06.11.2015 அன்று டெல்லி  DAK  BHAWAN  முன்பாக மிகப்பெரும்  கண்டன  ஆர்ப்பாட்டத்துடன் , இலாக்கா  முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. 

இதேபோல , தமிழகத்தில் CPMG  அலுவலகம் முன்பாக எதிர்வரும் 06.11.2015 அன்று  ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்பாட்டம் நம்முடைய NFPE  இயக்கத்தின் 9 சங்கங்கள் சார்பாக  தமிழ் மாநில இணைப்புக் குழு மூலம் நடத்தப்பட்டு அதன் முடிவில்  வேலை நிறுத்தத்திற்கான சட்ட பூர்வமான நோட்டீஸ் அனைத்து மாநிலச் செயலர்கள்  கையெழுத்திட்டு  CPMG  அவர்களிடம் வழங்கப்படும். இதற்கான  விரிவான சுற்றறிக்கை   NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பாக  வெளியிடப்படும்.

எனவே  தமிழகத்தின்  அனைத்துக் கோட்டங்களிலும்  இதேபோல எதிர்வரும்  06.11.2015 அன்று NFPE  இன் அனைத்து  உறுப்பு  சங்கங்களும் ஒன்று சேர்ந்து அந்தந்த பகுதி  கோட்ட  அலுவலக/ தலைமை  அஞ்சலக வாயிலில்  கண்டன ஆர்பாட்டம் நடத்தி  கீழே  அளிக்கப் பட்டுள்ள   வேலைநிறுத்த நோட்டீஸ்  நகல் மற்றும் கோரிக்கைகளை  இணைத்து அனைத்து  கோட்ட  கண்காணிப்பாளர்களிடமும்  வழங்கிட வேண்டுகிறோம்.  வேலை நிறுத்தத்திற்கான  ஆயத்தப் பணிகளை  இன்றே தொடங்கிட வேண்டுகிறோம்.

 வெல்லட்டும் !  வெல்லட்டும்   வேலை நிறுத்தம்  வெல்லட்டும் !

No comments:

Post a Comment